பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்15

     (இ -ள்.) செவ் இரவி - செந்நிறமுடைய சூரியனது, திருமகனை -
சிறந்தகுமாரனும், செகம் புரக்கும் - பூமி முழுவதையும் ஆளுதற்குஉரிய,
காவலனை- அரசனும், இரவலோருக்கு - யாசகர்க்கு, எ இரவும் விடிவிக்கும்-
எந்தயாசகத்தையும் ஒழிவிக்கிற, இரு கரத்து - இரண்டுகைகளையுடைய,
வள்ளலை-தானகுணமுடையவனுமான கர்ணனை, இன்று - இன்றைக்கு,
இழந்தோம் -இழந்து விட்டோம், என்று-என்றகாரணத்தால்,-வி விரவு நறு
மலர் தார் தருமன்முதல் ஐவரும் - வண்டுகள் நெருங்கிமொய்க்கும்
வாசனையுடையபூமாலைகளைத் தரித்த தருமபுத்திரன் முதலிய ஐந்துபேரும்,
தம் விழி நீர்சோர - தங்கள் கண்களினின்று நீர் பெருக, அ இரவில்-அந்த
இராத்திரியில்,இமைப்பொழுதும் தரியாமல் - ஒரு நொடிப்பொழுதேனும்
பொறுத்திராமல்,அழுது - புலம்பி, அரற்றி-கதறி, அலமந்தார் -
வருந்தினார்கள்; (எ - று.)

   தங்களுக்குத் தமையனென்று தங்களால் முன்பு அறியப்படாதவனான
கர்ணன்தங்களிலொருவனான அருச்சுனனாற் போரிற் கொல்லப்பட்டபிறகு
குந்திதேவிஅவன்மேல் விழுந்து அழுததனாலும், பின்பு கண்ணன்
சொன்னதனாலும்தங்களுக்கு முன்பிறந்தவனென்று அறிந்ததனால்,
பாண்டவர்கள் இங்ஙனம்சோகிப்பாராயினர்.  மகனை, காவலனை, வள்ளலை
என்ற மூன்றும் -ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள்; இவை
'இழந்தோம்' என்னும் ஒருவினை கொண்டன: [நன்-பொது 61.]
துரியோதனாதியரினும் மூத்தவனானதருமனுக்கும் முன்பிறந்தவனாதலால்
நீதிநூல் முறைப்படி நிலவுலகமுழுவதையும் ஆளுதற்குஉரியவன்கர்ணனே
யென்பார்,'செகம்புரக்குங்காவலன்' என்றார்; கீழ்ச்சருக்கத்தில் "கொற்ற
வேந்தாய்,வீற்றிருந்திங் கைவேமுமடிவருடப் புவியாள விதியிலாதாய்"
என்றதுங் காண்க.கர மென்கிற சொல்லுக்கு-வடமொழியில் கிரணமென்றுங்
கையென்றும்பொருள்களுள்ளதனாலும், இரவு என்கிற தமிழ்மொழி -
இராத்திரியென்றும்இரத்தலென்றும் பொருள் படுதலாலும், விடிதலென்ற
வினை-உதித்தலென்றும்ஒழிதலென்றும் பொருள்படுதலாலும், இச்சொற்களில்
சமத்காரங்கற்பித்து,தந்தையாகிய சூரியன் தனது ஆயிரங் கரங்களால்
[கிரணங்களால்] இரவைவிடிவிக்குமாறு போல, மைந்தனான கர்ணன்
பலவகையிரவுகளையும் தனதுஇருகரங்களைக் கொண்டே விடிவிப்பவன்
என்றகருத்தைக் குறிப்பாற்புலப்படுத்துமாறு 'இரவலோருக்கு எவ்விரவும்
விடிவிக்கும் இருகரத்து வள்ளல்'என்றாரென்க; இதனால், "பிதுச் சதகுணம்
புத்ர:" என்றபடி தந்தையினும் பலமடங்குசிறந்தவன் கர்ணனென்பதும்,
கர்ணன் வேண்டினவர்களுக்குவேண்டியதை யெல்லாம் தவறாமல்
இருகைகளாலும் எடுத்துக் கொடுத்துஅந்தயாசகர்கள் மீண்டும் ஓரிடத்து
இரத்தற்குச் செல்ல வேண்டாமல் செல்வம்நிரம்பியவராய்த்
திருப்தியடையும்படி கொடுக்கும் உதாரகுணமுடையவனென்பதும் இதில்
விளங்கும்.  கர்ணனுக்குச் சூரியனைஉபமானமாகக் கூறத் தொடங்கி,
சூரியனைக் காட்டிலும் உபமேயமாகியகர்ணனுக்கு  உயர்வு கற்பித்துக்
கூறியதனால்,