பூமழைதேவர்கண், முந்த வோட்டிய தேரொடு காய்கதிர் மொய்ம்பன் மேல்கடன் மூழ்கினன் மாலைகொள், அந்தி வாய்த்தம பாசறைமேவினரைந்துபார்த்திவ ரானவர் தாமுமே. |
(இ -ள்.) மைந்தினால் பெரியோன் எனும் - வலிமையினாற் பெரியவனென்று சொல்லப்படுகிற, வாயுவின் மைந்தனால் - வாயு குமாரனான வீமனால், துரியோதனன் மா முடி சிந்த - துரியோதனனது பெரியதலை சிதைய,(அதுகண்டு), நீள் திசை காவலர் - நீண்டதிக்குக்கள்தோறும் நின்று காவல்செய்கிற திக்பாலகர்கள், ஆர்த்தனர் - மகிழ்ந்து ஆரவாரித்தார்கள்; தேவர்கள்-, பூ மழை சிந்தி வாழ்த்தினர் - (வீமன்மேற்) பூமாரி சொரிந்து வாழ்த்துக்கூறினார்கள்; காய் கதிர் மொய்ம்பன் - தபிக்கிற கிரணங்களின் வலிமையையுடையசூரியன், முந்தஓட்டியதேரொடு - விரைந்து செலுத்துந் தேருடனே, மேற்கு கடல் முழுகினன் - மேற்குக்கடலில் முழுகினான் [அஸ்தமித்தானென்றபடி]; மாலை கொள் அந்திவாய் - அந்த அந்தி மாலைப்பொழுதில், ஐந்து பார்த்திவர் ஆனவர்தாமும் - பாண்டவரைவரும், தமபாசறை மேவினர் - தமது படைவீட்டுக்குத் திரும்பிவந்தனர்; பாசறை- பகைமேற்சென்றோர் உறையுமிடம்; பாடிவீடெனவும்படும். வீமன் பதினாயிரம் யானை பலங்கொண்டவ னாதலால், 'மைந்தினாற் பெரியோனெனும்' என்ற அடைமொழி அவனுக்குக் கொடுக்கப்பட்டது; அன்றி,இவ்வடைமொழி, கீழ் 181-ஆங் கவியில் "ஆநிலன் பலவான்" என்றதைக்குறிப்பதுமாம். இவ்வடைமொழி, வாயுவோடு இயைத்தற்குந்தகும். முச்சுடர்களுள் முதற்சுடராகிய சூரியன் மற்றை இருசுடராகிய சந்திர அக்கினியர்போலப் பதினாறு ஏழுகிரணங்களையே யுடையனாகாமல் ஆயிரங்கிரணங்களோடுங் கூடி அவற்றுட் சிலவற்றை அவ்விருசுடர்க்குங் கொடுத்து வாங்குந் தன்மையனாய்ச் சிறத்தலால், "காய்கதிர்மொய்ம்பன்" எனப்பட்டான். மேற்கு + கடல் = மேல்கடல், "திசையொடு திசையும்" என்னுஞ் சூத்திர விதி. சிலப்பதிகாரத்தில் 'அந்திமாலைச் சிறப்புச் செய்காதை'என்றாற்போல, 'மாலைக்கொளந்தி' என்றார்; அங்கு அந்திமாலை என்பதற்கு -'அந்திக்காலத்துமாலை' என்று பொருள்கூறியுள்ளார் அடியார்க்குநல்லார்.மாலையென்ற சிறப்புப் பெயர் முன்வந்ததனால், பின் வந்த அந்திஎன்றசிறப்புப்பெயரைப் பொதுப்பெயர்ப்பொருளதாய்க் காலமென்பது மாத்திரமாக்கிமாலைப்பொழுதெனப் பொருளுரைக்க, 'மாலைகொளந்தி' என்பது இனம்விலக்கவந்த அடைமொழி யென்றல், நேர். வாய் - ஏழனுருபு. தம, அ -ஆறனுருபு; "ஆறனொருமைக்கு அதுவும் ஆதுவும், பன்மைக்கு அவ்வும்உருபாம்" என்ற வரையறை நியதியன் றாதலால், இங்கு அகரவுருபு,பாசறையென வருமொழி ஒருமையாயிருக்கையில் வந்தது; இனி இங்கு, அ -சாரியையென்றலும் ஒன்று, பிருதிவி - பூமி; பிருதுவென்னும் அரசனாற்சீர்திருத்தப்பட்டது; பார்த்திவர் - பிருதிவியையாள்பவர். இச்செய்யுள்-கீழ் 178-ஆங் கவிபோன்ற சந்தக்கட்டளைக்கலிப்பா. தந்ததாத்தன தானன தானன தந்த தாத்தன தானன தானன - என்பது, இதற்குச்சந்தக்குழிப்பு. (197) |