பக்கம் எண் :

154பாரதம்சல்லிய பருவம்

எனப்பட்டது.  விநாழிகை - ஒருநாழிகைப்பொழுதின் அறுபதில் ஒருபங்கு:
காலநுட்பத்தைக் காட்டுதற்கு, இதனை யெடுத்துக் கூறினார்.  "நிச்சயமெனுங்
கவசந்தான் நிலைநிற்பதன்றி, யச்சமென்னுமீ தாருயிர்க் கருந்துணையாமோ"
என்றாற்போல இவன் மானத்தையே எல்லாவற்றினும்
முக்கியமாகக்கொண்டுள்ள இராசராசனாதலால், 'மானகவச வரராச
துரியோதனன்' என்றார், 'வேதமுனி' என்பது, துரோணன் மகனுக்குஞ்
சேர்க்கத்தகும்.  உழறினான் = உழற்றினான்; தன்வினை பிறவினைப்
பொருளில்வந்தது; சுழற்றி வருத்திப் புரட்டினா னென்றபடி.

    இச்செய்யுள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் தேமாச்சீர்களும்
இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் கருவிளங்காய்ச்சீர்களும், மற்றை நான்கும்
கூவிளங்காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்
சந்தவிருத்தம்.  தான தனனனன தானனன தானனன தான தனனனன
தானனனதானனன என்பது, இதற்குச் சந்தக்குழிப்பாம்.        (199)

வேறு.

200.-அசுவத்தாமன்துரியோதனனைக் கண்டு எடுத்துச்
சோகித்தல்.

உரகது வசனயர் கின்ற வாவியினுணர்வொடு துயில்வது
                                  கண்டுபேருடல்,
கரதல மலர்மிசை கொண்டு வார்புனல் கலுழ்தரு
                          விழியினனண்பி னாலமர்,
பொருகள னிடைதன தந்தை வீடிய பொழுதினுமனமிக
                                நொந்துளானுயிர்,
சுரர்களு முருகவி ரங்கி னான்வரி தொடுசிலை விசயது
                                  ரங்க தாமனே.

     (இ -ள்.) உரக துவசன் - பாம்புக்கொடியனான துரியோதனன்,
அயர்கின்ற ஆவியின் - தளர்கின்ற உயிருடனே [குற்றுயிரோடு],
உணர்வொடுதுயில்வது-சிறிது அறிவோடு உறங்குவதை, கண்டு - பார்த்து,-
வரி தொடுசிலை விசய துரங்க தாமன் - கட்டமைந்த அம்பு தொடுத்தற்குரிய
வில்லின்தொழிலில் வெற்றியையுடைய அசுவத்தாமன்,-பேர் உடல் -(அவனது)
பெரியஉடம்பை, கரதலம் மலர்மிசை - தாமரைமலர்போன்ற தனது
கைகளினால்,கொண்டு - ஏந்திக் கொண்டு,-வார் புனல் கலுழ்தரு விழியின் -
மிக்கநீர்பெருகுகிற கண்களை யுடையவனாய்,- நண்பினால் -(அவனிடத்து
உள்ள) சிநேகத்தால், அமர் பொரு களினிடை தன் தந்தை வீடிய
பொழுதினும் மனம் மிக நொந்துளான் - போர்செய்யுங் களத்திலே
தன்னுடையதந்தையாகிய துரோணன் இறந்தபொழுது தான் அடைந்த
வருத்தத்தினும்அதிகமாக இப்பொழுது மனம் வருந்தியவனாய், சுரர்களும்
உயிர்உருகஇரங்கினான் - (காண்கிற) தேவர்களும் உயிர் கரையும்படி
அழுதான்; (எ - று.)

    துயில்வது - மூர்ச்சித்துக்கிடப்பது என்றபடி; இது மங்கல
வழக்கின்பாற்படும்.  நண்பினால் மனம்மிக நொந்துளானென இயையும்.