அசுவத்தாமன்கூறக்கேட்டுத் துரியோதனன் மகிழ்ச்சிகொண்டு தனது தலையிலணிவதொரு சிறந்த இரத்தினாபரணத்தை அவனுக்கு வெகுமதியாகக் கொடுத்து அனுப்பினனென்பதாம். சிகரம் - உச்சி; அதனையுடையது, சிகரீ. மருத்ஸு தன் என்ற வடசொல், திரிந்தது. இச்செய்யுள் - முதற்சீரும் ஐந்தாம்சீரும் புளிமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும் ஏழாஞ்சீரும் கருவிளச்சீர்களும், மற்றைநான்கும் கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்டஎண்சீராசிரியச் சந்தவிருத்தம். தனன தத்தன தனனன தானன தனன தத்தன தனனன தானன - என்பது, இதற்குச் சந்தக்குழிப்பு. (203) வேறு. 204.-அசுவத்தாமனும் கிருபனும்கிருதனும் பாண்டவர் பாசறை சேர்தல். பூசுரர்பெ ருந்தகைப ரித்தாமா விரியல் போனகிரு பன்கிருத வன்மன்மூ வருமுன், வாசவன்வி ரிஞ்சனுமை பாகனிவர் முதல வானவர் வழங்கியவி தப்போர்வா ளிகளின், ஆசுகன்ம கன்றனையு மப்போதேதுணைவ ரானவரை யுந்தலை துணிப்பா னாடியவர், பாசறை புகுந்தனர்பரித்தேரி யானையொடு பாரதமுடிந்த பதினெட்டா நாளிரவே. |
(இ -ள்.) பூசுரர் பெருந்தகை - அந்தணர் தலைவனான, பரித்தாமா- அசுவத்தாமனும் இரியல் போன - (முன்பு பகைவர்க்குத்) தோற்றோடின, கிருபன் - கிருபாசாரியனும், கிருதவன்மன் - கிருதவர்மாவும், மூவரும் - ஆகிய மூன்று பேரும்,- முன் - முன்பு, வாசவன் - இந்திரனும், விரிஞ்சன்- பிரமனும், உமை பாகன் - உமாதேவியை இடப்பக்கத்திலுடைய சிவபிரானும், இவர் முதல - (என்னும்) இவர்கள் முதலிய, வானவர் - தேவர்கள், வழங்கிய- கொடுத்துள்ள, விதம் - பலவகைப்பட்ட, போர் வாளிகளின் - போர்செய்யவல்ல அம்புகளால் [அஸ்திரங்களால்], ஆசுகன் மகன்தனையும்- வாயுகுமாரனான வீமனையும், துணைவர் ஆனவரையும் - (அவனது) உடன் பிறந்தவரான மற்றைய பாண்டவர்களையும், அப்போதே - அப்பொழுதே, தலைதுணிப்பான் - தலையறுத்து விடுமாறு, நாடி - எண்ணி, பரிதேர் யானையொடுபாரதம் முடிந்த பதினெட்டாம் நாள் இரவு - குதிரைகள் தேர்கள் யானைகள்என்பவைகளோடு பாரதயுத்தம் முடிந்த பதினெட்டாம் போர் நாளின்இராத்திரியில், அவர் பாசறை புகுந்தனர் - அந்தப் பாண்டவர்களுடையபடைவீட்டைச் சேர்ந்தார்கள்; (எ - று.)
'பரித்தேர் யானையொடு பாரதம் முடிந்த பதினெட்டா நாளிரவு' என்றதனால், அப்பொழுது பாண்டவர் பக்கத்தில் கசரததுரகங்களாகிய சேனைகள்யாவும் ஒழிந்திட வீரர்கள் மாத்திரமேசிலர் மிச்சமாயுள்ளாரென விளங்கும். விரிஞ்சி - பஞ்சபூதங்களையும் படைப்பவனென்றும், அன்னப்பறவையாற் சுமக்கப்படுபவனென்றும் அவயவப் பொருள்படும். |