பக்கம் எண் :

16பாரதம்சல்லிய பருவம்

இது - சிலேடைமூலமான ஒற்றுமை நயத்தை அங்கமாகக்கொண்டு வந்த
வேற்றுமையணி.

     செவ்விரவி என்பதில், செம்மை - இனம் விலக்கவந்ததல்லாமல்
இயற்கைபற்றி வந்த அடைமொழி: [நன் - பொது.50] சகம் என்பது
மோனைநோக்கிச் செகம் எனத் திரிந்தது.  காவலன்-காத்தலில் வல்லவன்.
இரவலோர் - இரத்தலில்வல்லவர்.  இரவு - இராத்திரியைக் குறிக்கையில்,
இராஎன்னுங் குறியதன்கீழ் ஆ குறுகி உகரமேற்றதும், இரத்தலைக்
குறிக்கையில்தொழிற்பெயருமாம்.  வள்ளல் - வண்மையை யுடையவன்.
பறவைப்பொதுப்பெயராகிய 'வி'  என்ற வடசொல்-இங்குச் சிறப்பாய்,
வண்டைக் குறித்தது; [பொதுப்பெயர் சிறப்புப்பொருளை யுணர்த்துதலும்,
சிறப்புப்பெயர் பொதுப்பொருளை யுணர்த்துதலும், ஒருவகைப் பாஷை நடை].
இந்த 'வி' என்ற சொல்லே நீண்டு தமிழில் 'வீ' என்றும் நிற்கும்.
ஓசையின்பத்திற்காக 'விவ்வரவு' என உயிர்முன் இடையெழுத்து இரட்டிற்று.
தருமத்தினின்றும் தவறினவர்களுக்குத் தக்க தண்டனைசெய்து தருமத்தைக்
காத்தலால், யமனுக்குத் தருமனென்று பெயர்; 'தந்தையே மைந்தனாகிறான்'
என்னும் நூல் வழக்குப்பற்றி, தருமபுத்திரனை 'தருமன்' என்றது. அலமந்தார்,
அலமா - பகுதி.

     இதுமுதல் ஒன்பது கவிகள்-முதல்நான்குசீரும் காய்ச்சீர்களும், மற்றை
யிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரிய
விருத்தங்கள்.                                         (11)

12.-கர்ணனைக் கொன்றதனால்அருச்சுனன்
கொண்ட சோகம்.

சாயை வெறுத்தன ளவளிற்றலத்தேவிமிகவெறுத்தா டபனனீன்ற,
சேயை வெறுத்துயிர்கவர்ந்தானுறவறியான் றெயித்தியர்போர்
                                   செயித்தானென்று,
மாயைவெறுத்திட விளைத்தமாயோனைவெறுத்தனன்
                                    வன்மனத்தியான,
யாயை வெறுத்தனன்பின்னைவிதியை வெறுத்தனன்
                                 வீமற்கிளையகோவே.

     (இ - ள்.) 'தெயித்தியர் போர் செயித்தான் - அசுரர்களுடைய போரை
வென்றவனான அருச்சுனன், உறவு அறியான் - (தங்களுக்குங் கர்ணனுக்கும்
உள்ள) உறவுமுறைமையை அறியாதவனாய், தபனன் ஈன்ற சேயை-சூரியன்
பெற்ற குமாரனான கர்ணனை, வெறுத்து உயிர் கவர்ந்தான் - பகைத்துக்
கொன்றான்', என்று - என்றகாரணத்தால், சாயை வெறுத்தனள் -
(சூரியன்மனைவியான) சாயாதேவி வெறுப்புக்கொண்டாள்; அவளின்-
அவளைக்காட்டிலும், தலம் தேவி-பூமிதேவி, மிக வெறுத்தாள்-மிகவும்
வெறுப்புக்கொண்டாள்; வீமற்கு இளைய கோ - வீமனுக்கு அடுத்ததம்பியான
அருச்சுனன்,- வெறுத்திட மாயை விளைத்த மாயோனை-(பலரும்)
வெறுக்கும்படிமிகுதியாக வஞ்சனையைச்செய்த கிருஷ்ணனை, வெறுத்தனன்
- வெறுத்தான்:வல் மனத்தி ஆன - கடினசித்தமுடையவளான, யாயை -
தன்தாயானகுந்தியை, வெறுத்தனன்-; பின்னை -