பக்கம் எண் :

160பாரதம்சல்லிய பருவம்

    பார்வதீதேவி ஐந்து பிராயமானவுடனே பரமசிவனை
மணஞ்செய்வதற்குத்தவஞ்செய்யவிரும்பியவளாய்த் தன் கருத்தைப்
பெற்றோருக்குத்தெரிவிக்கையில் இமயமலை யரையனும் அவன் மனைவியான
மேனையுமாகியஅத்தந்தைதாயர்களால் மறுக்கப்பட்டதனால், அவளுக்கு
உமையென்று ஒருபெயருண்டாயிற்று;  உ, மா என்பதற்கு - அம்மா,
வேண்டாம் என்று பொருள். முதலடியில் கிருதபத்மா என்றும்,
இரண்டாமடியில் 'உமைபத்தாமாயனிவர்,'வயப்போர்' என்றும்,
மூன்றாமடியில், 'தலை துணிப்பமென' என்றும் பாடம்.

    இச்செய்யுள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீரும் ஏழாஞ்சீரும்
மாச்சீர்களும்,மற்றையாறும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்டஎண்சீராசிரியச் சந்தப்போலிவிருத்தம்.  தானனன தந்தனன தத்தா
தானனனதானனன தந்தனன தத்தா தானனன-என்ற சந்தக்குழிப்பு
பெரும்பாலும் ஒத்துச்சிறுபான்மை ஒவ்வாமையால், இது சந்தமாகாது
சந்தப்போலியாம்.                                         (204)

ச ல் லி ய ப ரு வ ம்

முற்றுப்பெற்றது.

------