பத்தாவது சௌ ப் தி க ப ரு வ ம். பாண்டவரைச் சேர்ந்த படைவீரர்கள் படைவீட்டில் தூங்கிக்கொண்டிருக்கையில் அவர்களை அசுவத்தாமன் கொன்ற செய்தியைக் கூறும் பாகம். ஸு ப்தி - தூக்கம்; அதில் நிகழுஞ்செயல் - சௌப்திகம். வேறு. 1.-அசுவத்தாமன் முதலியமூவரும் காலமறிதல். வேலமர் தடக்கை வீரரிப் பாடிவீடுசென் றணைதலும் புறத்தோர் ஆலமர் சினையிற் பல்பெருங் காகமரும்பக லழிந்த கூகையினாற் சாலவு மிடருற் றலமரக் கண்டுதம்மிலே முகமுக நோக்கிக் காலமு மிடனு மறிந்தமர்செகுத்தல் கடனெனக் கருதின ரன்றே. |
(இ -ள்.) வேல் அமர் - வேலாயுதம் பொருந்திய, தட கை - பெரிய கையையுடைய, வீரர் - வீரர்களான அசுவத்தாமன் முதலியோர், இ பாடி வீடு சென்று அணைதலும் - பாண்டவர்களுடைய படை வீட்டைப் போய்ச்சேர்ந்த வளவிலே,-புறத்து - (அப்படைவீட்டுக்கு) வெளியில், ஓர் ஆல் அமர் சினையில் - ஒரு ஆலமரத்திற் பொருந்திய கிளையிலே, பல் பெரு காகம் - பல பெரிய காக்கைகள், அரு பகல் அழிந்தகூகையினால் - பகற் பொழுதில் வருந்திய கோட்டானினால், சாலவும் இடர் உற்று அலமர - மிகவுந் துன்பமடைந்து வருந்த, கண்டு - (அதனைப்) பார்த்து,-தம்மிலே முகம் முகம் நோக்கி - தங்களுள்ளே (ஒருவர் ஒருவருடைய) முகத்தைப் பார்த்துக் கொண்டு,காலமும் இடனும் அறிந்து அமர் செகுத்தல் கடன் என கருதினார் -'காலத்தையும் இடத்தையும் அறிந்து போரிற் பகையழித்தல் கடமை' என்று அறிந்துகொண்டார்கள்; (எ - று.) - அன்றே - ஈற்றசை; அப்பொழுதே எனினுமாம். இரவில் தாங்கள் செல்லும் வழியில் ஒருமரத்தின்மேல் பல காக்கைகளைக் கோட்டான் காலமறிந்து அழித்தலைக் கண்ணுற்று அதனால், பகைவெல்லும் வீரர்க்கு அதற்கேற்ற காலம் இன்றியமையாதென்பதை மனத்திற்கொண்டன ரென்பதாம். காக்கை தன்னினும் வலிய கோட்டானுக்குப் பகற்பொழுதில் கண்தெரியாதாதலால் அச்சமயம்நோக்கி வெல்லுதலும், காக்கைக்கு இரவிற் கண்தெரியாதாதலால் அச்சமயம் நோக்கிக் கோட்டான் காக்கையை வெல்லுதலும் இயல்பு; "பகல் வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" என்ற திருக்குறள் இங்கு அறியத்தக்கது. இனமாதலின், இடமறிதலும் உடன் கூறினார். பகைவர் யாவரும்சிந்தையின்றித் துயிலும் இரவில் அவர் |