களைப்படைவீட்டிலேயே அழித்திடுதற்குத் துணிந்தன ரென்றவாறு. கூகை -கூஎன்று கூவுவது; கூக என்பதன் திரிபு, என்பர் ஒருசாரார்.
இதுமுதற் பதினேழு கவிகள் - பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கு விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். (205) 2.-ஒருபூதம் இவர்களைவலியழித்துத் தடுத்துவிடுதல். உரத்துவாரணங்கண்மதமிகுத்தென்னவூக்கமோடொன்றையுமதியார் புரத்துவாரத்துப்புகுதலும்வெகுண்டுபொங்கழல்போல்வதோர்பூதம் பரத்துவாசனையுமாதுலன்கிருதபன்மனென்றிவரையு முனைந்து கரத்துவார்சிலையுங்கணைகளுமுறித்துக்கடவுதிண்டேர்களுங்கலக்கி. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ -ள்.) உரத்து - (இயல்பில்மிக்க) வலிமையையுடைய, வாரணங்கள்- யானைகள், மதம் மிகுத்து என்ன - மதம்மிகப்பெற்றாற்போல, ஊக்கமோடு- மிக்கபோர்க்களிப்புடன், ஒன்றையும் மதியார் - யாதொன்றையும் லக்ஷ்யஞ்செய்யாதவர்களாய், (அசுவத்தாமன் முதலிய மூவரும்), புரம் துவாரத்துபுகுதலும் - அப்படைவீட்டின்வாயிலிலே நுழையுமளவில்,-பொங்கு அழல்போல்வது ஓர் பூதம் - தாவியெரிகிற நெருப்புப் போல்வதொரு [மிகக்கொடிய]பூதமானது, வெகுண்டு - கோபங்கொண்டு (வந்து), பரத்துவாசனையும் -பரத்துவாசகுலத்துப் பிறந்தவனான அசுவத்தாமனையும், மாதுலன் கிருதபன்மன்என்ற இவரையும் - (அவனது) மாமனான கிருபன் கிருதவர்மா என்றஇவர்களையும், முனைந்து - எதிர்த்துப்பொருது, கரத்து - அவர்கள்கைகளிலுள்ள, வார் - நீண்ட, சிலையும் - விற்களையும், கணைகளும்- அம்புகளையும், முறித்து - ஒடித்தெறிந்து, கடவு திண் தேர்களும் -(அவர்கள்) ஏறி்ச்செலுத்திவந்த வலிய தேர்களையும், கலக்கி - நிலைகுலையச்செய்து [சிதைத்து], (எ - று.) - 'மலைந்து' என அடுக்க கவியோடு இயையும். அகப்பட்டதைத் தவறாது அழித்தற்கு, அழலுவமைகூறினார். புரம் - சேனை தங்குமிடம். (206) 3. | முன்புகுவிசயமுனிமகன்றன்னைமுரணெடுந்தோள்களுமுரனும், என்புடனிணமுந்தசைகளுஞ்சிந்தவிணைக்கருஞ்சிறுகுறுங் கரத்தால், வன்புகையெழுமாறுள்ளுறமலைந்துமற்றுளோர் கொற்றமு மழித்துப், பின்புகலறுமாதுரந்ததப்பூதப்பெருமையாம் பேசுறுந்தகைத்தோ. |
(இ -ள்.) முன் புகு - (அம்மூவரில்) முந்தி வந்து (பாசறையினுள்) நுழையலுற்ற, விசயம் முனி மகன் தன்னை - போர் வெற்றியையுடைய துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனை, முரண் நெடு தோள்களும் -வலிமையையுடைய நீண்ட தோள்களும், உரனும் - மார்பும், என்புடன்நிணமும் தசைகளும் சிந்த - எலும்பையும் கொழுப்பையும் |