பக்கம் எண் :

170பாரதம்சௌப்திக பருவம்

அனையான் -வலிய தவத்தையுடைய முனிவர்களுக்குத் தலையிலணியும்
இரத்தினம்போலச்சிறந்தவனாய்விளங்குகிற அசுவத்தாமன்,- காசினிமுழுவதும்
வென்று கொண்டவர் இவர் என்று எண்ணிஏ - பூலோக முழுவதையும்
சயித்துத் தங்களுடையதாக்கிக் கொண்ட பாண்டவர்கள் இவர்களேயென்று
நினைத்து, சினத்துடன்கலங்கி - சீற்றத்தினாற் கலக்கமுற்று, வள் தேறல்
உண்டவர்தமைபோல் - முதிர்ந்த கள்ளைக் குடித்தவர்போல, மதத்தினால் -
களிப்புமயக்கங்கொண்டு அதனால், வாளா - வீணாய், ஒருநொடியினில் -
ஒருகைந்நொடிப்பொழுதிலே, தலை துணித்தான் - தலையறுத்திட்டான்;
                                                (எ - று.)

    பாண்டவர்களைக் கொன்றிருந்தால் இவனது சபதம் நிறைவேறுதல்
மாத்திரமாவது நிகழக்கூடும்; உபபாண்டவரைக் கொன்றிட்டது அங்ஙனமும்
உதவாமல் அவர்கள் குலத்தை நாசம்பண்ணுவதாய் முடிந்து பெரிய
பழியையும்பாவத்தையுமே தருகிற கொடுமை விளங்க, 'வாளா
தலைதுணித்தான்' என்றார்.'தந்தையரொப்பர் மக்கள்' என்றபடி
தந்தையரோடு மைந்தர் வடிவத்திற்சிறிதும் வேறுபாடின்றி விளங்குதற்கு
'சுடரிற்கொளுத்திய சுடரனையார்' எனஉவமைகூறினார்.  தவத்துக்குத்
திண்மை - மனநிலை கலங்காமை.முன்னொருகாலத்திற் பரசுராமரால்
கசியபமுனிவர்க்குத் தானஞ்செய்யப்பட்டமைபற்றி, பூமிக்குக் காச்யபீ என்று
ஒருபெயர்: அது காசினிஎனத் திரிந்ததென்ப.'சிக்குறக்கலங்கி' என்றும்
பாடமுண்டு.                                            (217)

14.-அப்பொழுது சோழன்அசுவத்தாமன்மேற் போருக்கு
எழுதல்.

துருபதன்மைந்தரனைவரும்பஞ்சத்திரௌபதேயருந்துயில்
                                       பொழுதிற்,
புரவியந்தாமாநினைவறப்புகுந்துபொன்றுவித்தனனெனப்புலம்ப,
இரவிடையமர்மற்றென்னைகொலென்னா விரவிதன்றிருக்கு
                                     லத்திறைவன்,
பெருமையோடெழுந்தான்பகைவன் மேலவன்முன்பின்னிடப்
                              பொருதிடும்பெரியோன்.

     (இ -ள்.) துருபதன் மைந்தர் அனைவரும் - துருபதராசனது
புத்திரர்களெல்லோரும், பஞ்சதிரௌபதேயரும் - திரௌபதியினிடத்திற்
பிறந்தஉபபாண்டவர்களைந்துபேரும், துயில் பொழுதில் - தூங்கும்பொழுதில்,
அம்புரவி தாமா - அழகிய அசுவத்தாமன், நினைவு அற புகுந்து -
நினைத்தற்கும்இடமில்லாமல் (படைவீட்டினுள்) நுழைந்து, பொன்றுவித்தனன்
- (அவர்களை)அழித்திட்டான், என - என்று, புலம்ப - (கண்டவர் யாவரும்)
கதறியழ,(அதுகேட்டு),- இரவிடை அமர் என்னை கொல் என்னா -
'இராத்திரியிற் போர்என்னடா?' என்றுசொல்லி யதட்டிக்கொண்டு, அவன்
முன் பின்னிடபொருதிடும்பெரியோன் - அந்த அசுவத்தாமன் முன்பு
தோல்வியடையும்படி போர்செய்தபெருமையையுடையவனாகிய, இரவிதன்
திரு குலத்து இறைவன் - சூரியனதுமேலான குலத்தில் தோன்றிய அரசனான
சோழன், பெருமையோடு -பராக்கிரமத்துடனே, பகைவன்