குருபதிதன்வாய்மை - 224 -ஆங் கவிமுதல் ஆறு கவிகளிற் கூறியவை. அக்கினியிற் பிரிவு, இடவேற்றுமையாலும் மந்திரபேதத்தாலும் தொழில் வகையாலும் நிகழ்வதென்க. மிக்க பரிசுத்தியுடையவனான வியாசன் ஒப்புயர்வற்ற திவ்வியவொளியையுடையவனாயிருத்தலால், அத்தன்மையை விளக்குதற்கு, மூவகையக்கினிகளும் ஒரு வடிவாய்ப்பிறந்தாற் போன்றவனென்றார். வியாஸன் - (பலவாறாகக் கலந்து கிடந்த வேதங்களை இருக்கு முதலிய நான்குவகையாக) வகுத்தவனென்று காரணப்பொருள்படும்; வ்யஸ் - பிரித்தல். தம் செயல் - பகைவர் பலரைத் தூங்குகையிற்கொன்றமைமுதலியன. (237) 34.-வியாசன் மூவருக்கும்விடை கொடுத்து அனுப்புதல். புரிதவத்திற்கானவனங்கிருபனுக்குந்துரோணமுனிபுதல்வனான, துரகததாமனுக்குமமைத்திவ்வுழி நீரிருத்திரெனச் சொன்ன பின்னர்க், கிருதனுக்குவிடைகொடுத்தானிவருமவன்மொழிப்படியே, கிரிசூழ்கானில், தருநிலத்தோரதிசயிப்பச் சிவபெருமான் றனைநினைந்து தவஞ்செய்தாரே. |
(இ -ள்.) (வேதவியாச மகாமுனிவன்), கிருபனுக்கும் - கிருபாசாரியனுக்கும், துரோணமுனி புதல்வன் ஆன துரகததாமனுக்கும் - துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனுக்கும், புரி தவத்திற்கு ஆன வனம் - தவஞ்செய்வதற்குத் தக்கதான அரணியத்தை, அமைத்து - (இன்னதென்று) நியமித்து, இ உழி நீர் இருத்திர் என சொன்ன பின்னர் - இவ்விடத்தில் நீங்கள் (தவஞ்செய்து கொண்டு) இருப்பீர்களென்று சொன்ன பின்பு, கிருதனுக்கு விடைகொடுத்தான் - கிருதவர்மாவுக்கு (த்தன்ஊர்க்குச் செல்லும்படி) அனுமதி கொடுத்தனுப்பினான்; இவரும் - (கிருபன் அசுவத்தாமன் என்ற) இவ்விருவரும், அவன் மொழி படியே - அம்முனிவனதுசொல்லின்படியே, கிரிசூழ் கானில் - மலை சூழ்ந்த காட்டில், தரு நிலத்தோர்அதிசயிப்ப - (கற்பக) விருட்சங்களையுடைய இடமான சுவர்க்கலோகத்திலுள்ளதேவர்கள் ஆச்சரியப்படும்படி, சிவபெருமான்தனை நினைந்து தவம் செய்தார்- சிவபிரானைத் தியானித்துத் தவஞ் செய்பவரானார்கள்; (எ - று.) 'கிரிசூழ்கான்' என்ற தொடர் - மலையைச்சூழ்ந்த காடென்றும், மலையாற்சூழப்பட்ட காடென்றும் இருவகையாகப் பொருள்படும். (238) 35.-திருதராட்டிரனுக்கும்காந்தாரிக்கும் சஞ்சயன் செய்திகூறல். நாடியசொற்சுருதிநிகழ்நாவினான்சஞ்சயனு நள்ளென்கங்குல், ஓடியொளித்திடு கதிரோனுதிப்பதன்முன்விலோசனநீருகுப்பவெய்தி, ஆடிமுகத்தரசினுக்குமையிருபதரசரையுமளித்துவாழ்ந்து, வாடியமெய்ச்சவுபலைக்குமுற்றதெல்லாம் வாய்மலர்ந்தான் வாய்மைவல்லான். |
(இ -ள்.) நாடிய சொல் - ஆராய்ந்து அறியத்தக்க சொற்களையுடைய, சுருதி - வேதங்கள், நிகழ் - பொருந்திய, நாவினான் - நாக்கையுடையவனும், வாய்மை வல்லான் - உண்மையையே பேசுபவனும் |