பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்183

ஆகிய,சஞ்சயனும் -, நள் என் கங்குல் - நடுராத்திரியில், ஓடி -
விரைந்துசென்று, - ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் - அஸ்தமித்த
சூரியன் மீண்டும் உதயமாவதன் முன், விலோசனம் நீர் உகுப்ப எய்தி -
கண்கள் நீர்சொரிய அருகிற்சேர்ந்து,- ஆடிமுகத்து அரசினுக்கும் -
கண்ணாடிபோலும் முகத்தையுடைய திருதராஷ்டிரராசனுக்கும், ஐயிருபது
அரசரையும் அளித்து வாழ்ந்து வாடிய மெய்சவுபலைக்கும் - (துரியோதனன்
முதலிய) நூறு அரசர்களையும் பெற்று வாழ்ந்து மெலிந்த உடம்பையுடைய
சுபலராசன் மகளான காந்தாரிக்கும் உற்றது எல்லாம் வாய்மலர்ந்தான் -
நடந்தவையெல்லாங்கூறினான்; (எ - று.)

    நள்ளென் கங்குல் - நள்ளிரவு; நள் - நடு.  இங்கே 'நள்ளென்கங்குல்'
என்றது, பொழுது விடிதற்கு முந்தியே யென்றவாறு;  240 - ஆங் கவியில்
'பானாள்' என்பதும் இப்படியே.  ஒளித்திடுகதிரோன் உதிப்பதன்முன் -
"விழுந்த ஞாயிறு எழுவதன்முன்".  சௌபலை யென்ற பெயர் -
சவுபலையெனப் போலிபெற்றது.  காந்தாரி கருவுற்றிருக்கையில் குந்திக்குத்
தருமபுத்திரன் பிறந்த செய்தியை யறிந்து பொறாமை கொண்டு உடனே
கல்லினால் தன்வயிற்றை யிடித்துக்கொள்ள, அதனால் கருப்பம் குழம்பிப்
பலகூறுகளாகி வெளிவிழுந்திட, வியாசமுனிவர் வந்து அனுக்கிரகஞ்செய்து
அக்கருப்பிண்டக்கூறுகள் நூறையும் நூறுகுடங்களிலும் எஞ்சிய சிதறலைச்
சேர்த்து ஒரு குடத்திலுமாக வைத்து அடைகாத்துவரச்சொல்ல, பின்பு
அவற்றினின்று துரியோதனாதியர் நூற்றுவர்மைந்தரும், துச்சளையென்னும்
மாதும் தோன்றினரென வரலாறு உணர்க.  இப்படி அருமையாக வருந்தி
நூறுமக்களைப் பெற்றும் அத்தனைபேரையும் இழந்த இரங்கற்பாடு தோன்ற,
'ஐயிருபதரசரையு மளித்து வாழ்ந்த வாடிய மெய்ச் சவுபலை' என்றார்.
சுருதிநிகழ்நா - வேதம்பயின்ற நா.                            (239)

36.-துரியோதனன்இறந்தமையறிந்து காந்தாரி வருந்துதல்.

சேனாவிந்துவைமுதலாந்திருமைந்தரைவரும்வான் சென்ற
                                      நாட்டொட்டு,
ஆனாமற்சொரிகண்ணீராறுபெருங்கடலாகவழுதுசோர்வாள்,
பானாள்வந்தருண்முனிவன் பகருமொழி விடஞ்செவியிற்
                                       பட்டதாகத்,
தூநாகமுருமொலிகேட்டயர்வதுபோல்வீழ்ந்தழுதாள்சுபலன்பாவை.

     (இ -ள்.) சேனாவிந்துவை முதல் ஆம் திரு மைந்தர் ஐவரும் வான்
சென்ற நாள் தொட்டு - சேனாவிந்து என்பவனை முதலாகவுடைய சிறந்த
தனது புத்திரர்கள் ஐந்து பேரும் இறந்து மேலுலகத்துக்குச் சென்றதினம்
முதற்கொண்டு, ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரு கடல் ஆக அழுது
சோர்வாள் - (புத்திரசோகத்தால்) அடங்காமல் மேன்மேல்வழிகிற
கண்ணீர்ப்பெருக்குப் பெரிய கடல் வெள்ளம்போலாம்படி புலம்பித்
தளர்ந்துவருபவளான, சுபலன் பாவை - சுபலராசனது மகளான காந்தாரி,
பால்நாள் வந்து அருள் முனிவன் பகரும் மொழி விடம் செவியில்பட்டது
ஆக -பாதியிரவில் வந்தருளிய சஞ்சயமுனிவன் கூறிய வார்த்தையாகிய
விஷம்காதிற்பட்ட வளவில், தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வதுபோல் -
நல்ல