பக்கம் எண் :

184பாரதம்சௌப்திக பருவம்

பாம்புஇடியோசையைக் கேட்டுத் தளர்வது போல, வீழ்ந்து அழுதாள்-கீழ்
விழுந்து புலம்பினாள்; (எ - று.)

    துரியோதனாதியருள் சேநாவிந்து சுதக்கணன் பிங்கலசன் சலாசந்தன்
வீமவாகு என்ற ஐவர் பாரதயுத்தம்நடந்த பதினெட்டுநாள்களுள்
நான்காம்போர்நாளில் வீமனாற் கொல்லப்பட, அதனாற் காந்தாரி அன்றைய
தினம் புதிதாகப்புத்திரசோகத்தை யடைந்தாளென்றும், அதுமுதற்
பலபோர்நாள்களில் பலகுமாரர்கள் இறந்து வர அவற்றால் நாள்தோறும்
மேன்மேல் அச்சோகம்மிகப்பெற்று வந்தாளென்றும் உணர்க. 
துரியோதனனது மரணத்தைத்தெரிவிக்கிற கடுஞ்சொல் மிக்க வருத்தந்
தந்ததை விளக்குவார்'முனிவன்பகரும்மொழிவிடம்செவியிற்பட்டதாக'
என்றார்.  இடியொலிகேட்டுஅஞ்சி யொடுங்குவது நாகத்தின் இயல்பு. 
பாவை - உவமவாகுபெயராம்.                            (240)

37.-திருதராட்டிரனது சோகம்.

மருத்தின்மகனெனுஞ்சண்டமருத்தனைய புயவலியோன்
                                  வன்கைத்தண்டால்,
உருத்தமரினுடன்றும்பரூர்புகுந்தான்வாளரவமுயர்த்தோனென்று,
வருத்தமுடனுயங்கிமிகமயங்கி நிலமிசை வீழ்ந்துவயிரமான,
கருத்தினுடனலமந்தானழுதுபெரும்புனல்சொரியக்கண்ணிலாதான்.

     (இ -ள்.) வாள் அரவம் உயர்த்தோன் - கொடிய
பாம்பின்வடிவமெழுதிய கொடியை உயர நாட்டிய துரியோதனன், உருத்து
அமரின் உடன்று - கோபித்துப்போரில் பகைத்து, மருத்தின் மகன் எனும் -
வாயுவின் குமாரனான வீமனென்கிற, சண்ட மருத்து அனைய புயம்
வலியோன்- கடும்பெருங்காற்றையொத்த தோள்வலிமையையுடைய வீரனது,
வல் கைதண்டால் - வலிய கையிலுள்ள கதாயுதத்தால், உம்பர் ஊர்
புகுந்தான் -வீரசுவர்க்கஞ் சேர்ந்தான், என்று - என்று கேட்டு, கண்
இலாதான் -திருதராட்டிரன், வருத்தமுடன் - சோகத்துடனே, உயங்கி -
தளர்ந்து, மிகமயங்கி - மிகவும் மூர்ச்சைகொண்டு, நிலமிசை வீழ்ந்து -
தரையில் விழுந்து,வயிரம் ஆன கருத்தினுடன் - பகைமைகொண்ட
மனத்துடனே, அழுது -புலம்பி, பெரு புனல் சொரிய - மிக்ககண்ணீர்
பெருக, அலமந்தான் -கலங்கினான்; (எ - று.)

    திருதராட்டிரனது வைரமான கருத்தின் தன்மை, மேலே 249 - ஆங்
கவியில் நன்குவிளங்கும்.                                     (241)

38.-சூரியோதயமும்,பாண்டவர் செய்திகூறத் தொடங்குதல்.

இப்பான்மற்றிவரிரங்கவெப்பாலுமிருளொளிப்பவிரவிபானு,
துப்பார்செங்கொடிகளெனவுதயகிரி மிசைப்படர்ந்து
                               தோற்றஞ்செய்யத்,
தப்பாமனிலமடந்தைதன்பாரமகற்றுவித்த சார்ங்கபாணி,
அப்பாலப்பாண்டவர்களைவரொடும்புரிந்தசெயலறைதுமம்மா.