இன்றே -இப்பொழுதே, (யான்சென்று), ஐவர் ஆரம் மணி முடிகொய்து - பஞ்சபாண்டவர்களுடைய முத்தும் இரத்தினங்களும் பொருந்திய கிரீடத்தைத் தரித்த தலைகளைத் துணித்து, தரணி எலாம் உன்குடைகீழ் அமைப்பன் - பூமிமுழுவதையும் உனது ஆளுகையின் கீழ் வைத்திடுவேன்; உள்ளம் களித்தி -மனங் களிப்பாய், என்று - என்று சொல்லி, சுயோதனற்கு சூள் உரைத்து -அத்துரியோதனனுக்குச் சபதஞ்செய்து கொடுத்து, மீண்டான் - இங்கு வந்தான்;(எ - று.) (245) 42. | திருகுசினத்தொடுங்கடுகிப்பாசறையிற்புகுதலுமேசெங் கட்பூதம், பெருகுவிழிநீர்சொரியவடர்த்தலும்பின்னிட்டரனைப்பெட் பிற்போற்றி, முருகிதழிச்சுடரருளும்படைக்கலம்பெற்றிவ்வண்ண முடித்தானம்மா, குருகுகிரியெறிந்தோனைநிகர்த்தவன்றன்விறலெவர்க்குங் கூறலாமோ. |
(இ -ள்.) (இவ்வாறு துரியோதனனெதிரில் உறுதிமொழி கூறிய அசுவத்தாமன்), திருகு சினத்தொடும் - உக்கிரங்கொண்ட கோபத்துடனே, கடுகி- விரைந்து, பாசறையில்புகுதலுமே - (நமது) படைவீட்டில் நுழையுமளவிலே,செம் கண் பூதம் - (அதற்குக் காவலாக நம்மால்நிறுத்தப் பட்ட கோபத்தாற்)சிவந்த கண்களையுடைய பூதம், விழி பெருகு நீர் சொரிய - கண்களினின்றுமிக்கநீர்வழியும்படி [மிக்கவருத்தமுண்டாகும்படி], அடர்த்தலும் - நெருக்கிப்பொருத வளவிலே, (அசுவத்தாமன்), பின் இட்டு - புறங்கொடுத்து, (பின்பு),அரனை பெட்பின் போற்றி - சிவபிரானை அன்போடு பூசித்து, முருகுஇதழிசுடர் அருளும் படைக்கலம்பெற்று - வாசனையையுடையகொன்றைப்பூமாலையையுடைய சோதிவடிவமான அப்பரமசிவத்தாற்கொடுத்தருளப்பட்ட ஆயுதத்தைப் பெற்று, இ வண்ணம் முடித்தான் -(அவனுதவியால் யாவரையும்) இவ்வாறு அழித்தல் செய்திட்டான்; குருகுகிரிஎறிந்தோனை நிகர்த்தவன்தன் விறல் - கிரௌஞ்சமலையை வேல் கொண்டுபிளந்தவனான முருகக்கடவுளை யொத்தவனான அசுவத்தாமனது வல்லமை,எவர்க்கும் கூறல் ஆமோ - யாவருக்குஞ் சொல்லி முடிக்கக்கூடியஅளவினதோ? [அன்றென்றபடி]; (எ - று.) அசுவத்தாமனது செய்வினைத்திறத்தையும், ஆற்றலையும் வியந்தவாறு. முருகு - தேனும், தெய்வத்தன்மையுமாம். இதழி - கொன்றை; அதன் பூமாலைக்கு, இருமடியாகுபெயர். குருகு என்ற தமிழ்மொழியும் கிரௌஞ்சமென்ற வடமொழியும் பரியாயநாமமாதலால், கிரௌஞ்சமலையை, 'குருகுகிரி' என்றார். சிவகுமாரனாதலால், அசுவத்தாமனுக்கு முருகக்கடவுள் உவமை. குருகுகிரி யெறிந்த கதை:-சிவபிரான் இளையகுமாரனாய்த் தேவர்கள்வேண்டுகோளால் அசுரர்களை யொழித்தற்குத் தேவசேனாபதியாம் பொருட்டுஅவதரித்த முருகக்கடவுள் சூரபதுமனைப்பொருது அழித்தற்குச் செல்லும்வழியிடையே பெரிய மலைவடிவங்கொண்ட கிரௌஞ்ச னென்னும் அசுரன்அவனை நலியக்கருதிப்பலவிதமாயைசெய்ய, அதன்மேல் அப்பெருமான் தனதுதெய்வத்தன்மையுள்ள வேற்படையை யேவி அதனைப்பிளந்து அழித்திட்டன |