அபாண்டவத்தைக் கண்ணன் தடுத்துக் காத்ததை நினைவுகூர்க. "மலர்ந்த செங்கதிர் மாமணியிழந்தவன் மலர்விழிசிவப்பூர, அலர்ந்த தாமரைப் பொகுட்டுறை யயன்படையபாண்டவமெனத்தூண்ட, வுலங்கலந்ததோ ளைவர்தமுயிர்பிழிந்துண்ண வந்துறல்பாரா, விலங்கு மாழியை நோக்கினன் மறைமுதலிரிந்ததப்படைமாதோ" என்பர் பாகவதத்தும். அபாண்டவியம் - அபாண்டவம்; பாண்டவரைக்கருவறுப்பது; இதனைப் பிரமசிரோஸ்திர மென்றும்,ஐஷீகாஸ்திரமென்றுங் கூறுவர்.
கண்ணன் தூதுசெல்வதற்குமுன் பாண்டவரைவரையுஞ் சபைகூட்டித் தனித்தனி 'உங்கள் கருத்ததைக் கூறுங்கள்' என்று சொல்லி அவரவர் கருத்தைக் கேட்டுவரும்போது, சகதேவன் தனது தத்துவஞானத்தைப் புலப்படுத்த, அதுகண்டு கிருஷ்ணன் திருவுள்ளமுவந்து 'வேண்டிய வரம் கேள்'என்று நியமிக்க, சகதேவன் 'எங்களைவரையும் போரிற் பாதுகாக்க வேண்டும்'என்று வேண்ட, அவ்வரத்தை எம்பெருமான் கொடுத்தருளினான். இதனை"வன்பாரதப்போரில் வந்தடைந்தே மைவரையும், நின்பார்வையாற் காக்கவேண்டு நெடுமாலே", "என்றென்றிறைஞ்சியிருதாமரைத்தாளில், ஒன்றுங்கதிர்முடியாற் கோமென் றுரைத்தருளி" என்ற கிருட்டிணன் தூதுசருக்கத்துச்செய்யுளால் அறிக. அத்தன்மையே இங்கு 'அன்று நுமதுயிரைந்துமளிப்பனெனும் வாய்மையினால்' என்று கண்ணபிரானாற் குறிக்கப்பட்டது.விதியினை எவரே வெல்பவர் - "ஊழிற் பெருவலி யாவுளமற்றொன்று,சூழினுஞ் தான்முந்துறும்" எனக் காண்க. (247) 44.-கண்ணன் திரௌபதியைத்தேற்ற, தருமன் இறந்தார்க்குக் கிரியை செய்தல். மைந்தருயிர்க்கிரங்குவதென்மலர்க்குழலாயுன் கொழுநர் வாழ்தற்கியான்செய், தந்திரமற்றொருகோடியுரைக்கடங்காவெனத்துயரந் தவிர்த்துத்தன்மன், கொந்தலருமுகநோக்கிக் கன்னன்முதல் யாவருக் குங்குலவுமீமத்து, அந்தமுறுகடன்கழித்தியெனவுலுகன்சொற்படி நின்றளித்தபின்னர். |
(இ -ள்.) 'மலர் குழலாய்' - பூக்களைச்சூடிய கூந்தலையுடையவளே! மைந்தர்உயிர்க்குஇரங்குவது என் - (உனது) புத்திரர்களுடைய உயிர் ஒழிந்ததற்காக நீ விசனப்படுவது என்னே? உன் கொழுநர் வாழ்தற்கு - உனதுகணவர்கள் இறவாது உயிர் வாழும்பொருட்டு, யான் செய் - நான் செய்த,தந்திரம் - தந்திரங்களோ, ஒரு கோடி - மிகப்பலவாம்; உரைக்கு அடங்கா -(அவை) சொல்லுக்கு அடங்குவனவல்ல,' என - என்று சொல்லி, துயரம்தவிர்த்து - (திரௌபதியினுடைய) துன்பத்தைத் தணித்து, (கண்ணபிரான்),தன்மன் கொந்து அலரும் முகம் நோக்கி - தருமபுத்திரனது மலர்போலமலர்ச்சி பெற்றுள்ள முகத்தைப் பார்த்து, கன்னன் முதல் யாவருக்கும் -கர்ணன் முதலிய எல்லோருக்கும், குலவும் ஈமத்து அந்தம் உறு கடன் கழித்திஎன - பொருந்திய மயானசம்பந்தமான கடமையாகச் செய்யவேண்டியஅந்திமக் கிரியைகளைச் செய்துமுடிப்பா |