சல்லிய சௌப்திகபருவங்களின் அபிதானசூசிகையகராதி அசுவத்தாமன் - சிலைமுனிபெற்றவீரன், சல்-46; அவுணரூர்நீறு செய் வீரன்மைந்தனையொப்பான், சல்-47:அருச்சுனனுக்கும் புறங்கொடுத்தனன், சல் - 52: பூமிஅமரனான தாமா,ஈசான குமரன், சல்-94: வாசிதனயனான தாமா, சல்-95: வேதியன்மகன், சல்-114:சபதம்செய்தல், சல்-119: தன்னால் பாண்டவர் கொல்லப்பட்டபின், துரியோதனன் மாண்டவரைப் பிழைப்பிக்கும் மந்திரத்தால்தன்பக்கத்தில் மாண்டவர்களைப் பிழைப்பித்துச் சக்கரவர்த்தியாகஆளலாம் என்று கூறினான், சல்-121: இறந்த துரியோதனனைச் சார்ந்துதன்தந்தை இறந்த காலத்தினும் மிக்க சோகித்தான், சல் - 200: அனைத்துலகினுங் குருவான சராசனன் அளித்தமுனி, துரியோதனன் தன்மேல் நம்பிக்கையிழக்குமாறு மாய னால் செய்யப்பட்டவன், சல்-201: பதினெட்டாம்நாள் இரவுவிடிவ தற்குள் பாண்டவரைக் கொன்று வருவதாகத் துரியனிடம் சபதங்கூறி அவன் சிகாமணியளிப்பப்பெற்றுச் சென்றான், சல்-203: கிருபன், கிருதவர்மன் இருவருடன் பதினெட்டாம்நாள் இரவேபாண்டவரைக் கொல்ல அவர்தம் பாசறைக்குச் சென்றான், சல்-204: பரத்து வாசகுலத்தினன்,சௌ - 2: பாண்டவரின்படை வீடுபுகுமளவில் பூதம் இவனை வலியழித்துத் துரத்தியது, சௌ-2: சிவபூசைசெய்பவன், சௌ.6: சிவபிரானிடம் ஆயுதம்பெற்றுப்பூதத் தைத்தோற்றோடச்செய்தவன், சௌ-7, 8: திட்டத்துய்மனைத் தலைதுணித்தான், சௌ - 9:கமலமாலையான், சௌ - 9: சிகண்டி உத்தமோசா, உதாமன்முதலான பாஞ்சாலர்பலரையும் அசுவத்தாமன்எதிர்த்துக்கொன்றான்,சௌ-10, 11: உபபாண்டவரைத் தலைதுணித்தான், சௌ - 13:திண்தவர்தமக்குச்சிகாமணியனையான், சௌ - 13:சோழனைப் பரிவாரத்தோடுமடிவித்தான், சௌ - 15: சடையவன்தனயன், சௌ - 16:பாதிநாளிரவினில் அனைவரையும் படுத்தவன், சௌ - 16:உபபாண்டவர்தலைகளைத் துரியோதனனுக்குக்காட்டல், சௌ -19: வேதபண்டிதன், சௌ - 21: குருகுலத்தின்கொழுந்தினைக்கிள்ளினவன், சௌ - 23: போர்தொறும்நின்றதீவினைநீங்கிடத்தவம்மேற்கொள்ளத் துரியோதனன் சொற்படிபோயினான், சௌ - 26:வியாசரைக்கண்டு நடந்த செய்திகளைக்கூறினன், சௌ - 33:அவர்சொற்படியே சிவபெருமானைநினைந்து கானில்தவஞ்செய்தல், சௌ - 34: குருகுகிரியெறிந்தோனைநிகர்த்தவன், சௌ - 42: அபாண்டவியம் என்னும் நிகரில் படையுடையான், சௌ - 43.
அருச்சுனன் -தெயித்தியர்போர் செயித்தான், வீமற்கிளையகோ, சல் - 12: சுரபதிமகன், சல் - 52: |