பக்கம் எண் :

2பாரதம்சல்லிய பருவம்

பதினெட்டாம்போர்ச் சருக்கம்

     பாண்டவர்க்கும்துரியோதனாதியர்க்கும் கடந்த பதினெட்டு நாளை
யுத்தத்தில் பதினெட்டாநாள்யுத்தத்தைக் கூறும் பாகமென்று பொருள். சல்லிய
பருவமும் இதற்கு அடுத்த சௌப்திகபருவமும் என்னும் இரண்டும்
பதினெட்டாம்போர்ச்சருக்கமொன்றில் அடங்கும்.  போர்ச்சருக்கம்,
போரைக்கூறுஞ் சருக்கமென இரண்டனுருபும் பொருளுந் தொக்கதொகை;
சருக்கம் என்பது, சங்கேதத்தால், ஒருபெரியவகுப்பினுட்பட்ட சிறியபாகத்தைக்
குறிக்கும்.  போர்-பொருதல்: பொரு என்னும் முதனிலை திரிந்த
தொழிற்பெயர்.

     முன்கதைத்தொடர்ச்சி:-சந்திரகுலத்திலே விசித்திரவீரியனுக்குப்
புதல்வராகத் திருதராட்டிரனும் பாண்டுவும் தோன்றினர்:  திருதராட்டிரன்
புதல்வர் - துரியோதனாதியர் நூற்றுவர்.  பாண்டுவின் புதல்வரெனப்
படுபவரானபாண்டவர் - தருமபுத்திரன் பீமசேனன் அருச்சுனன் நகுலன்
சகதேவன்என்றஐவர்.  அவ்விரு திறத்தாரும் இளமையிலேயே
மனம்மாறுபட்டுநிற்க,பிறகு துரியோதனாதியர் பாண்டவரைச் சகுனியென்ற
தமது அம்மான்மூலமாகச்சூதாட்டத்தில் வென்று பன்னிரண்டுவருஷம்
வனவாசமும் ஒரு வருஷம்அஜ்ஞாதவாசமும் செய்துவரும்படி யனுப்பினர். 
அந்த ஏற்பாட்டின்படியேபாண்டவர் தமது மனைவியான திரௌபதியுடனே
வனவாசஅஜ்ஞாதவாசங்களை முடித்திட்டு விராடராசனால் அமைக்கப்பட்ட
உபப்பிலாவியநகரத்திலிருந்து ஆலோசித்து உலூகனென்றமுனிவனைத்
துரியோதனனிடம் இராச்சியபாகத்தைக் கொடுக்கும்படி கேட்க அனுப்ப,
துரியோதனாதியர் அதற்கு இணங்காமற்போகவே, உலூக முனிவன்
அச்செய்தியைப் பாண்டவர்க்குத்தெரிவித்துப் பின்பு துவாரகையில்
ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் தெரிவித்துச் சென்றான்.  அதன்பின் கண்ணபிரானைத்
தந்தமக்குப்போரில் ஏற்ற துணையாகும்படி துரியோதனனும் அருச்சுனனும்
ஒருங்கேசென்று வேண்ட, அப்பெருமான், தந்திரமாக, துரியோதனனுக்கு
யாதவசேனை முழுவதையுந் துணையனுப்புவதாகச் சொல்லி, தான்மாத்திரம்
பாண்டவர்க்கே துணைவனாயினான்.  பின்பு திருதராட்டிரனது
வேண்டுகோளால் சஞ்சயனென்னும் முனிவன் பாண்டவர்பக்கல் வந்து
'அரசாட்சி பலபெருந்துன்பங்களுக்கும் இடமாகுதலால், அதனிடத்து
ஆசையைவிட்டு வனத்தையடைந்து பெருந்தவஞ்செய்தலே சிறந்த அறிவு'
என்று வைராக்கியம் போதிக்க, பாண்டவர்கள் அதற்குச் சிறிதும்
உடன்படாதுமறுத்து விட்டனர்.  அதன் பின்பு பாண்டவர் மீண்டும்
ஆலோசித்துக்கண்ணபிரானையே தூதனுப்ப, அப்பிரான்சென்று சொன்ன
நீதிகளையுஞ் சற்றும் உட்கொள்ளாமல் துரியோதனன் சிறிதும் அவர்களுக்கு
இடங்கொடுக்கமாட்டேனென்று துணிவாய்க்கூறிவிட்டதுமன்றி அங்குக்
கிருஷ்ணனைக்கொல்லும்படி ஒருதந்திரமுஞ்செய்ய, கிருஷ்ணபகவான் தனது
திவ்விய சக்தியால் மிகப்பெரிதாக விசுவரூபமெடுத்து அதற்குத் தப்பி மீண்டு
பாண்டவரிடம் வந்து அங்கு நடந்த செய்திகளை யெல்