பக்கம் எண் :

201

சல்லிய சௌப்திக பருவங்களின்

அரும்பதவகராதி முதலியன
சல்லிய பருவம்.

அங்கைநெல்லிக்கனி, 110
அச்சு-அச்சாணி, 71
அசலம்-மலை,168
அசுரர்குரு-சுக்கிராசாரியன், 101
அடர்த்தல்-தாக்குதல், 80, 146
அடல்-வலிமை, 163, 167
அடவி-காடு,90
அடுதல்-கொல்லுதல்,2, 185
அடைசி-அடைத்துவைத்து, 25
அடைவே-முறையே, 171
அண்டகோளம்-ஆகாயமுகடு, 139
அணல்-கீழ்வாய், 171
அணி-படைவகுப்பு, 46
அத்திரம்-அஸ்திரம்; அம்புமுதலிய
 கைவிடுபடை; மந்திரத்தோடு
 ஏவுவதுமாம், 31, 80
அத்திரயூகம்-அஸ்திரமெனும் வியூகம், 15
அதலபூமி-பாதளலோகம், 93
அதலபூமியூடாழியமுதமாரும்
 வாயான்-வீமன், 93
அதிபன்-தலைவன், 91
அதிரதர், 5
அநுசர்-தம்பியர், 69, 78, 87, 166
அம்பி -மரக்கலம், 99
அம்பியிழந்த பெருங்கடல்வாணர், 99
அம்ம-உரையசை, 134
அம்மா-வியப்பிடைச்சொல்;
  ஈற்றசை,108
அமையும்-போதும், 77
அயர்கின்றஆவி-குற்றுயிர், 200
அயர்தல்-தளர்தல், 200
அயன்-பிரமன், 59, 101
அயில்-கூர்மை, 4; வேல், 94
அரக்கரொடுசாகைமாமிருகயுத்தம், 68
அரங்கு-சபை,23
அரணி-தீக்கடைகோல், 90
அரம்பையர்-தேவமாதர், 85
அரவம்-ஓசை,115
அரவவிலோதனன்-
 பாம்புக்கொடியையுடையதுரியோதனன், 203
அரவிந்தம்-தாமரை, 3
அரவுயர்த்தவரசன்-பாம்புக்கொடியுடைய
 துரியோதனன், 75
அரற்றல்-கதறுதல், 11
அரா-பாம்பு,96
அரிஏறுதிகழ்பதாகையான்-
 துரியோதனன், 96
அரி-சிங்கம், 67, 163, 167, 173;
 இந்திரன், 183; வாயுதேவன், 174;
  பாம்பு,191.
அரிநாதம் -சிங்கநாதம், கர்ச்சனை, 163
அரிமா-சிங்கம், 199
அரிமகவுஆனோன்-வாயுதேவனுடையகுமாரனான
  வீமன்,174
அரிவயமாஏறுஉயர்த்தசூரன்-ஆண்
 சிங்கத்தின்வடிவ மெழுதிய
 கொடியுடையவீமன், 173
அருக்கன்-சூரியன், 58, 109
அரோ-அசை,63
அலக்கைவித்தகன்-பலராமன், 51
அலகு-அளவு,91
அலங்கல்-பூமாலை, 7
அலம்-கலப்பை, 1, 51
அலமரல்-வருந்துதல்,
 மனஞ்சுழலுதல், 11, 250
அலமுற்றசெங்கையவர்-பலராமன், 1
அலாயுதன்-கலப்பை ஆயுதமுடைய
  பலராமன்,190
அவ்வோன்-அவன், 111
அவண்-அவ்விடம், 147
அவனி-பூமி,18, 31, 143, 201