பக்கம் எண் :

202அரும்பதவகராதி முதலியன

அவித்தைஅறிவில்லாமை, 188
அவிதல்-அழிதல், 84
அவுணர்-அசுரர் 247
அவை-சபை,194
அழல்-கோபம், 36,
  நெருப்பு,165, 173
அழல்பிறந்தாள்-திரௌபதி, 165
அழல்விடநாகேறுஉயர்த்தவீரன்-
 துரியோதனன், 173
அழுக்காறு-பொறாமை, 202
அறத்தின்மைந்தன்-தருமபுத்திரன், 57, 72,150
அறுகால்-வண்டு, 141
அறைதல்-ஒலித்தல், 40
அனல்சகாயன்-அக்கினிக்குத் துணைவனானவாயுதேவன், 190
அனிகம்-காலாட்சேனை, 67,
  சேனை,89, 166
அனிலம்-காற்று, 115
அனிலன்-வாயு, 13
அனிலன்மைந்தன்-வாயுபுத்திரனான வீமன், 13
அனீகினி-சேனை, 155
அஷ்டதிக்பாலகர், 168
ஆ[ஆறு]-விதம், 29
ஆகம்-உடம்பு, 71
ஆகுலம்-விசனம், 13, 125
ஆசுகன்-வாயுதேவன், 204
ஆசுகன்மகன்-வாயுகுமாரனான வீமன், 204
ஆடல்-போர்வெற்றி, 67
ஆண்மை-பராக்கிரமம், 143
ஆதரம்-அன்பு, 4
ஆதவன்-சூரியன், 179
ஆமரம்-ஆச்சாமரம், 178
ஆயர்-இடையர், 188
ஆயோதனம்-போர்செய்யும்இடம்,யுத்தகளம், 147
ஆர்-ஆத்திமாலை, [சோழனது
  அடையாளப்பூமாலை] 96
ஆர்தல் -பருகுதல், 93
ஆர்மாலைவிருகன்-
ஆத்திப்பூமாலையணிந்த
 சோழவரசன், 96
ஆரம்-மாலை65, 109
ஆவி-உயிர்,182, 200
ஆவிஉதவுமறை- இறந்தவரை உயிர்பிக்கும் சஞ்சீவிநி மந்திரம், 199
ஆழி-சக்கரம், 67
ஆளிஏறு-ஆண்சிங்கம், 55
ஆறு-விதம்,58, 140
ஆனனம்-முகம், 58, 171
ஆனாது-தணிவடையாமல், நீங்காமல், 1
ஆனிலன்-வாயுகுமாரனாவீமன், 77, 125
இகல்-வலிமை, 9; போர், 18, 136, 146
இங்கிதம்-குறிப்பு, 20; இனிமை, 182
இசை-புகழ்,158
இசைதல்-இணங்குதல், 161
இடியிடுத்திடுசிகரிகள், 203
இடுக்கண்-துன்பம், 128
இபராசன்-பட்டத்துயானை, 6
இம்பர்-இவ்வுலகம், 117;
இத்திருவவதாரம், 191
இமிழ்த்தல்-பேரொலிசெய்தல், 22
இமையவர்-தேவர், 30, 36
இமையோர்-தேவர், 77
இமையோர்குரு- தேவகுருவான
 பிரகஸ்பதி, 101
இயங்குதல் -செல்லுதல், 36
இயைபின்மையணி, 39
இயம்-வாத்தியம், 156
இரண்டுஎதிர்மறை உடன்பாடு உணர்த்தல், 120
இரணம் -போர், 64
இரதம் -இனியநீர், 116
இரவலோர் -யாசகர், 11
இரவி -சூரியன், 10, 11, 193
இரவிகுமரன்-கர்ணன், 10, 11
இரவு -யாசகம், 11
இராமபாணத்தால் கடல் நொந்தது,74
இரியல்போதல்-தோற்றோடுதல், 204
இரு -பெரிய, 147, 188
இல்பொருளுவமை, 193
இலக்கணை,43, 103, 151
இலகுதல் -விளங்குதல், 91, 171