ஏனல் -தினை, 90 ஐயவணிபடவிகற்பித்துக்கூறல், 172 ஒணாது-முடியாது: ஒன்றாது என்பதன் மரூஉ, 142 ஒப்பில்பொலி, 129 ஒரு-ஒப்பற்ற, 133 ஒருபொருட்பன்மொழி, 144 ஒருமைப்பன்மை மயக்கம், 120 ஓங்கல்-மலை, 163 ஓடை-(முகபடாம்)பொற்பட்டம், 6, 111 ஓதம்-அலை,65, 134 ஓதி -கூந்தல், 165 ஓதை - ஓசை,172 ஓமவுண்டி -அவிஸ் உணவு, 178 ஓவாது-இடைவிடாமல், 172 ஓவுதல் -ஒழிதல், 98 கங்கம் -கழுகு, 160 கங்கைமகன்-வீடுமன், 131 கசம்-யானை,84 கசரததுரகபதாதி, 84 கட்டுரைத்தல்-தெளிவாகக் கூறுதல்,150 கடவுதல்-செலுத்தல், 22 கடனீ-தியேறினர்க்குக்கழிகடத்தலரியதொன்றோ, 16 கடிதடம்-இடை, 192 கடிய-விரைவுள்ள, 22 கடையுகநாள்-கற்பாந்தகாலம், 167 கண-தாட்சணியம், 159 கண்டாய்-தேற்றப்பொருளில்வருவது, 118 கண்ணன்விடை ஏழ் அடர்த்தமை, 146 கண்ணினுக்குஇமை பாதுகாவல், 54 கணை -அம்பு, 38, 39 கதி-குதிரையின் பலவகை நடை, 74 கதிரவர்இருவர் - சூரிய சந்திரர், 148 கதுப்பு-கன்னம், 171, 187 கம்பித்தல்-சலனமடைதல், 104; துடித்தல், 191 கமலம் -தாமரை, 157 கயம் -யானை, 78 கயமுனி கசன் என்னும் முனிவன், 101 கரடம்-கன்னம், 199 கரம் - கை,145 கரிமா -யானை, 199 கரும்புயல் -காளமேகம், 147 கலங்கல் -எதிர்மறைவினைமுற்று, 134 கலவம் -தோகை, 28 கலவமாமயிலொழித்துப் பஞ்சானனம் எழுதியதனிக்கொடிக்கந்தன் - வீமன்,28 கலன்-ஆபரணங்கள், 7 கவசம்-பாதுகாப்பு, 68 கவந்தம்-தலையற்ற உடற்குறை, நீர், 135 கவரி -சாமரம், 44, 75, 100 கவனம் -விரைவு, 22 கவனமான்-விரைந்து செல்லும் குதிரை,22 கவிகை-குடை,75 கற்பகவிருட்சம் ஐந்து, 134 கறங்கு-காற்றாடி, 84 கனக்குடில்-மேகங்களுக்கு மேலுள்ளவீரசுவர்க்கம், 86 கனக்குலமேழு,39 கனகம்-பொன், 131 கனம்-வலிமை, 29; மேகம், 39, 86, 161 கனிட்டன்-தம்பி, 83 காமன்-மன்மதன், 60 காய்கதிர்மொயம்பன் - சூரியன், 197 கார்முகம்-வில், 21, 49 கார்வான்-கார்காலத்துமேகம், 167 கால்-காற்று, 155 காலுதல்-வீசுதல், வெளிப்படுத்தல், 6, 49 காவலர்-அரசர், 11, 147 காழ்-வலிய,183 காளம்-கருநிறம், 139 காளிந்தி-யமுனாநதி, 162 கிளர்தல்-மேல்எழுதல், 139 |