பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன205

கிளை-பந்துவர்க்கம், 156
குடைதல்-துளைத்தல், 94
குத்திரம்-வஞ்சனை, 15
கும்பித்தல்-அடக்குதல், 104
குமரன் -முருகக்கடவுள், 145
குரகதம் -குதிரை, 23
குரம் -குளம்பு, 23
குரல் -கதிர், 50
குலகிரி-குலபருவதங்கள், எட்டு, 171
குலவுதல்-விளங்குதல், 28
குவடு-சிகரம், 27
குழாம்-கூட்டம், 124
குழை-குண்டலம், 171
குறள்-குறுகியவடிவம்,(வாமனாவதாரம்), 1
குறித்தல் -ஊதுதல், 67
குனித்தல்-வளைத்தல், 21, 61
கூர்தல்-மிகுதல், 140, 147
கூற்று-யமன்,81
கேசரி-ஆண்சிங்கம், 27, 72, 187
கேசரிவெஞ்சாபம்-சிங்கக்குட்டி, 85
கேதனன் -கொடியையுடையவன், 27, 146
கேது-கொடி,88
கைதவம்-வஞ்சனை, 26
கைப்பு-வெறுப்பு, 159
கைம்முகமா-யானை, 14

கைலைவடிவுடையோன்-கைலாசமலைபோல 
 வெண்ணிறமுடைய பலராமன், 161
கொடிஞ்சி-தேருறுப்பு, 23, 131
கொண்டல்-மேகம், 56, 139, 144
கொண்டு-அசை, 127
கொத்து-கூட்டம், 155
கொற்றம்-வெற்றி, 75
கொற்றவர்-அரசர், 44, 155
கோடு-தந்தம், 44; சங்கு, 67
கோடுதல்-வளைதல், 67; தவறுதல், 97
கோண் -வளைவு, 109
கோல்ஓச்சுதல்-செங்கோல்செலுத்தல், 202
கோலம் -பன்றி, 1
கோலுதல்-வளைத்தல், 41
கோறல்-கொல்லுதல், 41, 113, 166
சத்திரம்-வாள்முதலியகைவிடாப்படை என்ப;
 மந்திரமின்றிச்செலுத்தும் ஆயுதமுமாம், 80
சதம் -நூறு, 42
சம்பரன்-காமனுடன்பொருத அசுரன், 60
சமத்காரம்-கற்பித்துக்கூறுதல், 131, 134,135, 138
சமந்தபஞ்சகம் - ஐந்து தடாகங்கள், 154, 162
சமர் -போர், 144
சமரம்-யுத்தம், 8, 77
சமீரணன் -வாயு, 43
சமீரணன்புதல்வன் - வீமன், 43
சர்ப்பகேது- துரியோதனன், 175
சராசனன்-வில்வித்தையில்வல்லதுரோணன்-201
சரோருகம் -தாமரை, 190
சலநிதி-கடல், 20
சலம்-வஞ்சனை, 189; மாறுபாடு கொண்ட வயிரம், 192
சலிப்பு-நிலைகுலைதல், தளர்தல், 114
சாகைமிருகம் - குரங்கு, 68
சாடுதல்-தாக்குதல், 185
சாபம்-வில், 70
சாமந்தர் -சிற்றரசர், 9
சாய்தல் -அழிதல், 91
சாயகம் -அம்பு, 30, 56, 70
சாயை-சாயாதேவி (சூரியன்மனைவி) 12, நிழல் 87
சார்பு-ஆதாரம், 170
சாரிகை-சஞ்சாரக்கிரமம், 169
சாற்றுதல் -சொல்லுதல், 144
சிகரிகள் -மலைகள், 203
சித்து -அறிவு, 104
சிலம்பு-மலை, 39
சிலீமுகம்-அம்பு, 21, 41, 60
சிலை -வில், 27, 39, 144
சிலைமுனி -துரோணன், 46
சீவனம்[ஜீவநம்] உயிர் வாழ்க்கை, நீர், 138
சுதன் -குமாரன், 33, 182