பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன207

திறல் -வலிமை, 4, 32; வல்லமை, 144
தினகரன்-சூரியன் 9, 145
தினகரன்கோமைந்தன்-கர்ணன், 9
தினகரன்கோமைந்தன் மைந்தன் -சித்திரசேனன், 9
தினைக்குரல்-தினைக்கதிர், 50
தீபம்-விளக்கு, இரவெரிமரமுமாம், 62
துகைத்தல்-உதைத்தல், 192
துங்கம்-சிறப்பு, 131
துஞ்சுதல்-இறத்தல், 129
துணிதல்-துண்டுபடுதல், 44
தும்பி-யானை, 76, 99
தும்பைமாலை,போர்செய்வார்க்குரியது, 40, 43
துரக்குதல்-ஓடச் செல்லுதல், 76
துரகம்-குதிரை, 65, 84
துரோணன்மாமதலை-அசுவத்தாமன், 119
துவம்-சத்துவம், [முதற்குறை],126
துளவினான்-துளசிமாலையணிந்த கிருஷ்ணன், 130
துளைக்கரக்கோட்டு நால்வாய்ப்பொற்றை-யானை, 44
துறக்கம்-வீரசுவர்க்கம், 165
துன்னுதல்-கிட்டுதல், 38
தூசி-முன்னணிச்சேனை, 20
தூர்த்தன்-விடன், வஞ்சகனான காமுகன்,52
தூரியம்-துந்துபி வாத்தியம், 184
தெயித்தியர்-அசுரர், 12
தெருமருதல்-திரிதல், 127
தெவ்-பகைவர், 53
தேரவன்-சூரியன், 34
தொடை-பிரயோகம், 37; மாலை, 123
தொல்லை-பழைய, 119
தோடு-பூவிதழ், 16, 115
தோமரம்-ஒருவகை ஆயுதம், 32, 33
தோய்தல்-நீராடுதல், 126
தோயம்-நீர், 104
நகுதல்-சிரித்தல், 42
நடைஒழியாதோன்-எப்போதும்சஞ்சரித்தல் ஒழியாதவாயுதேவன்,167
நம்பி-[ஆண்பாற்சிறப்புப்பெயர்], 191
நயத்தல்-விரும்புதல், 181
நயனம்-கண்,100
நயனமிலாதோன் முதற்குமாரன்-துரியோதனன், 167
நரமேதம்-மனிதரைக்கொன்று செய்யும்யாகம், 153
நராதிபன்-அரசன், 22
நராந்தகன்-நரகாசுரனை அழித்த கண்ணன்,151
நரேசர்-அரசர், 191
நளினம்-தாமரை, 105
நனி-மிகுதிப்பொருளில்வரும் உரிச்சொல், 187
நாகர்கள்-தேவர்கள்,பாதாளலோகத்தார், 168
நாதம்-ஓசை,24
நாமமாயிரமுடைக்கடவுள்- கண்ணன்,66
நாராயணாய-வடமொழியில் நான்காம் வேற்றுமைவிரி, 1
நாராயணாயநம, 1
நால் வாய்- தொங்குகிறவாய், [யானைக்குவந்தது] 44
நாஎழுபான்மையின் உடையோன் - நாக்கைஎழுபகுதியாகவுடைய
 அக்கினிதேவன், 153
நாளம் -உள்துளையுள்ள தண்டு, 105, 139
நான்முகன்-பிரமன், 179
நானம்ஸ்நானம், 7
நானாலுதிக்குநாகர்-அஷ்டதிக்பாலகர், 168
நிகர்த்தல்-ஒப்பாதல், 153, 193
நிசாசரர்-அரக்கர், 178
நிசை-முகபடாம், 35
நிருபர்-அரசர், 20, 45, 88, 202
நிருபாதிபன்-அரசர்களுக்கரசன், 8
நிரை-கூட்டம், 146
நிரைத்தல்-வரிசையாக இருத்தல், 123