பக்கம் எண் :

214அரும்பதவகராதி முதலியன

சிகாமணி-தலையிலணியும் இரத்தினம், 13
சிங்கத்துவசன்-வீமன்,[சிங்கக்கொடியுடையான்], 19
சிந்து-கடல், 39
சிவகுமாரனாதலால்அசுவத்தாமனுக்கு முருகக்கடவுள் உவமை, 42
சிறார்-சிறுவர், புத்திரர், 20
சினை-கிளை,1
சீர்த்தி-மிகுபுகழ், 46
சுடரில்கொளுத்திய சுடரனையார் உபபாண்டவர்கள், 13
சுதன்-புத்திரன், 10
சுருதிநிகழ்நா-வேதம்பயின்றநா, 35
செயிர்-கோபம், 31
சென்னி-சோழன், 15; தலை, 19, 20, 30
சொல்-புகழ், 25
தகல்-தகுதி,16
தடிதல்-தலையறுத்தல், கொல்லுதல், 12
தந்திதேர்பரிகாலாள்- நால்வகைச்சேனை, 16
தருநிலத்தோர்-தேவர்கள் [தரு-கற்பகவிருட்சம்], 34
தழலிடைவருபெருதையல்- திரௌபதி, 12
'தன்வினைதன்னைச்சுடும்' என்பது, 24
தாமம்-மாலை, 16
திரௌபதேயர்- திரௌபதியினிடத்துப்பிறந்த உபபாண்டவர், 14
தினகரன்-சூரியன், 39
துஞ்சுதல்-இறத்தல், 33
துணைவர்-நண்பர்கள், தம்பியர், 25
துப்பு-பவழம், 38
துரகததாமன்-அசுவத்தாமன், 34,
  [துரகதாமாஎனவும் வந்தது, 40]
துள்ளியவிடைபோற் செருக்குதல், 17
தெரிவைபங்கன்-சிவபிரான், 6
தேறல்-கள்,13
தையல்-பெண், திரௌபதி, 12
தையல்புதல்வர்-உபபாண்டவர்கள்,  12
தொழாமுடியோன்-துரியோதனன், 33
தோற்றல்-இழத்தல், 25
நள்ளென்கங்குல்-நள்ளிரவு [நள்- நடு], 35
நீறுடையேறுடைக்கடவுள்-சிவபிரான், 7
நேரி-ஒருமலையின்பெயர்;சோழநாட்டிலுள்ளது, 15
பகடு-யானை,25
பகற்பொழுதில்காகம் கோட்டானை வருத்தும், 1
பண்ணியல்இசையின் வடிவமாம் தெரிவை-உமாதேவி, 6
பதினெண்பூமி, 16
பரத்துவாசன்-அசுவத்தாமன்[பரத்துவாசகுலத்துப் பிறந்தவன்], 2
பருப்பதம்-மலை; [சிவபிரானுக்கு உவமவாகுபெயர்], 8
பருவரல்-துன்பம், 9
பாசறை-படைவீடு, 9, 18, 39, 41, 42
பாடிமாநகர்-படை வீடு, 4
பாடிவீடு-படைவீடு, 1
பாடிவீடுவீதிகளைக்கொண்டிருப்பது, 8
பாதகஞ்செய்கைபார்ப்பனமாக்களுக்கு ஏதம், 21
பாதிநாளிரவு-நடுராத்திரி, 16
பாதிமெய்நீலமாகிய பவளப்பருப்பதம்-சிவபிரான், 8
பாரதம்முடித்த வீரர்-பாண்டவர், 11
பாரிடம்-பூதம், 5, 41
பாளையம்-படைவீடு, 10
பானாள்-பாதியிரவு, 36
பின்னிடுதல்-புறங்கொடுத்தல், 42
புகார்-காவிரிப்பூம்பட்டினம்;சோழர்களுக்குரிய துறைமுக நகரம்,15