புத்தேளிர்-தேவசாதியார், 32 புரவித்தாமா-அசுவத்தாமன், 14 புறமிடல்-முதுகுகாட்டியோடுதல், 9 பொன்றுவித்தல்-அழித்திடுதல், 14 பொன்னி-காவேரிநதி, 15 மகிபதி-அரசன், 31 [மகி-பூமி] மகுடம்-தலை[தானியாகுபெயர்], 22 மண்டலீகர்-மண்டலாதிபதிகளான அரசர்கள்,15 மரு-வாசனை, 9 மருத்து-வாயு,காற்று, 37 மாதுலன்-மாமன், 2 மாருதி-மருத்தின்மகன் வீமன்,[தத்திதாந்தநாமம்], 40 மாழ்குதல்-கலங்குதல், 27, 33 மாறு-மாற்றார், பகைவர்;[பண்பாகுபெயர்], 7 மானபங்கம்-மானக்கேடு, அவமானம்,29 முரண்-வலிமை,3 முருக்குதல்-அழித்தல், 17 முருகு-வாசனை,49 மொகுமொகு-ஈரடுக்கு ஒலிக்குறிப்பு; இரட்டைக்கிளவி, 32 மோகரித்தல்-வீராவேசங் கொள்ளல்,11 யாய்-எனதுதாய், 28 வஞ்சினம்-சபதவார்த்தை, 5 வடதரு-ஆலமரம்,4 வயா-ஆசை, 20 வயிரம்-தீராப்பகைமை, 31, 37 வல்லபம்-வல்லமை, 28 வலம்புரித்தார்-நஞ்சாவட்டைப் பூ, வாண்முனி-அசுவத்தாமன், 12 வாரணம்-யானை,2 வாள்-கொடுமை,ஒளி, 37 வாளா-வீணாய்,13 வாளி-அம்பு,22 விடை-எருது, 17 வித்தகன்-சதுரன், 45 விதலை-மனக்கலக்கம், 7 வியாதன்-வியாசன், 33 விலோசனம்-கண், 35 வெயில்புரிவது- சூரியன் உதிப்பது,10 வேண்டும்-உம்விகுதிபெற்ற ஒருவகைவியங்கோள், 45 வேதபண்டிதன்-அசுவத்தாமன் 21 வேற்றுப்பொருள்வைப்பணி, 15 **** |