பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்27

24.-இருவரும் சங்கநாதஞ்செய்தல்.

தன்பெருந்தனிச் சங்கினை முழக்கினன் றருமன்மாமதலை
                                          வெம்போரில்,
வன்பெரும்பணைச் சங்கினை முழக்கினன் மத்திராதிபன்றிரு
                                               மகனும்,
நன்பெருந்துளைச் சங்குகளெழுப்பிய நாதம் வான் முகடுற நண்ணி,
மின்பெரும்புய லேழுமொத் ததிர்தலின் மிகுகுரற்றனிதமொத்துளதே.

     (இ - ள்.) தருமன் மா மதலை - யமனது சிறந்த குமாரனான
யுதிட்டிரன்,  வெம்போரில் - கொடிய யுத்தத்தில், தன் பெரு தனி சங்கினை-
தனது பெரிய ஒப்பில்லாத சங்கத்தை, முழக்கினன் - (வாயில்வைத்துஊதி)
ஒலிப்பித்தான்; மத்திர அதிபன்திருமகனும் - மத்திரதேசத்தரசனது சிறந்த
புத்திரனான சல்லியனும், வல் பெருபணை சங்கினை - (தன்னுடைய) வலிய
பெருமையுள்ள பருத்த சங்கத்தை, முழக்கினன் - ஒலிப்பித்தான்; (இவ்வாறு),
நல் பெரு துளை சங்குகள் - அழகிய பெரிய உள்துளையுள்ள சங்கங்கள்,
எழுப்பிய - உண்டாக்கின, நாதம் - ஓசை, வான் முகடு உற - ஆகாயத்தின்
மேலிடத்தை யளாவ, நண்ணி - சேர்ந்து, மின் பெரு புயல் ஏழும் ஒத்து
அதிர்தலின் மிகு குரல் தனிதம் ஒத்து உளது - மின்னுகிற பெரிய எழுவகை
மேகங்களும் ஒருமித்து ஆரவாரித்தலால் மிக்க முழக்கத்தையுடைய இடியைப்
போன்றுள்ளது; (எ - று.)

     கற்பாந்தகாலத்தில்ஏழுமேகங்களும் ஒருங்கேயெழுந்து ஒலிக்கிற
இடியின் முழக்கத்தைப் போன்றது, தருமன் சல்லியன் என்ற அவர்கள் செய்த
சங்கநாத மென்பதாம்: உவமையணி.  வெற்றிக்கு அறிகுறியாகவும், போரில்
உற்சாகம் நிகழ்தற்பொருட்டும், சங்கத்தொனிசெய்தல், இயல்பு.  புயல்ஏழ் -
சம்வர்த்தம், ஆவர்த்தம், புஷ்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் என்பன.                                         (24)

25.-இருவரும் விற்போர்செய்தல்.

வில்லெடுத்தனர் வலியுடை நிலையினர்வீக்கு நாண்விரல்களிற்
                                          றெறித்து,
மல்லெடுத்ததோள்வலனுற வளைத்தனர் வடிக்கணைமுனையுற
                                          வடைசிச்,
செல்லெடுத்த பேரிடியென முறைமுறைதொடுத்தனர்தேர்களுஞ்
                                        செலுத்திக்,
கல்லெடுத்தெதிர் மலைந்தவாலியுமணிக் கழுத்துடை
                                  யவனுமேயனையார்.

     (இ -ள்.) கல் எடுத்து - மலைகளைக் கையில் ஏந்திக்கொண்டு, எதிர்
மலைந்த - (ஒருவரோடு ஒருவர்) எதிர்த்துப் போர்செய்த, வாலியும் மணி
கழுத்து உடையவன்உம் ஏ - வாலிசுக்கிரீவர்களையே, அனையார் -
ஒத்தவராகிய தருமனும் சல்லியனும்,- தேர்களும் செலுத்தி - (தங்கள்)
தேர்களை (ஒன்றோடு ஒன்று நெருங்கச்) செலுத்திக்கொண்டு, வில் எடுத்தனர்
- (கையில்) வில்லை யேந்தியவர்களாய், வலி உடை நிலையினர் -
வலிமையுள்ள (விற்போர்க்குஉரிய) நிற்கும் நிலையையுடையவர்களாய், மல்
எடுத்ததோள் வலன் உற வளைத்தனர் - பலம்மிக்க தோள்களின் வலிமை
பொருந்த வில்லை வளைத்தவர்களாய், வீக்கும் நாண் - (வில்லிலே) பூட்டிய
நாணியை, விரல்