(மற்றும்தருமன்)மேல் எதிர்த்துவருகிற, போற்றலன் - பகைவனான சல்லியனது,ஏற்றமும் - மேம்பாட்டையும், பொறாமல் - (பார்த்து) மனம் பொறுக்காமல்,-கலவம் மாமயில் ஒழித்து பஞ்சானனம் எழுதிய தனிக்கொடி கந்தன் -தோகையையுடைய பெரிய மயிலின் வடிவத்தை நீக்கிச் சிங்கத்தின் வடிவத்தையெழுதிய ஒப்பற்ற துவசத்தையுடைய முருகக்கடவுள் போன்ற வீமன்,- குலவுதிண்சிலை குரிசிலை - விளங்குகிற வலிய வில்லைக்கொண்ட வீரனானசல்லியனை, தம் முனை கொண்ட வீரியம் எலாம் கொண்டான் - தனதுதமையனான தருமனிடத்தினின்று (சல்லியன்) கவர்ந்துகொண்ட சிறப்புக்களையெல்லாம் தான் அவனிடத்தினின்றுமீண்டும் கவர்ந்து கொண்டான்;(எ - று.)
என்றது,தன்தமையனது பாகன் வில் குடை இவற்றை ஒழித்திட்ட சல்லியனது தேர்ப்பாகனையும்வில்நாணையும்குடையையும் வீமன் தானெய்த அம்புகளால் அழித்து எதிர்செய்தனன் என்றவாறாம்; சல்லியனால் தருமனுக்கு உண்டாக்கப்பட்ட வலிமைக்குறைவு இங்ஙனம் தருமனுக்கு வீமன் துணைவந்து சல்லியனுக்கு எதிர்செய்தலால் ஒழிதல் பற்றி 'தம்முனைக்கொண்ட வீரியமெல்லாங்கொண்டான்' என்றார்: இனி, 'கொடுத்தான்' என்ற பாடத்துக்கு,தருமனுக்கு வீமன் வேறுபாகனையும் வில்லையும் குடையையும் கொண்டுவந்துகொடுத்தானென்று உரைத்தல் சிறப்பன்று; மேற்கவியில் வருகிற "தனதுதிண்கையிற் சரத்தினும் தம்பிகைச்சரம் விரைந்துடற்றலின்" என்பதுங் காண்க.வலவன் - தேர்ப்பாகன். அழுக்கு - தீயசிந்தை. சுப்பிரமணியமூர்த்தி தனதுகொடியில் மயில்வடிவை யொழித்துச் சிங்கவடிவைக்கொண்டு வந்தாற்போன்றவன் வீமனென்றார், வீமனுக்குச் சிங்கக்கொடியாதலின்; இதனால், பலபராக்கிரமங்களில் வீமன் குமரக்கடவுள் போல்பவனென்பது பெறப்படும். அவனது மயிற்கொடியினும் இவனது சிங்கக்கொடி ஆற்றலுக்கேற்றதாமென்ற கருத்துந்தோன்றும். உபமானத்துக்கு உள்ள மயிற்கொடியுடைமையினும், உபமேயத்துக்கு உள்ள சிங்கக்கொடியுடைமை யாகிய உயர்வு தோன்றக் கூறியதனால், இது மிகையொற்றுமையுருவகவணியின் பாற்படும். பஞ்சாநநம் - பஞ்ச-விரிவான, ஆநநம் - முகத்தையுடையது என்றுசிங்கத்துக்குக் காரணப்பெயர். 'மனத்தழுக்காறிலா, சிலைக்கணைசில, வீரியமெலாங்கொடுத்தான், மயிலொழிந்து' என்பன பாடபேதங்கள். (28) 29.-வீமனும் சல்லியனும்பொருவதைத் தருமன் பார்த்து நிற்றல். தனதுதிண்கையிற்சரத்தினுந்தம்பிகைச்சரம் விரைந்துடற்ற லிற்றடைக்கைக், கனதனுத்தனை யூன்றிநின்றிருவருங்கணக்கறமலையுமாகண்டான், எனது தோள்களிலிளையவன்றனக்குவேறியாதெனுமெண்ணுடை மனத்தான், விநதைகாளையோடுவமைகூர்வலியினான் வேந்தர்யாரினும் புகழ்மிக்கோன். |
(இ - ள்.) விநதை காளையோடு - விநதையின்மகனானகருடனோடு, உவமைகூர்- ஒப்புமை மிக்க, வலியினான்-பலத்தையுடையவனும், |