(இ -ள்.) தனக்கு எதிர் தானே ஆன - (வேறு உவமை பெறாமையால்)
தனக்குத் தானே ஒப்பான, சல்லியன்தானும் - சல்லியனும், மீள - மறுபடி,
சினம் கனல் மூள - கோபாக்கினி (மனத்திற்) பற்றியெழ, வாளம் சிலம்புஎன
சிலையும் வாங்கி - சக்கரவாளமலை போல (வட்டவடிவமாம்படி)
வில்லைவளைத்து, கனம் குலம் ஏழும் சேர கல் மழை பொழிந்தது என்ன -
மேகவர்க்கமேழும் ஒருசேரக்கல்மழையைச் சொரிந்ததுபோல, முனை கடு
கணையால் - கூர்நுனியையுடைய கொடிய அம்புகளால், வீமன் வடிவு எலாம்
மூழ்க-வீமசேனனது உடம்புமுழுவதும் மறையும்படி, எய்தான் -
தொடுத்துப்போர்செய்தான்; (எ - று.)
முதலடியில், உபமானமும் உபமேயமும் ஒன்றேயாகக் கூறியது
இயைபின்மையணி, அவனுக்கு ஒப்பானவன் வேறு இல்லையென்பது கருத்து.
'சினக்கனல்' - உருவகம்: மற்றவை- உவமை. வாளம் - சக்ரவாள
மென்பதன்முதற்குறை: இது, பூமியைச் சூழ்ந்த கடலைச் சுற்றிலும்
கோட்டைமதில்போலச்சூழ்ந்துநிற்பதொருமலை. சிலையும் வாங்கியென்ற
உம்மை - பின்வரும்அம்பெய்தலை நோக்கிய எதிரது தழுவிய
எச்சப்பொருள தென்னலாம்;இசைநிறையுமாம். கன்மழை யென்ற விடத்து
'கனன்மழை' என்று பாடமோதி,நெருப்புமாரி யென்று உரைப்பாரும்
உளர். (39)
40.-வீமனும் சல்லியனும்பொருகையில் நகுலசகதேவரும்
சாத்தகியும் வருதல்.
அறைகழல்வீமன்றானுமங்கர்கோன்பாகன்றானும் முறைமுறை புரிந்தவெம்போர்மொழிவதற்கியாவர்வல்லார் நறைகெழுதும்பைமாலைநகுலசாதேவரென்னும் இறைவருஞ் செங்கண்மாயனிளவலுமிவன்மேற்சென்றார். |
(இ -ள்.) அறை கழல் - ஒலிக்கிற வீரக்கழலையுடைய, வீமன் தானும்-
வீமனும், அங்கர்கோன் பாகன் தானும் - அங்கநாட்டிலுள்ளார்க்கு
அரசனாகியகர்ணனது சாரதியான சல்லியனும், முறை முறைபுரிந்த -
ஒருவரோடொருவர்செய்த, வெம்போர் - கொடிய போரை, மொழிவதற்கு -
சொல்வதற்கு, யாவர்வல்லார் - எவர் வல்லவர்? [எவரும் வல்லரல்ல
ரென்றபடி], (இங்ஙனம்இவ்விருவரும் மிக உக்கிரமாகப் பொருகையில்),- நறை
கெழு தும்பை மாலை-வாசனை வீசுகிற தும்பைப்பூமாலையையுடைய,
நகுலசாதேவர் என்னும்இறைவரும் - நகுலசாதேவரென்னும் அரசர்களும்,
செம்கண் மாயன் இளவலும்- சிவந்த திருக்கண்களையுடைய கண்ண