பக்கம் எண் :

42பாரதம்சல்லிய பருவம்

அந்தணர்க்குரிய நல்லொழுக்கங்களிற் குறைவிலா னென்பது விளங்கும்.

    இதுமுதற் பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீர்மாச்சீரும்
ஈற்றுச்சீர் மாங்காய்ச்சீரும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்.                      (46)

47.-அசுவத்தாமன்அருச்சுனன்மேல் அம்பு தொடுத்தல்.

சென்றுபோர்புரியளவையினருச்சுனன் செழுமணிமுழுநீலக்
குன்று போனிறம் பவளவான்குன்றெனக் குருதியிற் சிவப்பேற
ஒன்றுபோல்வனபிறை முகக்கடுங்கணையொருபது தொடுத்திட்டான்
வென்று போர்புரிய வுணரூர் நீறுசெய்வீரன் மைந்தனை யொப்பான்.

     (இ -ள்.) சென்று போர் புரி அளவையின் - போய்ப் போர்
தொடங்கியவளவில்,- அருச்சுனன் - அருச்சுனனது, செழு முழு நீலம் மணி
குன்றுபோல்நிறம் - சிறந்தபெரிய நீலரத்தினமயமானதொரு மலைபோன்ற
மார்பு, பவளம்வான் குன்று என - பவழமயமான பெரிய மலைபோல,
குருதியின் - இரத்தப்பெருக்கால், சிவப்பு ஏற - செந்நிறம்மிகும்படி,- வென்று
போர்புரி அவுணர்ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் -
வெற்றிகொண்டு போரைச்செய்கிறஅசுரர்களுடைய திரிபுரத்தைச்
சாம்பலாக்கின பராக்கிரமமுள்ள சிவபிரானதுகுமாரனான
சுப்பிரமணியமூர்த்தியை யொப்பவனான அசுவத்தாமன்,-ஒன்றுபோல்வன
பிறைமுகம் கடு கணை ஒருபது-ஒன்று போலுள்ள கொடிய பத்து
அர்த்தசந்திர பாணங்களை, தொடுத்திட்டான் - ஒரு பிரயோகத்தில்
எய்தான்;(எ - று.)

    அருச்சுனன் - வெண்ணிறமுடையவ னென்று பொருள்: இது - முதலில்
இந்நிறமுடைய கார்த்தவீரியமகாராசனுக்குப் பெயராயிருந்து, பின்பு,
அவனைப்போன்ற சௌரிய தைரியங்களையுடைய இப்பார்த்தனுக்கு இட்டு
வழங்கப்பட்டது.  இது உவமவாகுபெயரின் பாற்படும்.  பார்த்தன்
கருநிறமுடையவனாதலால், அருச்சுனனென்பது - நிறம்பற்றி வந்த
பெயரென்றல் பொருந்தாது.  இனி, "குருச்சுடர் மணிசெய்பச்சைக்
கொழுந்துடற்பொலிவு நோக்கி, யருச்சுனனென்ப ரீதென்னரும்பெயர் வந்த
பான்மை"என்னும் நல்லாப்பிள்ளைபாரதச் செய்யுளைக்கொண்டு,
அருச்சுனனென்பது -பசுமை நிறம்பற்றிவந்த பெயரென்றலும் ஒன்று;

    ஈற்றடியிற்குறித்த வரலாறு வருமாறு :- தாரகாசுரனது புத்திரர்களாகிய
வித்யுந்மாலி தாரகாட்சன் கமலாட்சன் என்னும் மூவரும் மிக்க தவஞ்செய்து
மயனென்பவனால் சுவர்க்க மத்திய பாதாளமென்ற மூன்றிடங்களிலும்
முறையேபசும்பொன் வெண்பொன்கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு
ஆகாயமார்க்கத்திற் சஞ்சரிக்குந்தன்மையுடைய மூன்று பட்டணங்களைப்
பெற்று, மற்றும்பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த
இடங்களிற் பறந்து சென்று பல இடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்