பக்கம் எண் :

44பாரதம்சல்லிய பருவம்

தையும்,பார்த்தன் - அருச்சுனன், பொடிபடுத்தினன் - (தனது அம்புகளால்)
பொடிபடச்செய்திட்டான்; (அதனால்), 'முனிமகன் - துரோணபுத்திரனான
அசுவத்தாமன், கழிந்த நீர்க்கு அணை கோலி . கடந்துசென்ற
நீர்ப்பெருக்கைத்தடுப்பதற்கு அணையிடமுயல்பவன் போன்று, வந்து
எதிர்ந்து - (அருச்சுனனை)வந்து எதிர்த்து, தன் கார்முகம் கட்டு ஆண்மை
அழிந்து போயினன் - தனதுவலியவிற் போர்த்திறமழிந்திட்டவனானான்' என
- என்று, பெரு சேனை -பெருமையுள்ள (பாண்டவ) சேனை, எழுந்து
ஆர்த்தது - உற்சாகங்கொண்டுஆரவாரித்தது; (எ - று.)

    பெருகிச்சென்று தீர்ந்த வெள்ளத்துக்குப் பின்பு தடுத்து
வைத்தற்பொருட்டு அணைகோலுதலிற் சிறிதும் பயனில்லாமை போல்,
மிகமேலிட்ட அருச்சுனனை அசுவத்தாமன் மீண்டும் எதிர்த்தல் சிறிதும்
பயன்படாது முடிதலால், 'கழிந்தநீர்க்கு அணைகோலி' என்றார், "கழிந்தநீர்க்
கணைகோலுவான் கண்ணெதிருறச் சென்றான்" என்றதும் காண்க.
தன்கார்முகக்கட்டாண்மை யழிந்து போயினன் - வில்லைக்கொண்டு
அம்புதொடுத்து எதிர்க்குந்திறமை நீங்கினா னென்க.  முனைதல் -
உக்கிரமாதல்.                                            (49)

50.-அசுவத்தாமன்வீசியஇருப்புலக்கையை அருச்சுனன்
துணித்தல்.

செருப்புலக்கையாமுரலிடைவிருதராந்தினைக்குரல்களைச்சேர
மருப்புலக்கைகொண்டிடிக்கும்வெஞ்சினமனமத்தவாரணமன்னான்
பொருப்புலக்கையுற்றலமரவரிந்தவன்புதல்வன்மேலொருபாரம்
இருப்புலக்கைகொண்டெறிந்தனனவனுமஃதெண்முறிபடவெய்தான்.

     (இ -ள்.) செரு புலம் கை ஆம் - போர்க்களத்தின் அணிவகுப்பாகிய,
உரலிடை - உரலிலே, விருதர் ஆம் - வீரர்களாகிய, தினைகுரல்களை -
தினைக்கதிர்களை, சேர - ஒருசேர, மருப்பு உலக்கை கொண்டு - (தனது)
தந்தங்களாய உலக்கைகளால், இடிக்கும் - இடிக்கிற, வெம்சினம் மனம் -
கடுங்கோபமுள்ள மனத்தையுடைய, மத்தம் வாரணம் - மதம்பிடித்த
யானையை, அன்னான் - ஒத்தவனான அசுவத்தாமன்,- பொருப்பு-மலைகள்,
உலக்கை உற்று - அழிதலையடைந்து, அலமர - வருந்தும்படி, அரிந்தவன் -
(அவற்றைச்) சிறகறுத்தவனான இந்திரனது, புதல்வன்மேல் - குமாரனான
அருச்சுனன்மேல், ஒரு பாரம் இரும்பு உலக்கைகொண்டு எறிந்தனன் -
கனமான ஓர் இரும்புலக்கையை எடுத்துவீசினான்; அவனும் - அருச்சுனனும்,
அஃது எண்முறி பட - அவ்வுலக்கை எட்டுத்துண்டுபடும்படி, எய்தான் -
அம்புதொடுத்தான்; (எ - று.)

     புலம்- இடம்.  கை - படைவகுப்பு. குரல் - தானியம். முதலிரண்டடி
உருவகத்தை அங்கமாகக்கொண்டு வந்த உவமையணி:  உரலில் தினையை
உலக்கையால் இடிப்பதுபோலப் போர்க்களத்தில் வீரரைத்தந்தத்தாற் குத்தும்
யானை யென்க.  தனது தந்தையை எதிரிகள் கொன்றதனாலாகிய கோபத்தை
அசுவத்தாமன் மனத்திலே மாறாமல் வைத்துக்கொண்டு அதற்குப்பிரதிசெய்யுங்
கருத்துடையவனாதலால்