53 - அருச்சுனன் கிருபனையும்மற்றும்பலரையும் வென்று வீமனைச்சேர்தல். மற்றவன்றனைமுதுகுகண்டவன்றிருமாதுலன்கிருபப்பேர்க் கொற்றவன்புறந்தரமலைந்தேனைவெங்கொடுஞ்சிலைக்குலவேந்தர் முற்றும்வெந்நிடப்பொருதுசல்லியனொடுமுனைபடவெதிர்மோதிச் செற்றவன்புடையன்புடைத்தம்முனைத்தெம்முனைகெடச்சேர்ந்தான். |
(இ -ள்.) (இவ்வாறு அருச்சுனன்), - அவன்தனை முதுகு கண்டு - அவ்வசுவத்தாமனைப் புறமிடக் கண்டு [சயித்துஓட்டி யென்றபடி],-மற்று - பின்பு,- அவன் திரு மாதுலன் - அவனது சிறந்த மாமனாகிய, கிருபன் பேர்கொற்றவன் - கிருபனென்னும் பெயரையுடைய வெற்றிவீரன், புறம் தர - முதுகு கொடுக்கும்படி, மலைந்து - போர்செய்து,-ஏனை - மற்றுமுள்ள, வெம் கொடு சிலை குலம் வேந்தர் முற்றும் - கொடிய வளைந்த வில்லையுடைய உயர்குலத்துத் தோன்றிய வீரர்களெல்லோரும், வெந் இட - முதுகுகொடுக்கும்படி, பொருது - போர்செய்து,- சல்லியனொடு முனை பட எதிர் மோதி செற்ற வன்பு உடை அன்பு உடை தம்முனை - சல்லியனுடன் உக்கிரமாக எதிரிலே போர்செய்து (அவனை) வென்ற வலிமையையுடையவனும் (தன்னிடத்து) அன்புள்ளவனுமாகிய தனக்கு அடுத்த தமையனான வீமனை, தெவ் முனை கெட - பகைவர் போரழியும்படி, சேர்ந்தான்-; (எ - று.) வீமன்சல்லியனை வென்றதைக் கீழ் - 43-ஆங் கவியிற்காண்க. முதுகுகண்டு, புறந்தர, வெந்நிட என்றவற்றில் ஒருபொருளே மீண்டு வந்ததனால்,பொருட்பின்வருநிலையணி. கொடுமை - வளைவாதலை, 'கொடுமரம்' என்றவில்லின்பெயரிலுங் காண்க. தெவ் + முனை = தெம்முனை;"தெவ்வென்மொழியே தொழிற்பெயரற்றே, மவ்வரின் வஃகான் மவ்வுமாகும்"என்னுஞ் சூத்திர விதி. ஈற்றடியில் பிராசம் காண்க. (53) 54.-வீமனால் தோற்றசல்லியனுக்குத் துரியோதனன் உதவியாதல். தயங்குவெண்குடைச்சல்லியன்றண்டுடைச்சமீரணன்மகன்றன்னால் உயங்குவெம்பரிபாகுதேர்வரிசிலையுயர்த்தவண்கொடியற்றுத் தியங்குகின்றபேரிறுதிகண்டுயங்குதல்சிந்தையிற்சிறிதற்ற புயங்ககேதனன்கண்ணினுக்கிமையெனப்பொருபடையுடன்சேர்ந்தான். |
(இ -ள்.) தயங்கு - விளங்குகின்ற, வெள் குடை - வெண்கொற்றக்குடையையுடைய, சல்லியன்-, தண்டு உடை - கதாயுதத்தையுடைய, சமீரணன் மகன் தன்னால் - வாயுகுமாரனான வீமனால், உயங்கு வெம் பரி - வருத்தமடைகிற கொடியகுதிரைகளும், பாகு - சாரதியும், தேர் - தேரும், வரி சிலை - கட்டமைந்த வில்லும், உயர்த்த வள் கொடி - உயரநாட்டிய அழகிய கொடியும், அற்று - துணிபடப்பெற்று, தியங்குகின்ற பேர்இறுதி - சோர்கின்ற மிக்க தோற்ற நிலையை, கண்டு - பார்த்து, உயங்குதல்சிந்தையில் சிறிது அற்ற புயங்க கேதனன் - மனத்திற் சோர்வு சிறிதுமில்லாத பாம்புக் |