பக்கம் எண் :

48பாரதம்சல்லிய பருவம்

கொடியனானதுரியோதனன், கண்ணினுக்கு இமை என-கண்ணுக்கு இமை
பாதுகாவலாதல்போல, பொரு படையுடன் சேர்ந்தான் - போர்செய்யவல்ல
சேனையுடனே (சல்லியனுக்குஉதவியாய்) வந்து சேர்ந்தான்; (எ - று.)

    ஏதேனும் இடையூறு நேருஞ் சமயத்து விரைந்து அடுத்து நின்று
பாதுகாத்தல்பற்றி, 'கண்ணினுக்கிமையென' என்று உவமை கூறினார்.
'பேருறுதி' என்ற பாடத்துக்கு, அது இகழ்ச்சிக் குறிப்பு.

55.-சல்லியன் மீளவும்போர்க்குச் சித்தனாதல்.

சாத்தகிப்பெயரவன்சமீரணன்மகனகுலன்வெஞ்சாதேவன்
பார்த்தனென்றிவரனைவருமிவர்பெரும்படைத்தலைவனுஞ்சேர
ஆர்த்தெழுந்துமேல்வருதல்கண்டணிகழலாளியேறனையானும்
பேர்த்துமுந்துறத்திருகினனரசொடும்பெரும்படையொடுமம்மா.

     (இ -ள்.) சாத்தகி பெயரவன் - சாத்தகியென்னும் பெயரையுடையவனும்,
சமீரணன் மகன் - வீமனும், நகுலன் - நகுலனும், வெம்சாதேவன்-
(பகைவர்க்குக்) கொடிய சகதேவனும், பார்த்தன் - அருச்சுனனும், என்ற-,
இவர் அனைவரும் - இவர்களெல்லோரும், இவர் பெரு படை தலைவன்உம்-
இவர்களுடைய பெரிய சேனைத்தலைவனும், சேர - ஒருசேர, ஆர்த்து
எழுந்து- ஆரவாரஞ்செய்து கிளர்ந்து, மேல் வருதல் - தன்மேல்வருதலை,
கண்டு-,அணி கழல் ஆளி ஏறு அனையானும் அணிந்த வீரக்கழலையுடைய
ஆண்சிங்கம் போன்ற சல்லியனும், அரசொடும் - துரியோதனராசனுடனும்,
பெருபடையொடும் - பெரிய சேனைகளுடனும், பேர்த்தும் - மீளவும்,
முந்துஉறதிருகினன் - (போருக்கு) முற்படத் திரும்பிவந்தான்; (எ - று.)-
அம்மா -ஈற்றசை; வீமனாற் பலவாறு அழிந்தவன் மீண்டுந் துணிவுகொண்டு
போருக்குவந்த உறுதியை விளக்கும் வியப்பிடைச்சொல்லுமாம்.

    படைத்தலைவன் - திட்டத்துய்மன்.  படைத்தலைவரும் என்ற
பாடத்திற்கு - திட்டத்துய்மனும் அவனுக்கு உள்ளடங்கிய சேனாபதிகளும்
என்க.  'அரசொடும்' என்பதற்கு - அரசர்களுடனே யென்றும்
பொருள்கொள்ளலாம்; அப்பொருளில், அரசு - சாதிப்பெயர்.    (55)

56.-சல்லியன்சாத்தகியையும் நகுலனையும் வெல்லுதல்.

தண்டுழாய்முடிமாயவன்றம்பியைச்சாயகம்பலகோடி
கொண்டுதேர்முதலியாவையுமழித்துமெய்குலைந்திடும்படிமோதி
மண்டுபாய்பரிநகுலனையன்புடைமருகனென்றெண்ணாமற்
கொண்டல்வாயிடிநெருப்பெனச்சிற்சிலகூரவாளியினெய்தான்.

     (இ -ள்.) (சல்லியன்), தண் - குளிர்ச்சியான, துழாய் - திருத்துழாய்
மாலையைச் சூடிய, முடி - முடியையுடைய, மாயவன் - கண்ணனது, தம்பியை
- தம்பியான சாத்தகியை, பல கோடி சாயகம் கொண்டு - அநேக
கோடிக்கணக்கான அம்புகளைக்கொண்டு, தேர் முதல் யாவையும் அழித்து -
தேர் முதலிய எல்லா உபகரணங்களையும்