திருத்துழாயினாலாகிய, புதிய தாரினான் - புதியமாலையையுடைய கண்ணனது,அநுசன் - தம்பியான சாத்தகியும், வில் குருவை - வில்லாசிரியனானதுரோணனை, முன் பொருத - முன்பு (பதினைந்தாநாட் போரிலே) போர்செய்து கொன்ற, சோமகேசபதி மெய் புதல்வன் - சோமகுலத்துத்தலைவர்களுக்குத் தலைவனான துருபதனது உண்மைப்புத்திரனானதிட்டத்துய்மனும், மற்றும் உள சூரர் ஆனவரை - மற்றும் உள்ள வீரர்களும்ஆகிய எல்லோரையும், முற்றுற விலக்கி - முழுவதும் விலக்கி, உதிட்டிரன் -தருமபுத்திரன், மாமன் ஆகியும் எதிர் மிகைத்து வரு மத்திரனை -(தங்களுக்கு) மாமனாகஇருந்தும் (சோற்றுக்கடன்முறையால்) எதிரிலேசெருக்கிவருகிற சல்லியனை, வா எனா - 'வா' என்று உற்சாகத்தோடு சொல்லி, அமர்தொடங்கினன் - (அவனோடு) போரைத் தொடங்கினான்; (எ - று.) அநுசன்- பின்பிறந்தவன். யுதிஷ்டிரன் என்ற பெயர் - யுதிஸ்திரன் எனப் பிரிந்து, போரிற் பின்வாங்காதுநிற்பவ னென்று பொருள்படும். தனது தம்பியருள் நகுலசகதேவர்க்கு மாமனாதலையே ஒற்றுமை நயத்தால் இங்ஙனம் எடுத்துக்கூறினார்; அன்புக்கு உரியவனாயிருந்தும் அவனைவிட்டுப் பகைகொண்டா னென்க. 70.-தருமன் சல்லியன்மேல்அம்புதொடுத்தல். வீரசாபமொரிமைப்பினில்வளைத்தெதிர்கொள் வேகசாயகவிதத் திறமெனைப்பலவும், மாரசாயக மெனச்சிகரமற்புயமுமார்பு மூழ்கவுடன் முற்றுமுனையிற்புதைய, ஈரமான குருதிப்பிரளயமெப்புறமும்யாறுபோல் பெருகவெற்றுதலும் வெற்றிபுனை, சூரர்யாரினுமிகுத்திருண்முடிக்கவருசூரனாமெனவியப்புடைய மத்திரனே. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ -ள்.) (தருமன்), வீர சாபம் - வலிய வில்லை, ஒர் இமைப்பினில் வளைத்து - ஒருநொடிப்பொழுதிலே வளைத்து, எதிர் கொள் - (பகையை) எதிர்த்தற்குஉரிய, வேகம் - விரைவுள்ள, சாயகம்விதம் திறம்எனை பலஉம் - மிகப்பலவகைப்பட்ட பாணவர்க்கங்களெல்லாம், மார(ன்)சாயகம் என - மன்மதபாணம்போல, சிகரம் மல் புயமும் - மலைச்சிகரம்போன்ற வலிமையையுடைய (சல்லியனது) தோள்களிலும், மார்பும் - மார்பிலும், மூழ்க - அழுந்தும்படியாகவும், உடல் முற்றும் - அவனுடம்புமுழுவதும், முனையின்புதைய - அம்புமுனைகளால் மறையும்படியாகவும், ஈரம் ஆன குருதி பிரளயம் - ஈரமுள்ள இரத்தவெள்ளம், எ புறமும் - எல்லாப்பக்கங்களிலும், யாறுபோல் பெருக - நதிபோலப் பெருகும்படியாகவும், எற்றுதலும் - தாக்கினவளவிலே,- வெற்றி புனை சூரர் யாரினும் மிகுத்து - சயங்கொண்ட வீரர்களெல்லோரினும் மேம்பட்டு, இருள் முடிக்க வரு சூரன் ஆம் என - இருளை யழித்தற்கு வருகிற சூரியன் போல்வா னென்று கூறும்படி, வியப்பு உடைய-(யாவரும்) அதிசயிக்கத்தக்க குணமுள்ள, மத்திரன் - மத்திரநாட்டரசனான சல்லியன், (எ - று.)-'கணைகள் ஏவினான்' என வருங்கவியில் முடியும். |