குமாரனாய்ஸ்ரீராமனாகத் திருவவதரித்து அரக்கர்கள் அனைவரையும் அழித்துநல்லோரைக்காத்தருளினன். 8. 9.துஷ்ட அசுரர்கள்பலரும் கெட்ட அரசர்கள் பலரும் ஒருங்கே கூடிவசிப்பதனாலுண்டான பூமிபாரத்தை நிவிருத்தி செய்யும்பொருட்டு அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டியதனால் திருமால் வசுதேவகுமாரராய்ப் பலராமகிருஷ்ணர்களாகத் திருவவதரித்தான். 10. கலியுகத்தின் இறுதியில் முழுவதும் அழிகிற தருமத்தை நிலைநிறுத்தும் பொருட்டுத் திருமால் சம்பளமென்னுங்கிராமத்தில் ஓரந்தணன் மகனாய்க் குதிரைவடிவங்கலந்த மனிதவடிவமாய்த் தோன்றி வேதவடிவமான குதிரையின் மேலேறிக் கையில்வாட்கொண்டு கொடுங்கோல் மன்னரனைவரையுங் கொன்று தருமத்தை நிலைநிறுத்துவன். இரணியன்வரம்பெற்றிருந்ததற்குஏற்ப அவனைக்கொல்லுதற்கு மாயவன் மனிதத்தன்மையும் விலங்கின்தன்மையுங் கலந்ததொரு வடிவத்தை எடுத்தருளினான், 'நெடுநரசிங்கம்' என்றது, அவ்வடிவத்தின் அளவிறந்த வளர்ச்சியைக் கருதி. பரசுராமன் க்ஷத்திரிய வம்சத்தின் மேற்கொண்ட தீராக்கோபத்தை, அவன் பகையழிக்கும் போர்க்கருவியான கோடாலியின் மேல்ஏற்றி 'ஆனாதுசீறுமழு' என்றார். திருமாலுக்கு மற்றும்பற்பல அவதாரங்கள்நூல்களிற் கூறப்படினும் இப்பத்தும் முக்கியாவதாரங்களாமென உணர்க. குதிரைக்குப்பலவகைநடைமல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வாநரகதி விருஷபகதி முதலியன. திர்யக்சாதியிற்சேர்ந்த நான்கு அவதாரங்களையும் ஒன்றாகவும், தேவசாதியிற்சேர்ந்த அவதாரத்தை ஒன்றாகவும், மனுஷ்யசாதியிற்சேர்ந்து ஒவ்வொரு ஆயுதத்தைத் தமக்கு நிரூபகமாகக்கொண்டு ஒரேபெயர்பெற்ற மூன்று அவதாரங்களை ஒன்றாகவும், பாரத கதாபுருஷர்களுள் தலைமைபூண்டு அக்காலத்தில் பூமிபாரநிவிருத்தி செய்து கொண்டு நின்ற பிரதான அவதாரத்தை ஒன்றாகவும், இனி நடக்கவிருக்கும் அவதாரத்தை ஒன்றாகவும் பிரித்துக் காட்டுபவராய், ஆங்காங்கு 'ஆகி', 'ஆய்'என்ற சொற் கொடுத்தார். நாராயணனென்ற திருநாமம் - நாரஅயந எனப்பிரிந்து, சிருஷ்டிப்பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமானவ னென்றும், பிரளயப் பெருங்கடலை இருப்பிடமாக வுடையவனென்றும் மற்றும்பலவாறும் பொருள்படும். இப்பாட்டு- மொழிமாற்று முதலியன இன்மையால், யாற்று நீர்ப்பொருள்கோள். குறள் - குறுகிய வடிவம்: இரண்டடியளவுள்ள வடிவம் குறளெனப்படும். வில்லு, உ - சாரியை. இராமன்வில் - கோதண்டமெனப் பெயர் பெறும். நாராயணாய - வடமொழியில் நான்காம் வேற்றுமைவிரி. இதுமுதற்பத்துக் கவிகள் - பெரும்பாலும் முதலைந்துசீரும் காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். (1) |