பக்கம் எண் :

60பாரதம்சல்லிய பருவம்

வேறு

73.- சல்லியன் இறந்ததனால்கௌரவசேனை நிலைகுலைதல்.

தொட்டவரி சிலைத்தடக்கையிராம னென்னத் தொடுத்தகணை
                            தப்பாமற் றொழாத வேந்தர்,
இட்டகவ சமுமார்பும் பிளந்தபின்னரெடுத்ததொரு
                           வடிவேலாலிளையோ னென்ன,
மட்டவிழுந்தும்பை யந்தார்த் தருமன் மைந்தன்
                        வாகுவலியுடனெறிய மத்திரேசன்,
பட்டனனென் றணிகுலைந்து முதுகிட் டோடிப்படாதுபட்ட
                        துயர்த்தபணிப்பதாகன் சேனை.

     (இ -ள்.) தொட்ட - ஏந்திய, வரி - கட்டமைந்த, சிலை -
(கோதண்டமென்னும்) வில்லையேந்திய, தட - பெரிய, கை - கையையுடைய,
இராமன் என்ன - இராமன்போல, தொடுத்த கணை தப்பாமல் - எய்த அம்பு
குறிதவறாதபடி, தொழாத வேந்தர் இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் -
வணங்காத பகையரசர்கள் தரித்துள்ள கவசத்தையும் மார்பையும் (அம்புகளாற்)
பிளந்தபின்பு,- எடுத்தது ஒரு வடிவேலால் - கையிலெடுத்ததொரு
கூரியவேலாயுதத்தால், இளையோன் என்ன - முருகக்கடவுள்போல, மட்டு
அவிழும் அம் தும்பை தார் தருமன் மைந்தன் - வாசனை வீசுகிற அழகிய
தும்பைப்பூமாலையையுடைய தருமபுத்திரன், வாகு வலியுடன் எறிய -
தோள்வலிமையோடு வீச, (அதனால்), மத்திர ஈசன் - மத்திர நாட்டரசனான
சல்லியன், பட்டனன் - இறந்தனன், என்று - என்ற காரணத்தால், உயர்த்த
பணி பதாகன் சேனை - உயரநாட்டிய பாம்புக் கொடியையுடைய
துரியோதனதுசேனை, அணிகுலைந்து - அணிவகுப்பின் ஒழுங்கு கெட்டு,
முதுகுஇட்டு ஓடி -தோற்று ஓடி, படாது பட்டது - படாதபாடுபட்டது; (எ-று.)

    வேலினாலெறிதற்கு வேலனான முருகனை உவமைகூறினார்.
சுப்பிரமணியன் சிவபிரானது இளையகுமார னாதலால்,
இளையோனெனப்பட்டனன்.  இனி.  'இளையோனென்ன' என்பதற்கு -
இராமன் தம்பியான இளையபெருமாள் [லக்ஷ்மணன்] போல என்று
உரைப்பாருமுளர்.  படாதுபட்டது - ஒரு நாளும் படாத மிக்கபாடு பட்டது.

    இதுமுதற் பதினான்கு கவிகள் - பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து
ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள்.                      (73)

74.-சல்லியனைச் சேர்ந்தஎழுநூறுவீரர்கள் தருமனை
யெதிர்த்தல்.

மதிகண்டபெருங்கடல்போற்குந்திமைந்தர் வன்சேனையார்ப்பது
                                   வுமன்னன்சேனை,
நுதிகொண்ட கனல் கொளுத்துமிராமபாணநுழைகடல்
                     போனொந்ததுவு நோக்கி நோக்கிக்,
கதிகொண்டபரித்தடந்தேர்ச்சல்லியன்றன் கண்போல்
                         வாரெழுநூறுகடுந்தேராட்கள்,
விதிகொண்ட படைபோல் வெம்படைகளேவிவெம்முரசக்
                         கொடிவேந்தன்மேற்சென்றாரே.