பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்65

79.-வீமன் மற்றும்துரியோதனன் தம்பியரைவரை
யெதிர்த்தல்.

தனக்கு நிகர்தானான கிருதவன்மன்றம்பியர்களெழுவர்படத்தம்
                                         முன்பட்ட,
மனக்கவலையறிந்துபெருஞ்சேனையோடு மற்றவன்றம்
                               பியரைவரோடும் வந்து,
சினக்கதிர்வேல்வீமனுயிர்செகுப்பானெண்ணிச்செருச்செய்தானிமைப்
                                  பளவிற்றிருகியோட,
எனக்கிவரேயமையுமெனப் புறக்கிடாத இளையவர்
                      மேற்கடுங்கணையைந்தேவினானே.

     (இ -ள்) தம்பியர்கள் எழுவர் பட-தம்பிமார் ஏழுபேர் இறக்க,
தம்முன்பட்ட - தமையனான துரியோதனன் அடைந்த, மனம்கவலை-
மனக்கலக்கத்தை, அறிந்து - உணர்ந்து,- தனக்கு நிகர் தான் ஆன
கிருதவன்மன் - (வேறு ஒப்புமையில்லாமையால்) தனக்குச்சமானம்
தானேயாகிய கிருதவர்மன்,- பெரு சேனையோடும் - பெரிய சேனையுடனும்,
மற்று அவன் தம்பியர் ஐவரோடும் - அத்துரியோதனன் தம்பிமார் வேறு
ஐந்துபேருடனும், வந்து-, சினம் கதிர்வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி
- கோபத்தையும் ஒளியையுடைய வேலாயுதத்தையுமுடைய வீமனது உயிரைத்
தொலைக்க நினைத்து, செரு செய்தான் - போர்செய்தானாய், (அப்பொழுது
வீமன் எதிர்த்துப்போர் செய்யவே.) இமைப்பு அளவில் - கண் இமைக்குங்
காலத்திற்குள், திருகி ஓட - (தன் சேனையுடன்) புறமிட்டோட, புறக்கு
இடாதஇளையவர்மேல் - புறங்கொடாதுநின்ற துரியோதனன்தம்பியர்
ஐவர்மேல்,எனக்கு இவரே அமையும் என - எனக்கு இவர்களே
போதுமென்று, கடுகணை ஐந்து ஏவினான் - கொடியஐந்து அம்புகளைச்
செலுத்தினான்; (எ - று.)

    நூற்றுவருள் முந்தினநாள்களில் இறந்தவர் போக மற்றையோரை
யெல்லாம் அன்றைக்கே கொன்றொழித்துத்தனது சபதத்தை
நிறைவேற்றிவிடவேண்டு மென்பது வீமன்கொண்ட சங்கற்பமாதலால், அதற்கு
ஏற்ப, எனக்கு இவரேயமையுமென இளையவர்மேற்கணையேவினான்.  இந்த
ஐவர் பேர், அடுத்தகவியில் விளங்கும், இவரேயமையும் என்பதற்கு -
இவர்களைக் கொல்லுதலே போதுமென்று இலக்கணையாற் பொருள்கொண்டு
கூறினுமாம்.  கதிர் - கூர்நுனியுமாம்.                           (79)

80.-அவ்வைவரும் வீமனால்இறத்தல்.

சித்திரவாகுவினோடுபெலசேனன்போர்ச் செயசூரன்
                            சித்திரனுத்தமவிந்தென்றே,
அத்திரவில்லாண்மையினிற்றிகழாநின்றவைவரிவர்யாவரையு
                                 மடர்ப்பான்வந்தோர்,
சத்திரம்யாவையுமேவிச்சங்கமூதிச்சமர்விளைத்தார்நெடும்பொழுது
                                       சமீரணன்றன்,
புத்திரனான்முன்சென்றவெழுவரோடும் பொன்னுலகங்குடிபுகுந்தார்
                                 புலன்கள்போல்வார்.

     (இ -ள்.) சித்திரவாகுவினோடு - சித்திரவாகுவும், பெலசேனன் -
பலசேநனும், போர் - போரில்வல்ல, செயசூரன் - ஜயசூரனும், சித்திரன் -
சித்திரனும், உத்தமவிந்து - உத்தமவிந்தும், என்று - என்று பெயர் பெற்று,
அத்திரம் வில் ஆண்மையினில் திகழாநின்ற - அஸ்திரங்