பக்கம் எண் :

68பாரதம்சல்லிய பருவம்

யும் -காந்தாரதேசத்தார்க்கு அரசனானசகுனியும், தன்கனிட்டன் ஆன
வேந்தனும் - அவனுக்குத் தம்பியான அரசனும், மன்னவனுடன் -
துரியோதனராசனோடும், பல்வேந்தரோடும் - மற்றும் பல அரசர்களுடனும்,
வெம்பனை கை பல கோடி வேழத்தோடும் - கொடிய பனைமரம்போன்ற
துதிக்கையையுடைய அநேககோடி யானைகளுடனும் கூடி, ஏந்து தட புயம்
சிகரி வீமன்தன்னோடு இகல் மலைந்து - உயர்ந்தபெரிய மலைகள்போலுந்
தோள்களையுடைய வீமசேனனோடு போர்செய்து, தொலைந்து இரிந்தார் -
தோற்றுஓடினார்கள்; இவரை அல்லால் - இவர்களையன்றி மணி ஊர்ந்த
பணிகொடியோன் இளைஞர்ஒன்பதின்மர் - மணியையுடைய ஊர்ந்துசெல்லும்
பாம்பின் வடிவை யெழுதிய அழகிய கொடியையுடைய துரியோதனனது
தம்பிமார் ஒன்பதுபேர், மீள - மறுபடி, வந்து அவனுடன் உடற்றினார் -
வந்துஅவ்வீமனோடு போர் செய்தார்கள்; (எ - று.)

    துதிக்கைக்குப் பனைமரம் உவமை, திரண்டுஉருண்டு, நீண்ட கரிய
பெரியவடிவிற்கு.  புயச்சிகரி யென உருவகம்போலக் கூறினும், சிகரிப்புயம்
எனஉவமையாக்கி யுரைத்தலே தகுதி, தொடர்ச்சிதோன்றக் கூறாமையின்,
சிகரீ -சிகரமுடையது எனப் பொருள்.  ஒன்பதின்மர் பெயர், அடுத்தகவியில்
விளங்கும்.  'பணியணிக்கொடியோன்' என்றும் பாடம்.             (83)

84.-துரியோதனன் தம்பியர்ஒன்பதின்மரை வீமன்
கொல்லுதல்.

பிறங்கியவுத்தமனுதயபானுகீர்த்திபெலவன்மன் பெலவீமன்
                                  பிரபலதானன்,
மறங்கிளர் விக்கிரமவாகுசுசீலன்சீலன் வருபெயர்
                   கொளொன்பதின்மர்வானிலேறத்,
திறங்கொள் கசரததுரகபதாதி கோடிசேரவொருகணத்தவியச்
                               சிலைகால்வாங்கிக்,
கறங்கெனவே சூழ்வந்துபொருதான் வீமன் கட்டாண்மைக்கிது
                           பொருளோகருதுங்காலே.

     (இ -ள்.) பிறங்கிய -விளங்குகிற, உத்தமன் -, உதயபானு -, கீர்த்தி-,
பெலவன்மன் - பலவர்மா, பெலவீமன் - பலபீமன், பிரபலதானன் -
ப்ரபலதாநன், மறம் கிளர் - பராக்கிரமம்மிக்க, விக்கிரமவாகு - விக்கிரமபாகு,
சுசீலன் - ஸு சீலன், சீலன்-, வரு - என்று சொல்லப்பட்டு வருகிற, பெயர் -
பெயரை, கொள்-கொண்ட, ஒன்பதின்மர் - ஒன்பதுபேர், வானில் ஏற -
வீரசுவர்க்கத்திற் சென்றேறும்படியாகவும், திறம் கொள் - வலிமைகொண்ட,
கசரததுரக பதாதி - யானை தேர் குதிரை காலாட்கள், கோடி -
கோடிக்கணக்கானவை, சேர-ஒருசேர, ஒரு கணத்து அவிய -
ஒருக்ஷணப்பொழுதிலே அழியும்படியாகவும், வீமன் -, சிலை கால் வாங்கி -
வில்லை வளைத்து, கறங்கு என சூழ் வந்து - காற்றாடி போலச் சுழன்றுவந்து,
பொருதான் - போர் செய்தான்; கருதுங்கால் - ஆலோசிக்குமிடத்து, கட்டு
ஆண்மைக்கு - (வீமனது) உறுதியான போர்த்திறமைக்கு, இது பொருளோ -
இங்ஙன் பொருதது ஒருபொருளாவதோ? (எ - று.)

     வீமனதுஅதிபலபராக்கிரமத்துக்கு இவை ஒருபொருளாகாஎன்றதைப்
பொதுப்பொருளாகவும்மற்றதைச்சிறப்புப் பொருளாக