பக்கம் எண் :

74பாரதம்சல்லிய பருவம்

(அந்தச்சகுனியின்) மருமகனான துரியோதனராசன், மாமன் உதவி ஆ -
தன்மாமனானசகுனிக்குச்சகாயமாக (வந்து), மதி கொள் ஞானி பூண் மார்பில் -
(யாவரும்) மதித்தலைக்கொண்ட தத்துவஞானமுடையவனான சகதேவனது
ஆபரணங்களையணிந்த மார்பிலே, உருவ - ஊடுருவிச்செல்லும்படி, ஒர் கூர்
வேல் வீசினான்-கூரியதொரு வேலாயுதத்தை யெறிந்தான்; (எ - று.)

    'விரகறாத' என்றது, விடலைக்கு அடைமொழி; சூதுக்குந் தகும். 
எழில் -வளர்ச்சியுமாம்.                                     (92)

93.- அதுகண்டு வீமன்துரியோதனன்மேல்
அம்புதொடுத்தல்.

எதிரிலாததோளாண்மையிளவறேரின் மேல்வீழ
உதவியாகவேலேவுமுலகுகாவலான்மார்பின்
முதுகிலோடவேநூறுமுழுகவேவினான்வாளி
அதலபூமியூடாழியமுதமாரும்வாயானே.

     (இ -ள்.) எதிர் இலாத - ஈடில்லாத, தோள் ஆண்மை-புயவலிமையை
யுடைய, இளவேல் (சகதேவனான தனது) தம்பி, தேரின்மேல் வீழ -
(மூர்ச்சித்துத்) தேர்மேல் விழ,- (அங்ஙனம்விழும்படி), உதவி ஆக வேல்
ஏவும்- (சகுனிக்குச்) சகாயமாக வேற்படையை யெறிந்த, உலகு காவலான்-
நிலவுலகாள்பவனான துரியோதனராசனது, மார்பில்-மார்பிலே,- ஆழி அமுதம்
அதல பூமியூடு ஆரும் வாயான் - பாற் கடலினின்று தோன்றிய
தேவாமிருதத்தைப் பாதாளலோகத்திலே (சென்று) பருகிய வாயையுடைய
வீமன்,-முதுகில் ஓட - (ஊடுருவி) முதுகுவழியிலேசெல்லும்படியும், முழுக -
தைத்து அழுந்தும்படியும், நூறு வாளி ஏவினான் - நூறு அம்புகளைச்
செலுத்தினான்; (எ - று.)

    சகுனிக்குப் பரிந்துவந்து துரியோதனன் சகதேவன்மேல்
வேலெறிந்ததனால் அவன் மூர்ச்சித்துத் தேரில்விழ, அதுகண்டு பரிந்துசென்று
வீமன் துரியோதனன்மேற் பல அம்புதொடுத்தன னென்பதாம். எதிர் - ஈடும்,
எதிரியும்.  அதலபூமி - அதலமாகிய உலகமென இருபெயரொட்டு.

    நான்காமடியிற் குறித்த கதை:- பாண்டவரிடத்து இளமைப்
பருவத்திலேயேபங்காளிக்காய்ச்சல்கொண்ட துரியோதனன் மிக்கபலசாலியான
வீமனிடத்துஅதிக விரோதங்கொண்டு அவனைக் கொல்லும்பொருட்டுச் சகுனி
முதலானாரோடு ஆலோசித்து ஒருநாள் வீமனுக்கு விருந்துசெய்விப்பதென்று
வியாசம் வைத்துச் சமையற்காரரைக்கொண்டு மிக்க விஷங்கலந்த உணவைக்
கொடுத்து உண்பித்து அதனால்மயங்கியிருக்கிற சமயத்தில் அவனைக்
கயிற்றால்கட்டிக் கங்கைநீரிலே போகட்டுவிட, அதில் வீழ்ந்து
பிலத்துவாரவழியாய்ப் பாதாளஞ்சேர்ந்த அவ்வீமனை அங்குள்ள சிறுநாகங்கள்
கடிக்க, முந்தினவிஷம் இவ்விஷத்தால் நீங்கினவளவிலே, கயிற்றுக் கட்டையும்
மெய்வலியால்துணித்திட்ட அவனுக்கு, வாயுகுமாரனென்ற அபிமானத்தோடு
வாசுகி மிக உபசரித்து ஆங்குள்ள அமிருதகல