சங்களிற்சிலவற்றை யுண்பிக்க, வீமன் உண்டு அதனால் முன்னினும் மிக்க வலிமைகொண்டு மீண்டன னென்பதாம். (93) 94.-வீமன்மேல் வேலேவியஅசுவத்தாமனைச் சோழன் தாக்குதல். சமரில்வீமனேவோடுதலைவன்வீழவேபூமி அமரனானதாமாவொரயிலைவீமன்மேலேவ எமர்களாவிபோல்வானொடிகல்செயாமலீசான குமரனாவிபோமாறுகுடைதுநாமெனாவீரன். |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ -ள்.) சமரில் - போர்க்களத்திலே, வீமன் ஏவோடு - வீமன் பிரயோகித்த பாணங்களுடனே, தலைவன் - முதல்வனான துரியோதனன், வீழ- கீழ் விழுந்திட, (அதுகண்டு), பூமி அமரன் ஆன தாமா - பூதேவனாகிய[அந்தணனான] அசுவத்தாமா, ஒர் அயிலை - ஒருவேலாயுதத்தை, வீமன்மேல்-,ஏவ - செலுத்த, (அதுகண்டு), 'எமர்கள் ஆவி போல்வானொடு இகல்செயாமல் - எமக்கெல்லாம் உயிர்போல்பவனாகிய துரியோதனனுடன் போர்செய்யாமல், ஈசான குமரன் ஆவி போம் ஆறு - சிவ குமாரனானஅசுவத்தாமனதுஉயிர் நீங்கும்படி, நாம்குடைதும் - நாம் (அவனைஅம்புகளால்) துளைப்போம்', எனா - என்று சொல்லிக்கொண்டு, வீரன் -வீரனான சோழன், (எ - று.)-இக்கவியில், 'வீரன்' என்றதை, அடுத்த கவியில்வரும் 'மனுகுலேசன்' என்பதற்கு அடைமொழியாக்கி, என்று சொல்லிப்போர்செய்த வீரனான சோழனது வில்வலிமை கூறவொண்ணாததென்று முடிவுகாண்க. நம்மைப்போல அரசகுலத்திற்பிறந்தவ னென்ற அபிமானத்தால் சோழன் வீமனம்பால் விழுந்துகிடக்கிற துரியோதனன்மேற்பரிவுகொண்டு, அவன்மேல் அடுத்துப் பொருதலை விலக்கி, 'போருக்குத் தகுதியில்லாத அந்தணனாய் உறவுமுறையில்லாத அயலானுமாயுள்ள அசுவத்தாமனை அழிப்போம்' என்றான். பூமியில் தேவர்போலச்சிறப்புறுதலால் அந்தணர் பூசுரரெனப்படுதல் பற்றி,'பூமியமரனான தாமா' என்றார். தாமா - முதற்குறையாகிய பெயர். (94) 95. | தனுவின்வேதநூல்வாசிதனயனானதாமாவை முனைகொண்மார்பின்வாய்மூழ்கி முதுகிலோடவேயேழு வினைகொள்வாளிமேலேவிவிதமதாகவேபோர்செய் மனுகுலேசனீள்சாபவலிமைகூறவாராதே. |
(இ -ள்.) தனுவின் வேதம் - தனுர்வேதமாகிய வில்வித்தையையும், நூல்- மற்றைய நூல்களையும் அறிந்த, வாசி தனயன் ஆனதாமாவை - குதிரையினிடம் பிறந்த குமாரனான அசுவத்தாமனை, முனை கொள் மார்பின்வாய் மூழ்கி - வலிமைகொண்ட மார்பிலே அழுந்தி, |