97.-சகதேவன் சகுனிமேல்வேலெறிதல். சகுனியாவிபோமாறுசபதவாய்மைகோடாமன் மகிபனேவுவேல்போலவழுவுறாமன்மேலோட உகவையோடுமாமாயனுதவுகூரநீள்வேலை இகலொடேவினான்வீமனிளவலானபோர்மீளி. |
(இ -ள்.) வீமன் இளவல் ஆன போர் மீளி - வீமனது தம்பியான போரில் வலிய சகதேவன்,- சகுனி ஆவி போம் ஆறு - சகுனியின் உயிர் நீங்கும்படி, சபதம் வாய்மை கோடாமல் - (தான் முன்பு கூறியுள்ள) சபதவார்த்தை தவறாமல்,- மகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல்-(கீழ்த்) துரியோதனராசன் (தன்மேல்) எறிந்த வேலாயுதம்போலக் கொல்லுதல் தவறாமல், மேல் ஓட - மேலே விரைந்து பாயும்படி, உகவையோடு மா மாயன்உதவு கூர நீள் வேலை - மகிழ்ச்சியுடனே சிறந்த கண்ணன் (தனக்குக்)கொடுத்ததொரு கூர்மையுடைய நீண்ட வேலாயுதத்தை, இகலொடு ஏவினான் -வலிமையோடு செலுத்தினான்; (எ - று.)
(கீழ்92, 93 - கவிகளிற் கூறியபடி) சகுனிக்குப் பரிந்துவந்த துரியோதனன் சகதேவன் மேல் எறிந்த வேல் அவனுக்கு மூர்ச்சை மாத்திரத்தை விளைத்துக் கொல்லாதுவிட்டமைபோல, இப்பொழுது சகதேவன்சகுனிமேலெறியும் வேல் அவனைக் கொல்லாமல் விடுதலில்லை யென்பது,'மகிபனேவு வேல்போல வழுவுறாமல் மேலோட' என்பதனால் விளக்கப்பட்டது. உகவை - உகத்தல்: தொழிற்பெயர்: உக - பகுதி, வை - விகுதி. திரௌபதியைத் துகிலுரிந்த காலத்தில் சகதேவன் தான் சகுனியைக் கொல்வதாகச் சபதஞ்செய்துள்ளதனால் அதைத் தவறாது நிறைவேற்றுமாறு வேலெறிந்தனனென்பார், 'சபதவாய்மைகோடாமல்' என்றார். "சகுனிதனை யிமைப்பொழுதிற் சாதேவன் துணித்திடுவேன் சமரிலென்றான்" எனக் கீழ்ச் சூதுபோர்ச்சருக்கத்தில் வந்தமை யுணர்க. (97) வேறு. 98.-சகுனி யிறந்ததனால்போரொழிந்து துரியோதனன் கலங்கல். தாவிய வெம்பரி மாவிர தத்திடைசாதேவன் ஏவிய வேலொடு சௌபல ராசனிறந்தானென்று ஓவிய தெங்கணும் வெஞ்சமர்பார்முழு துடையானும் ஆவி யழிந்தவு டம்பெனவன்மை யழிந்தானே. |
(இ -ள்.) சாதேவன் ஏவிய வேலொடு - சகதேவன் எறிந்த வேலாயுதத்துடனே, சௌபலராசன் - சகுனி, தாவிய வெம் பரி மா இரதத்திடை- தாவிச்செல்லும் வேகமுள்ள குதிரைகள் பூட்டிய தேரிலே, இறந்தான் -,என்று - என்ற காரணத்தால், எங்கணும் - எவ்விடத்தும், வெம் சமர் -கொடிய போர், ஓவியது - ஒழிந்தது: பார் முழுது உடையானும் - பூமிமுழுவதையுந் தன்தாகக்கொண்டு |