பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்79

அரசர்பெருந்தகையரசடையாளமனைத்தும்போய்த்
திருநயனங்களினும்பதமலர்கள்சிவப்பேற.

     (இ -ள்.) மதி - சந்திரமண்டலம்போன்ற, ஒரு வெள் குடை -
ஒற்றைவெண்கொற்றக்குடையும், இரு கவரி குலம் - இரண்டு
சாமரைக்கற்றையும், ஊரும் - ஏறிநடத்தப்படுகிற, சீர் - சிறப்பையுடைய,
இரதம்மதங்கயம் இவுளி - தேரும் யானையும் குதிரையும், பணிகொடி -
பாம்புக்கொடியும், முதல் ஆன - முதலாகிய, அரசு அடையாளம்
அனைத்தும்- (தனக்குஉரிய) இராசசின்னங்க ளெல்லாம், போய் - நீங்க,-திரு
நயனங்களினும் - அழகிய (தனது) கண்களினும், பதம் மலர்கள் -
தாமரைமலர்போன்ற கால்கள், சிவப்பு ஏற - செந்நிறம் மிகப்பெற,- அரசர்
பெருந்தகை - அரசர்களுக்கெல்லாம் அரசனான துரியோதனன், (எ - று.)-
போய், ஏற என்ற எச்சங்கள் 102 - ஆங் கவியில் வரும் 'சென்றான்' என்ற
முற்றைக் கொள்ளும்.  'அரசர் பெருந்தகை' என்பதை, அக்கவியில் வருகிற
'தராபதி' என்பதற்கு அடைமொழியாக்குக.

    நான்காமடியில், கோபத்தாலுள்ள கண்செம்மையை யெடுத்துக்காட்டி
அதனினுங் கால்கள் மிகச்சிவக்க என்றது, தேர்முதலிய வாகனமொன்றுமின்றிக்
கால்களால் விரைந்து நடந்து சென்றானென்பதைவிளக்கும்.  அரசர்
பெருந்தகை - ராஜராஜன்.  போய் = போக; எச்சத்திரிபு.  முதலடியில் ஒரு
இரு என மாறுபட்ட சொற்கள் வந்தது முரண்தொடையின்பாற்படும்.  பதமலர்
= மலர்ப்பதம்: முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை.               (100)

101.

அயனிடையசுரர்குருப்பெறலுற்றதவன்பான்முன்
கயமுனிபெறவிமையோர்குருவிரகொடுகைக்கொண்டு
பயமுறமாமுனிவர்க்குரைசெய்ததுபார்மீதே
உயர்மறையொன்றுளதம்மறையொருமுனியுரைசெய்தான்.

[இறந்தவரைப் பிழைப்பிக்கும் மந்திரத்தின் வரன்முறை, இது.]

     (இ -ள்.) அயனிடை - பிரமனிடத்து, அசுரர் குரு - அசுரர்களுக்குக்
குருவான சுக்கிராசாரியன், பெறல் உற்றது - பெற்றதும், - அவன்பால் -
அந்தச்சுக்கிரனிடத்து, முன் - முன்பு, கயமுனி - கசனென்னும் முனிவன்,
பெற- பெற்றுக்கொள்ள, இமையோர்குரு - தேவகுருவாகியபிருகஸ்பதி,
விரகொடுகைக்கொண்டு - (தான்) தந்திரமாகக் கைக்கொண்டு, பயம் உற -
பயனடையும்படி, மாமுனிவர்க்கு - சிறந்த முனிவர்களுக்கு, உரைசெய்தது -
சொன்னதுமாகிய, உயர்மறை ஒன்று - சிறந்த மந்திரமொன்று, பார்மீதே -
உலகத்திலே, உளது - உண்டு; அ மறை - அந்த மந்திரத்தை, ஒரு முனி -
ஒரு முனிவன், உரைசெய்தான் - (எனக்குக்) கூறியுள்ளான்; (எ - று.)- இக்கவி
- துரியோதனனது உட்கோளாய் அடுத்த கவியோடு தொடரும்.

    முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரும்போர்
நடந்தபொழுது அசுரர்களுக்குக் குருவும்புரோகிதனும் சேனாதி