பதியுமானசுக்கிராசாரியன் தன்பக்கத்தில் தேவர்களாற் கொல்லப்பட்டவ ரனைவரையும் தான் பிரமனிடமிருந்து பெற்றுள்ள சஞ்சீவிநியென்ற மந்திரத்தாற்பிழைப்பித்துவிட தேவர்களுக்குக்குருவும்புரோகிதனும் சேனாதிபதியுமானபிருகஸ்பதி அம்மந்திரத்தைத் தான் அறியாமையால் தம்பக்கத்தில்அசுரர்களாற் கொல்லப்பட்டவர்களை அங்ஙனம் பிழைப்பிக்கமாட்டாதுநின்றான். ஆகவே, தேவர்கள் துன்பமும் அச்சமும் உற்றுப் பிருகஸ்பதியின்மூத்த குமாரனான கசனைச் சரணமடைந்து 'சுக்கிரனிடமுள்ள வித்தையைஅறிந்து வந்து உதவி எங்களைப் பாதுகாக்கவேண்டும்' என்று வேண்ட,அவ்வேண்டுகோளுக்கு இரங்கிய அவன் சுக்கிரனிடஞ் சென்று சிஷ்யனாய்அமர்ந்து அந்தக்குருவினுடைய மனத்திற்கு விசேஷதிருப்தியைஉண்டாக்கும்பொருட்டு அவனது அருமைமகளான தேவயாநியையும் மலர் கனிமுதலியவற்றால் மகிழ்வித்துவர, அவ்விளமங்கைக்கு அவ்விளமகனிடம் அன்புநிகழ்ந்தது. இப்படி நெடுநாள் கழிந்தபின் அசுரர்கள் கசனை இன்னானென்றும்சஞ்சீவிநி மந்திரத்தை வஞ்சனையாற் கற்றுக்கொள்ளவந்தவனென்றும் அறிந்துஅவனைப் பசுமேய்த்துக்கொண்டிருக்கையிற் கொன்று அவனுடலைச்சின்னபின்னமாக்கிச் செந்நாய்களுக்கு உணவாகக் கொடுத்திட்டார்கள். அதனையறிந்த தேவயானி மிக்க வருத்தத்தோடு தந்தையைப் பிரார்த்திக்க,சுக்கிரன் தன்மகளின் விருப்பத்தின்படி அவனைச் சஞ்சீவிநிமந்திரங்கூறிஅழைக்க, அவன் உடனேபிழைத்துச் செந்நாய்களின் உடம்பைப்பிளந்துகொண்டு வந்து பழையவடிவத்தோடு நின்றான். பின்பு அவன்,ஒருகால் குருகன்னிகைக்குப் புஷ்பங்கொணரச் சென்றபோது அசுரர்கள்அவனைக்கொன்று அவனுடலைப் பிசைந்து கடலிற் போகட்டுவிட்டார்கள். உடனே மகளின் வேண்டுகோளால் சுக்கிரன் கசனை மறுபடி பிழைப்பித்தான். அதன்பின்பு அசுரர்கள் ஒருநாள் அவனைக் கொன்று அவனுடம்பையெரித்துப் பொடியாக்கி அப்பொடியை மதுவிற் கலந்து சுக்கிரனுக்கே கொடுத்துஉண்பித்துவிட, பின்பு மகளின் நிர்ப்பந்தத்தின்படி சுக்கிரன் அவனைமந்திரஞ்சொல்லியழைத்தபொழுது அவன் சுக்கிரனது வயிற்றினின்று ஒலிகாட்ட,அதுகண்டு சுக்கிரன் மகளைநோக்கி 'யான்வயிறு பிளந்து இறந்தாலொழியக்கசன் பிழைக்கும்வழி யில்லையே' என்றுசொல்ல, அவள் 'எவ்வுபாயத்தாலாவதுஇருவரும் இறவாதபடி செய்யவேண்டும்' என்று பிரார்த்திக்க, சுக்கிரன்தன்வயிற்றில் வடிவுநிரம்பி உயிர்பெற்ற சிஷ்யனுக்கு அம்மந்திரத்தைஉபதேசித்து 'நீ என்வயிற்றைப் பிளந்து வெளி வந்தவுடன் என்னைப்பிழைப்பிக்கவேண்டும்' என்று கட்டளையிட, அங்ஙனமே அவன்அவ்வித்தையைக் கற்றுக்கொண்டவுடன் சுக்கிரன் வயிற்றைப்பிளந்துகொண்டுவெளிவந்து அம்மந்திரபலத்தால் அக்குருவைப் பிழைப்பித்தான். அப்பொழுது சுக்கிரன் மதுபாநத்தை நிந்தித்து அசுரர்களையும் வெறுத்தனன். பின்பு நெடுங்காலங்கழிந்தபின் கசன் சுக்கிரனிடம் விடைபெற்றுச் செல்லும் பொழுது தேவயாநி அவனைத் தன்னை மணம்புணரும்படி வெகுவாக நிர்ப்பந்திக்க, அவன் உடன்படாமல் 'குரு புத்திரியாகிய உன்னை நீ இருந்த வயிற்றினின்றே வெளிவந்த காரணத்தால் |