பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்83

அடங்கி -பிரபஞ்சத்திலுண்டாகிய கொடிய மயக்க மொழிந்து, மனம் -,
சித்தொடு மேவல்கூர - அறிவுடன் பொருந்தவும்,- தம்பித்த தோயத்திடை -
தம்பிக்கப்பட்ட நீரினிடையிலே,-வாயுவும் தம்பம் ஆக கும்பித்து - (தனது)
பிராணவாயுவையும் அசையாமல் அடக்கிக்கொண்டு,- ஞானம் பெரு தீபம்
கொளுத்தினான் - ஞானமாகியபெரிய விளக்கை யேற்றினான்; (எ - று.)

    புலனையும் பொறியையும் ஒன்றுக்கொன்றாக மாறவைத்துக் கூறுதல்,
ஒருவகை உபசாரவழக்கு.

    முதலடியினால், இவ்வளவுகாலமாய்க் கண்டபடி பலகொடிய
விஷயங்களிலுஞ் செலுத்திவந்த பஞ்சேந்திரியங்களை இப்பொழுது அடக்கின
அருமை தோன்றும்.  'வெம் பித்து' என்றது, கண்ட விஷயங்களையுங்
காதலிக்கும் மனத்தின் கொடிய ஆசையையாம்.  நீர்தளும்பி
அசையவொட்டாதபடி மந்திரபலத்தால் துரியோதனன் ஜலஸ்தம்பநம்
செய்துகொண்டு நீர்நிலையினுள் மூழ்கியிருந்த தன்மையை
'தம்பித்ததோயத்திடை' என்றதனாலும், தனதுசுவாசத்தை
ரேசகபூரககும்பகங்களால் அமைத்துப் பிராணாயாமஞ் செய்த விதத்தை
'வாயுவுந் தம்பமாகக் கும்பித்து' என்றதனாலும் விளக்கினார்.  இவன் அங்கு
ஜலஸ்தம்பஞ்செய்திருந்த தன்மை, 114-115 கவிகளில் நன்கு வெளியாம்.
(மூச்சை வெளிவிடுதல் - இரேசகம், உள்வாங்குதல் - பூரகம், கும்பகம் -
பிராணவாயுவைச்சமப்படுத்திய யடக்கல்.) தம்பித்தல் - அசைவற்றிருத்தல்.
கும்பித்தல் - வாயுவைப்போக்குவரவில்லாமல் நிறுத்தல். ஞானப்பெருந்தீபங்
கொளுத்துதல் - சிறந்த அறிவின் சுடர்விளங்கச்செய்தல்; நல்லஞானம்
பெறுதல்.  மூன்றாமடியில் 'வாயுத்தசமுமொக்கக்கும்பித்து என்று பாடம்கூறி,
வாயுத்தசமுமொக்கக் கும்பித்து - வாயுத்தசமும்ஒக்க அடக்கிக்கொண்டு
என்க:இங்ஙனம்கூறினும் உச்சுவாசநிச்சுவாசம் இரண்டையும் அடக்கிச்
சுழுமுனாமார்க்கத்திற்பிராணவாயுவை நிறுத்தி என்பதைக் கருத்தாகக்கொள்வர்
ஒருசாரார்.  அந்தப் பாடத்தில் தசவாயுவாவன - பிராணன், அபானன்,
உதானன்.  வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன்,
தனஞ்செயன் என்பனவாம்.

    இதுமுதற் பத்துக் கவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
புளிமாங்கனிச்சீரும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.                          (104)

105.

பன்னாளும்யோகம்பயில்வோரிற்பதின்மடங்காத்
தன்னாகமுற்றுமெலிவின்றித்தயங்குமாறு
நன்னாளமூலநளினத்தைமலர்த்திநாவால்
உன்னாமலுன்னுமுறைமந்திரமோதினானே.

     (இ -ள்.) பல் நாளும் யோகம் பயில்வோரின் - பலநாள்களாக
யோகாப்பியாசஞ்செய்து பழகியவர்களினும், பதின் மடங்கு ஆ - பத்து
மடங்குமேலாக, தன் ஆகம் முற்றும் மெலிவு இன்றி தயங்கும் ஆறு - தனது
உடம்பு முழுவதும் இளைப்படையாமல் விளங்கும்படி,