யோன் -முரசக்கொடியையுடைய தருமன், கொண்டான் - (வென்று) கைக்கொண்டான், என - என்று, கோபம் மிஞ்சி விண்டார் - கோபம் மிக்கு (ஒருவரோடொருவர்) வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு, அவர் வீரம் - அந்தப்பாண்டவர்களது பராக்கிரமத்தை, மிகவும் வியந்தார் - மிகவும் அதிசயித்துக் கொண்டாடினார்கள்; (எ - று.)- அம்மா - ஈற்றசை, பகைவருங் கொண்டாடும்படியான பாண்டவர்களது பராக்கிரமத்தை விளக்கும் வியப்பிடைச்சொல்லுமாம். பலவீரர்களும் நிறைந்திருக்கும் விசாலமான யுத்தகளத்துக்கு, நஷத்திரக்கூட்டம் நிறைந்த ஆகாயம் உவமை, சமரபூமிகொண்டான் - போர்க்களத்தில் வெற்றிகொண்டானென்றபடி. (108) 109.- எங்குந்துரியோதனனைக் காணாமல் அவர்கள் பொலிவிழத்தல். பூணாரமார்பின்வலத்தேபுரிபூந்தண்மாலைக் கோணார்சிலைக்கைந்நெடுநாகக்கொடிகொள்வேந்தைக் காணார்களத்திலொருபாலுங்கருகியுள்ளம் வாணாடருக்கன்குடிபோமகல்வானொடொத்தார். |
(இ -ள்.) ஆரம் பூண் - இரத்தினமாலைகளைத் தரித்த, மார்பின் - மார்பினிடத்து, வலத்தே புரி பூ தண் மாலை - நஞ்சாவட்டை மலர்களாலாகிய குளிர்ந்த மாலையையுடையவனும், கோண் ஆர் சிலை கை - வளைவு மிக்க வில்லை யேந்திய கையையுடையவனுமாகிய, நெடு நாகம் கொடி கொள் வேந்தை - நீண்ட சர்ப்பக்கொடியைக் கொண்ட துரியோதனராசனை, களத்தில்ஒருபாலும் காணார்- போர்க்களத்தில் ஒருபக்கத்திலும் காணாதவர்களாய்,உள்ளம் கருகி-மனந்தவித்து, வாள் நாடு அருக்கன் குடிபோம் அகல்வானொடு ஒத்தார் - ஒளிபொருந்திய சூரியன் தங்காது நீங்கப்பெற்ற பரந்தஆகாயத்தோடு சமமானார்கள் [பொலிவிழந்தன ரென்றபடி]; (எ - று.) வலத்தேபுரிபூ = வலப்பக்கமான இதழ்முறுக்குள்ள மலரென்க. உவமையணி. (109) 110.- அசுவத்தாமன்சஞ்சயனைக் கண்டு விசாரித்தல். தனிவந்து தோன்றுதலுஞ் சஞ்சயனென்னும் வேதம் முனிவன்றனைக்கண்டிருதாளின்முடிகள் சேர்த்தி அனிகங்கெழும் போரரசன்றனையங்கை நெல்லிக் கனிகண்டனையாயெவட்காண்குதுங்காட்டு கென்றார். |
(இ -ள்.) சஞ்சயன் என்னும் வேதம் முனிவன் - சஞ்சயனென்னும் பெயரையுடைய வேதப்பொருள்வல்ல முனிவன் - தனி வந்து தோன்றுதலும்- தனியேவந்து எதிர்ப்பட்டவளவிலே, தனை கண்டு - அவனைப்பார்த்து, (அசுவத்தாமன் முதலியோர்), இரு தாளில் முடிகள் சேர்த்தி -(அவனுடைய) இரண்டு பாதங்களிலும் தங்கள் தலைகளைவைத்து வணங்கி, (அவனை நோக்கி),- 'அம் கை நெல்லிகனி கண்டனையாய் - உள்ளங்கையிலுள்ள நெல்லிப்பழத்தைக்காணுதல்போல (எல்லாப்பொருளையுங்) கண்டறிந்தவனே! அனிகம் கெழும் |