அவர்க்குச்செல்வக்குறைவுவந்தஅளவிலே நன்றியறிவின்றி அவரைக் கைவிட்டு வேறு செல்வமுடையாரைத் தேடிச்செல்லும் குணக்கேடர்போல, இரவில் ஜாதிமுதலிய சினைப்பூக்கள் தேனோடுகூடிச்செழித்திருக்கையில் அவற்றைச்சார்ந்து தேனுண்டு அங்குத்தங்கிக் கூடிக்குலாவி இன்புற்றவண்டினம்சூரியோதயத்தில் அம்மலர்கள் பொலிவிழந்த வளவிலே அவற்றைவிட்டுஅக்காலத்துமலர்கிற தாமரையைநாடி விரைந்துசேரும்படி வருபவன்சூரியனென்க. என்றது, தாமரைமலரச் சூரியன் உதித்தான் என்றவாறு."நிறைந்தோர்த் தேருநெஞ்சமொடு குறைந்தோர்ப், பயனின் மையிற் பற்றுவிட்டொரூஉம், நயனின் மாக்கள் போல வண்டினம், சுனைப்பூ நீத்துச் சினைப்பூப்படர" என்று அகநானூற்றில் சூரியாஸ்தமனத்தை வருணித்தது இங்குஒப்புநோக்கத்தக்கது. உண்ணல்- பொதுவினை. ஞிமிறு - மிஞிறு என்பது எழுத்து நிலை மாறியது. ஞிமிறு முதலியன - வண்டின் சாதிபேதம். ஞிமிறு - பொன்வண்டு. வண்டு - கருவண்டு. சுரும்பு - பொறிவண்டு. மலர் போது- வினைத்தொகை, இடப்பெயர் கொண்டது. இரண்டாம் அடியில் 'கொண்டுஞ் செகுத்து முனை' என்றும் பாடம். (3) 4.-இதுமுதல் மூன்றுகவிகள் -குளகம். துரியோதனன் சல்லியனைச் சேனாபதியாக்குதல் கூறும். தொல்லாண்மையெந்தைமுதுதந்தைக்குமைந்துறு துரோணற்கு மண்ணினிகர்வேறு, இல்லாதவண்மைபுனைவெயிலோன்மகற்குமுடனெண்ணத் தகுந்திறலினான், வில்லாண்மையாலும் வடிவாளாண்மையாலுமயில் வேலாண்மையாலுமவனே, அல்லாது வேறு சிலரிலரென்றுசல்லியனை யதியாதரத் தொடழையா. |
(இ -ள்.) தொல் - பழமையான, ஆண்மை - பராக்கிரமத்தையுடைய, எந்தை முது தந்தைக்கும் - எனது தந்தையின் பெரிய தந்தையான வீடுமனுக்கும், மைந்து உறு - வலிமை மிக்க, துரோணற்கும் - துரோணனுக்கும், மண்ணில் வேறு நிகர் இல்லாத - (தனக்குத் தானேயன்றி) உலகத்தில் வேறு உவமைபெறாத, வண்மை - ஈகைக்குணத்தை, புனை - அழகிதாகக்கொண்ட, வெயிலோன் மகற்கும் - சூரியனது குமாரனான கர்ணனுக்கும், வில் ஆண்மையாலும் - வில்லின் திறமையாலும், வடிவாள் ஆண்மையாலும்-கூரிய வாளாயுத்தின்திறமையாலும், அயில் வேல் ஆண்மையாலும் -கூரிய வேலாயுதத்தின் திறமையாலும், உடன் எண்ணத்தகும் - சமமாக மதிக்கத்தக்க, திறலினான்-வல்லமையையுடையவன், அவனே அல்லாது- சல்லியனேயல்லாமல், வேறு சிலர் இலர் - வேறு ஒருவருமில்லை, என்று-என்று எண்ணி [அல்லது என்று சொல்லி], சல்லியனை - அந்தச்சல்லியனை,அதி ஆதரத்தொடு - மிக்க அன்புடனே, அழையா - அழைத்து,- (எ - று.)-இக்கவியில் 'அழையா' என்றது, அடுத்தகவியில் 'புகழா' என்றதைக்கொள்ளும்.
கீழ்ச்சேனைத்தலைவர்களாயிருந்த வீடுமன் துரோணன் கர்ணன் என்னும் இவர்க்குப் பலபடியாலும் சமமாகஉடன்வைத்து எண்ணத் |