சிறுத்தசெங்கண், வெங்கயமு மேறாமல் வீழ்கயத்தி லேறினையோவேந்தர் வேந்தே. |
(இ -ள்.) வேந்தர் வேந்தே - இராசராசனே! கங்கை மகன்முதல் ஆக-வீடுமன்முதலாக, காந்தாரன் முடிவு ஆக-காந்தாரதேசத்தரசனாகிய சகுனிஈறாக, களத்தில் வீழ்ந்த - போர்க்களத்தில் அழிந்துவிழுந்த, துங்கம் மணி முடிவேந்தர் - சிறந்த இரத்தின கிரீடத்தையுடைய அரசர்கள், சொல்லி முடிப்பதற்குஅடங்கார் - (இன்னாரின்னாரென்றும் இத்தனைபேரென்றும்) விவரஞ்சொல்லிமுடித்தற்கு அடங்கார்கள் [எண்ணிறந்தவர்களென்றபடி:] (அவர்கள் அங்ஙனமாக, நீ) துரகம் மாவும் - குதிரையின்மேலும், செம்கனகம் மணி கொடிஞ்சி திண் தேரும் - செம்பொன்னினாற் செய்யப்பட்டு இரத்தினங்கள் பதித்த கொடிஞ்சியென்னும் உறுப்பையுடைய வலியதேரின்மேலும், பெரு பனை கை சிறுத்த செம் கண் வெம் கயமும் - பெரிய பனைமரம்போன்ற துதிக்கையையும் சிறிய சிவந்த கண்களையுமுடையவெவ்விய யானையின் மேலும், ஏறாமல் - ஏறுவதையொழித்து, வீழ் கயத்தில்ஏறினையோ - வீழ்தற்குரிய தடாகத்திற் பாய்ந்திட்டாயோ? (எ - று.) கயம்என்ற சொல் - யானையென்றுங் குளமென்றும், ஏறுதல் என்ற சொல் மேலேறுதலென்றும் உட்செல்லுதலென்றும் பொருள்படுதலால், அச் சொற்களில் சமத்காரங்கற்பித்து, 'வெங்கயமுமேறாமல் வீழ்கயத்திலேறினையோ'என்றானென்க. இதில் மடக்கு என்னுஞ் சொல்லணியமைந்திருத்தல் காண்க. துரகமா - குதிரையாகிய விலங்கு. பெரும்பனைக்கைச் சிறுத்தசெங்கண் -முரண் தொடை. கங்கைமகனென்ற விவரம்:- முன் ஒருகாலத்தில் தேவர்கள் யாவருங்கூடிய பிரமதேவனது சபையிற்சென்று கங்காநதியின் பெண்தெய்வம் வணங்கியபொழுது, அங்குவந்திருந்த வருணன், அவளழகை உற்றுநோக்கிக் காதல்கொண்டான்; கங்கையும், அவன் மீது காதல்கொண்டு எதிர்நோக்கினாள்;அதனையறிந்த நான்முகக்கடவுள், வருணனைப்பூமியில் மானுடப்பிறப்பெடுக்கவும், கங்கையை மானுடமகளாய் அவனைச்சிலநாள் மணந்திருக்கவுஞ் சபித்திட்டான்; அங்ஙனமே வருணன் குருகுலத்திற் சந்தனுவாய்ப் பிறந்தான்; கங்கையும் ஓர் மனிதமகளாகி 'யான் எந்தத் தீச்செயல்செயினும் மறுக்கலாகாது' என்னும்ஏற்பாட்டினோடு அவனை மணஞ்செய்து கொண்டாள். இது நிற்க; பிரபாசனென்னும் வசு தன் மனைவியின் சொல்லைக் கேட்டு வசிட்டனிடமுள்ள காமதேனுவைக் கொள்ளை கொள்ள எண்ணினான்; மற்றையேழு வசுக்களும் அவனுக்கு உதவிசெய்யவே, எண்மரும் இரவிற்சென்று பசுவைக்கவர்ந்தனர்; அதனையறிந்தவசிஷ்டமகாமுனிவன், அஷ்ட வசுக்களையும் மானுடசன்மமெடுக்கவும்,அவர்களுள் மனைவிசொற்கேட்ட பிரதானனான பிரபாசனைப் பூமியிற்பலநாள்வாழ்ந்து பெண்ணின்பமற்றிருக்கவும்சாபங் கொடுத்தான்;எட்டுவசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின் வயிற்றிற் பிறந்தனர். முதலிற்பிறந்த ஏழு குழந்தைகளையும் தாய் பிறந்த அப் |