4. வேத்திரகீயச் சருக்கம்

வீமன் தாயுடனும் துணைவருடனும் ஒரு
மலைச் சாரலை அடைதல்

தோள் கரம் புறம்தன்னில், அன்னையும், துணைவர் நால்வரும்,
                                               தொக்கு வைகவே,
கோள் கரந்த பல் தலை அரா என, குகர நீள் நெறிக் கொண்டு
                                               போய பின்,
தாள்களின் கதித் தாள் பறிந்து வீழ் தரு வனத்தது ஓர் சாரல்
                                               மன்னினான்-
மூள் கடுங் கொடுஞ் சின அனல் கண் மா மும் மதக் களிறு
                                               அனைய மொய்ம்பினான்.

1
உரை
   


அங்கே இடிம்பி என்னும் அரக்கி வந்து, வீமன்மேல்
காதல்கொண்டு உரையாடுதல்

அவ் வனத்தில் வாழ் அரமடந்தை என்று ஐயம் எய்த, ஓர்
                                               அடல் அரக்கி வந்து,
'இவ் வனத்தில், இந் நள் இயாமம், நீ என்கொல் வந்தவாறு?
                                               இவர்கள் யார்?' என,
செவ் வனத்து இதழ்க் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில்
                                               திமிரம் மாறவே,
வெவ் அனல் சுடர்க்கு ஒத்த ஓதியாள், வீமசேனனோடு உரை
                                               விளம்பினாள்.
2
உரை
   


'யானும் வந்தவாறு உரைசெய்கேன், நினக்கு; உரைசெய் நீ எனக்கு,
                                               யார்கொல்?' என்னலும்,
தானும் அங்கு அவன்தன்னொடு ஓதுவாள், தழுவும் ஆதரம்
                                               தங்கு சிந்தையாள்:
'ஊன் உகந்து தின்றிடும் இடிம்பன் என்று ஒருவன் இங்கு
                                               இராவணியை ஒத்து உளான்;
மானுடம் கொள் மெய்க் கந்தம் ஊர்தலால், வரவு அறிந்தனன்,
                                               வாள் அரக்கனே.

3
உரை
   

'எம்முன் ஏவலால், யான் மலைந்திடற்கு எய்தினேன்; நினைக்
                                               கொன்றும் என் பயன்?
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும்
                                               நீடு ஆர மார்ப! கேள்:
'கொம்மை வெம் முலைத் தெரிவையர்க்கு உளம் கூசும், ஆசை
                                               நோய் கூறுகிற்பது' என்று
எம்மனோர்களும் சொல்வர்; யான் உனக்கு எங்ஙனே கொலாம்,
                                               இறுதி கூறுகேன்?
4
உரை
   

'பெருஞ் சுழிப் படக் கரை புரண்டு எழப் பெருகும் யாறு, பின்,
                                               பிறழ் கலங்கல் போய்,
அருஞ் சுவைப் படும் தெளிவினோடு சென்று, ஆழி வேலைவாய்
                                               அணையுமாறு என,
பொருஞ் சினத்துடன் கொன்று தின்றிடப் போதரும் தொழில்
                                               பேதை நான் மெலிந்து,
இருஞ் சிறைச் சுரும்பு இசைகொள் மாலையாய்! இன்ப மால் உழந்து,
                                               உன்னை எய்தினேன்.
5
உரை
   


'நீடி இங்கு நான் நிற்கின், மாரனாம் நிருதன் நிற்க, அந் நிருதன்
                                               வெம்மையோடு,
ஓடிவந்து, எனைக் கொல்லும்; உம்மையும், ஒரு கணத்திலே
                                               உயிர் செகுத்திடும்;
நாடி என்கொல், மற்று? உய்ந்து போகலாம்; நம்பி, என்னை நீ
                                               நலன் உறத் தழீஇக்
கோடி; அம்பரத்திடை எழுந்து, உனைக் கொண்டு போவல், ஓர்
                                               குன்றில்' என்னவே.

6
உரை
   


அவளது வேண்டுகோளை வீமன் மறுத்தல்

'இரக்கம் இன்றியே, தனி வனத்திலே இளைஞர், எம்முன், யாய்,
                                               இவரை விட்டு, 'எமைப்
புரக்க வல்லள்' என்று, ஒரு மடந்தைபின், போவது ஆடவர்க்கு
                                               ஆண்மை போதுமோ?
வரைக்கண் வாழ்வு கூர் நும்முன், எம் முனே மலைய எண்ணி,
                                               மேல் வந்தபோது பார்!
அரக்கன் ஆகில் என்? அவுணன் ஆகில் என்? அவனை ஓர்
                                               கணத்து, ஆவி கொள்வனே.
7
உரை
   


இடிம்பன் வந்து, தங்கையை வெகுண்டு மொழிதல்

இடிம்பைதன் மனம் கொண்ட காளை, இங்கு இவை இயம்பலும்,
                                               நவை இடிம்பனும்,
கொடும் பெருஞ் சினம் கதுவு கண்ணினன், குருதி நாறு புண்
                                               கூர் எயிற்றினன்,
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு
                                               வெஞ் சுடர் உதிக்கவும்,
நெடும் பிறைக் கொழுந்து ஓர் இரண்டு வால் நிலவு எறிக்கவும்,
                                               நின்ற நீர்மையான்.

8
உரை
   


இடி படுத்து எழுந்து, எழிலி மின்னுமாறு என்ன, நீடு குன்று
                                               எதிர் ஒலிக்கவே,
வெடி படச் சிரித்து, இரு புறத்து நா மிளிர, உள் புகைந்து,
                                               ஒளிரும் வாயினான்,
நெடி படுத்த வெங் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான்
                                               உற நிமர்ந்துளான்,
கொடி படுத்த நுண் இடை இடிம்பையைக் கூவி, அவ் இடைக்                                                குறுகினான்அரோ.

9
உரை
   

'உணவின் ஆசையால் கொல்ல வந்த நீ, உவகை ஆசையால்
                                               உள் அழிந்து, 'இவன்
கணவன் ஆம்' எனக் காதலிப்பதே! கங்குல்வாணர்தம் கடன்
                                               இறப்பதே?
அணவு வெம் பசிக் கனல் அவிந்து போய், அநங்க வெங் கனல்
                                               கொளும் அடல் புலிப்
பிணவை அன்பினின் கலை நயப்பதே? பேதை! மானுடன்
                                               பேசுகிற்பதே?
10
உரை
   

இடிம்பன் வீரம் பேசி, வீமனுடன் போர் செய்து, இறத்தல்

'வார், அடா! உனக்கு யாதுதானர்தம் மகள் அடுக்குமோ? வான
                                               மாதர் தோள்
சேர் அடா; மலைந்து, உயிரை, மெய்யினைத் தின்று, தேவர் ஊர்
                                               சேருவிப்பன் யான்;
போர் அடாது, உ(ன்)னோடு; ஆளிஏறு புன் பூஞைதன்னுடன்
                                               பொர நினைக்குமோ?
பார் அடா, என் ஆண்மையை! அரக்கர் கைப் பட்ட போதில் யார்
                                               பாரில் வைகினார்?'
11
உரை
   


பாதலம் புக்க வீமனை அரவு கடிக்க முன்னுள்ள விஷம் அகலுதல்

என்று, சீறி, மற்று இவன் அடுத்தல் கண்டு, இணை இலா
                                               விறல் துணைவர் நால்வரும்,
நின்ற யாயும், மற்று ஒரு புறத்திலே நிற்க, மையல் கூர்
                                               நிருதவல்லியும்,
வென்றி நல்குமா வந்த விந்தைபோல், விழி பரப்ப, மேல்
                                               வீமசேனனும்
சென்று, கைகளால் பற்கள் நாவுடன் சிதற, வாயினில் சென்று
                                               குத்தினான்.
12
உரை
   


குத்தினான், இவன்; குணபவல்சி தன் கூர் நகக் கரம் கொண்டு
                                               வீமன்மேல்
மொத்தினான்; முனைந்து, இருவரும் பொறார், முரணுடன்
                                               சினம் மூளமூளவே,
தத்தினார்; பிடுங்கிய மரங்களால் சாடினார்; புய சயிலம்
                                               ஒன்றொடு ஒன்று
ஒத்தினார்-இரண்டு அம்புதங்கள் வான் உரும் எறிந்தது ஒத்து,
                                               ஓசை மிஞ்சவே.

13
உரை
   

வளர்ந்த திண் கருங் குன்று காந்தளை மலர்வது என்னவே,
                                               வானகம் படக்
கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன், கேத நெஞ்சினன்,
                                               கோத வாய்மையன்,
தளர்ந்து வீழ் நிசாசரனும், ஆடகன்-தன்னை ஒத்தனன்; பின்னை
                                               முன் உறப்
பிளந்த கோள் அரிதன்னை ஒத்தனன், பிரதை என்னும் மின்
                                               பெற்ற காளையே.
14
உரை
   

வீமனது ஆற்றலைக் குந்தி மகிழ்வுடன் நோக்குதலும்,
தருமன் முதலியோரின் மகிழ்ச்சியும்

வன் திறல் இடிம்பனை, வயக் கையால், உடல்
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை,
அன்று கண்டனள், யாய்-அரியின் பேடு தன்
கன்று திண் கரி பொரக் கண்டது என்னவே.
15
உரை
   


இளைஞரும் தம்முனும், 'இவன் அரும் பகை
களைகுவன், இனி' என, கண் களித்தனர்;
விளைவு உறு காதலால் மெலிந்த பாவையும்,
உளைவுடன் உவகையும் ஒருங்கின் எய்தினாள்.

16
உரை
   


பெருந் திறல் நிசாசரப் பிணத்தை, அவ் வனத்து
இருந்துள பறவைகட்கு இருள் செய் கங்குலின்
விருந்து இடக் கொளுத்திய விளக்கு எனும்படி,
அருந் திசை பொலிவுற, அருக்கன் தோன்றினான்.
17
உரை
   


கரங்களால் நிசாசர இருளைக் காய்ந்துகொண்டு,
இரங்கி, நீள் வனத்திடை இரவில் மாழ்கிய,
வரங் கொள் தாமரை முகம் மலர்த்தும் நீர்மையால்,
உரங் கொள் வீமனுக்கு எதிர், உதய பானுவே.

18
உரை
   

இடிம்பையின் காதல் குறிப்பை உணர்ந்து,
வீமன் மணம் மறுத்து உரைத்தல்

எண் தகு கவர் மனத்து இடிம்பை, மன்மதன்
மண்டுஎரி சுடுதலின், வாடும் மேனியள்,
கொண்ட வெங் காதலின் குறிப்பை, அவ் வழிக்
கண்டனன்-காணலற் செற்ற காளையே.
19
உரை
   

'மாய்ந்தவன் துணைவி! கேள்: வதுவை இன்னமும்
ஏய்ந்திலன், எம்முனும்; யாங்கள் மானுடர்;
ஆய்ந்துகொள் முறைமையால் அரக்கர் பாவை நீ;
காய்ந்தமை அறிதி, முன், கணை இராமனே.
20
உரை
   


குந்தி மைந்தரோடு உசாவி, இடிம்பையை
மணக்குமாறு வீமனுக்கு உரைத்தல்

ஆசை கொள் அரக்கியோடு அனிலன் காதலன்
பேசிய கட்டுரை கேட்ட பெற்ற தாய்,
'ஓசை கொள் மைந்தரோடு உசாவி, நண்பினால்,
ஏசு அற உரைத்தனள், இனிமை கூரவே:.

21
உரை
   


'மறுத்து உரைப்பது கடன் அன்று; மாந்தருக்கு
அறத்து இயல், ஆர்கணும் அமைதல் வேண்டுமால்;
உறத் தகும் இவளை நீ, உம்முன் வாய்மையால்;-
கறுத்தவர் உயிர் கவர் காளை!' என்னவே.

22
உரை
   


அங்கு, வியாதமுனி வந்து, பாண்டவர்க்கு நன்மொழி கூறுதல்

அத் தினத்து, அவர்வயின் அவலம் நீக்குவான்,
மெய்த் தவப் பழ மறை வியாதன் வந்தனன்;
பத்தியின் சிறுவரும் பணிந்து போற்றினார்;
முத்தி பெற்றவரினும் முற்றும் சிந்தையார்.
23
உரை
   

'தனி வனம் இகந்து, நீர் சாலிகோத்திர
முனி வனம் சில பகல் வைகி, முந்துற,
மனன் உறப் பார்ப்பன மாக்கள் ஆகியே,
இனிமையின் வேத்திரகீயம் எய்துவீர்!'
24
உரை
   

முனிவர் உரைத்தபடியே பாண்டவர்கள்
முற்படச் சாலிகோத்திர வனம் சார்தல்

எனத் தம படர் ஒழித்து, இமையவன் செல,
வனத்தை விட்டு அவ் வனம் மருவி வைகினார்-
வினைப்படுத்து, யாழினோர் முறையின் வேள்வி செய்
கனக்குழல் கன்னிதன் காதலானொடே.
25
உரை
   


இடிம்பையும் வீமனும் காதல் கூரக் கூடி வாழ்தல்

குந்தியை, இரவும் நன் பகலும், கோது இலா
வந்தனை புரிதலின், மகிழ் இடிம்பையும்,
வெந் திறல் வீமனும் விழைந்து, வள்ளியும்,
கந்தனும் என, பெருங் காதல் கூரவே.
26
உரை
   

மான்மதம் கமழ் கொடி மந்திரம்தொறும்,
கான் மணம் கமழ் தடங் கா அகம்தொறும்,
தேன் மிகு சுனை நெடுஞ் சிலம்பு அகம்தொறும்,
மேல் மணம் புரிந்தனர், வேட்கை விஞ்சவே.
27
உரை
   


இடிம்பை கடோற்கசன் என்னும் புதல்வனைப் பெறுதல்

நிறம் திகழ் இருட் பிழம்பு என்ன நீண்டு, அறப்
புறம் தரும் உரோமமும், பொருப்புத் தோள்களும்,
மறம் தரு கனை குரல் வாயும், ஆகவே,
பிறந்தனன்-கடோற்கசன் என்னும் பேரினான்.
28
உரை
   

தந்தையரிடம் விடைபெற்று, கடோற்கசன்
தாயுடன் செல்லுதல்


காதிய திறல் நரகாசுரன்தனை,
ஆதி வெங் கோலம், அன்று அளித்த ஆறுபோல்,
மேதினி மதித்த போர் வீமன் நல்கிய,
சோதி அம் புதல்வனும் தொழுது சொல்லுவான்:
29
உரை
   

'நிறையுடைத் தந்தையர்! நீர் நினைத்த போது,
உறைவு இடத்து எய்தி, ஆங்கு உரைத்த செய்குவேன்;
இறைவ! இப் பணி, விடை, தருக!' என்று ஏகினான்,
பிறை எயிற்று யாயொடும், பெற்ற பிள்ளையே.
30
உரை
   

ஐவரும் அந்தண வேடம் பூண்டு, தாயுடன்
வேத்திரகீய நகரம் சேர்தல்

சாத்திரம் மறை தெரி முனிவர் தன்மையின்
காத்திரம் மாறி, அக் காவல் வேந்தரும்,
கோத்திரம், சூத்திரம், குடி, உரைத்துளார்,
வேத்திரகீய மா நகரில் மேயினார்.
31
உரை
   

அந் நகர் வாழும் அந்தணர்களின் விருந்தினராய்
ஐவரும் அன்னையும் வாழ்ந்து வருதல்

அந்தணர் ஐவரும், யாயும், அந் நகர்
வந்துழி, அதிதியர் வரவு காண்டலும்,
முந்துபு முந்துபு முகமன் கூறினார்,
செந் தழல் வேள்வி கூர் ஆதிதேயரே.

32
உரை
   

நல் மனைவாழ்க்கையில் நயந்த சிந்தையான்,
மன் மனை அனைய தன் மனையில், ஓர் முனி,
தன்மனை, 'அம்மனை தம்பிமாரொடும்
என் மனை வருக!' என எதிர்கொண்டு ஏகினான்.
33
உரை
   

ஒரு தினத்து அமுது என, உள்ள நாள் எலாம்,
வரும் முறைப்படி விருந்து அயின்று வைகினார்;-
அரு நெறிக் கடவுளர்க்கு அமுதம் ஊட்டுதல்
இருபிறப்பாளருக்கு என்றும் தன்மையே.
34
உரை
   

பொன்னகர் அணுகினர் போல நெஞ்சுற,
தம் நகர் எனும்படி, தாயும் மைந்தரும்,
இந் நகர் அநேக நாள் இருந்த எல்லையில்,
அந் நகர் புரிந்தது ஓர் ஆண்மை கூறுவாம்:
35
உரை
   

பாண்டவர் வசித்த வீட்டுக்கு உரிய
பார்ப்பனி ஒரு நாள் அழுது புலம்புதல்

மறையும் உருவினொடு அரிய குரு குல மகிபர்
                                               நெடு வன சரிதராய்,
உறையும் வள மனை உடைய மடவரல், உருகு
                                               பிரதைதன் உயிரனாள்,
குறைவு இல் பொலிவினள்; விரத நெறியினள்; குழுவு
                                               நிதியினள்; கொடுமையால்,
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர, எரி கொள் கொடி
                                               என இனையினாள்.
36
உரை
   

'அழுவது என்?' என்று குந்தி வினவ, அந்தணன் மனைவி
பகன் என்னும் அசுரன் செய்தியை உரைத்தல்

'மறுகி அழுவது என்? மொழிக, முனிவரன் மனைவி!' என
                                               இவள் வினவலும்,
குறுகி, அவளுடன் உரைசெய்குவள், உறு குறையை உளம்
                                               நனி குறையவே:
'முறுகு சின அனல் பொழியும் விழியினன், முகன் இல் பகன்
                                               எனும் முரணுடைத்
தறுகண் நிசிசரன், உளன்; இவ் வள நகர் தழுவும் வனன்
                                               உறை தகுதியான்;
37
உரை
   

'அருள் இல் இதயமும், நெறி இல் சரிதமும், அழகு இல்
                                               உருவமும், அதிர் குரல்
பொருள் இல் உரைகளும், உடையன்; முழுது உடல் புலவு
                                               கமழ்தரு பொறியினன்;
மருளும் நரியொடு கழுகு தொடர்தர, வலிய பிணம் நுகர்
                                               சுவை அறாது,
இருளின்மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு
                                               எழும் இதழினான்;
38
உரை
   

'அந்தகனும் மிக அஞ்சி முதுகிடும் அந்த நிசிசரன், இந்த ஊர்
வந்து, குடியொடு கொன்று, பலரையும் மன்ற மறுகிடை தின்ற நாள்,
எந்தை முதலிய அந்தணரும், அவன் இங்கு வருதொழில் அஞ்சியே,
சிந்தை மெலிவுற நொந்து, தலைமிசை சென்று குவிதரு செங் கையார்,
39
உரை
   

' 'ஒன்றுபட, எதிர் கொன்று, பலர் உயிர் உண்பது அறநெறி அன்று, நீ;
இன்றுமுதல் இனி என்றும், முறை முறை எங்கள் மனைதொறும்,
                                               விஞ்சையோர்
குன்றம் என ஒரு பண்டி அறு சுவை கொண்ட அடிசிலும், நம் குலம்
துன்றும் நரபலி ஒன்றும், இவை திறை தொண்டு புரிகுவம்' என்றலும்,
40
உரை
   

'அன்றுமுதல் அடல் வஞ்சகனும், இறை அன்பினொடு
                                               பெறு வன்பினால்,
என்றும் நிலைபெற, உண்டியுடன் மனை எங்கும்
                                              இடுபலி எஞ்சுறத்
தின்று திரிகுவன்; இன்று என் மனை முறை; சென்று பணி
                                               கவர் திங்கள்போல்
நின்று தளர்வுறுகின்றது எனது உயிர்; நெஞ்சம் இலது, ஒரு தஞ்சமே.
41
உரை
   

'கன்னி இவள் பிறர் பன்னி; எனது இரு கண்ணின்
                                               மணி நிகர் சன்மனும்,
மன்னு குல முதல்; பின்னை ஒருவரும் மண்ணின்
                                               உறு துணை இன்மையால்,
இன்னல் பெரிது உளது; என்ன புரிகுவது என்ன அறிகிலன்;
                                               அன்னை! கேள்:
முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில், இடர்
                                               நனி துன்னுமால்.'
42
உரை
   


தன் மக்களுள் ஒருவனை அனுப்பலாம் என்று குந்தி
பார்ப்பனியைத் தேற்றி, வீமனது வலிமையையும் கூறுதல்

ஏதம் அற உறவான மனைமகள் யாவும் உரைசெய, யாதவன்
தீது இல் குலமகள் ஆர்வமுடன் அவள் தேற ஒரு மொழி கூறுவாள்:
'ஆதி அனுமனொடு ஓதும் உவமையன், ஆடல்
                                               வலியுடை ஆண்மையான்,
மோதி, மிகு திறல் யாம சரிதனை, மூளை உக, உடல் கீளுமே.
43
உரை
   

'கொவ்வை இதழ் மட நவ்வி! அலமரல்; குவ்வின்                                                அனலினும் வெவ்வியோர்,
ஐவர் உளர், சுதர்; கை வில் விறலினர்; அவ்வியமும் இலர்;
                                               செவ்வியோர்;
இவ் இவரில் எமை உய்வு கொளும் அவன், எவ் எவ்
                                               உலகையும் வவ்வு திண்
பௌவம் என, நனி தெய்வ முனிவரர் பைதல் அற,
                                               நெறி செய்வனே.
44
உரை
   

அந்தணனும் மனைவியும் பகனுக்கு அனுப்பும்
பொருட்டு உணவு ஆக்குதல்

'அவனை இடு பலி அருளுக!' என மொழி அளவில்,
                                               மறலியும் உளைவுறச்
சிவனை வழிபடும் மகவை அருளிய செனக செனனியர்
                                               நிகர் என,
தவனில் முதிர்தரு முனியும், வழுவு அறு தனது இல் அறனுடை
                                               வனிதையும்,
துவனி அற, மன மகிழ்வொடு, இனிது அறு சுவைகொள் அமுது
                                               அடு தொழிலராய்,
45
உரை
   

தண் தரள மலை, வெண் கயிலை மலை, சங்க மலை, என நங்கைமார்
மொண்டு சொரிதருகின்ற அடிசிலும், முந்து கறிகளும், வெந்த பால்,
மண்டு நறு நெ(ய்)யொடு அந்த விடலையும், மைந்தர் அனைவரும்,
                                               உண்டு, தம்
பண்டி நிறைவுறு பின்பு, பிறிதொரு பண்டி கெழுமிய, பண்டமே.
46
உரை
   

வீமன் அணிசெய்துகொண்டு, உணவு வண்டியை
வனத்திற்கு ஓட்டிச் சென்று, பகனை நாடுதல்

வையம் முழுதுடை ஐயன் இளவலும், வைகலுடன்,
                                               மனை வைகுவோர்
உய்யும் வகை புகல் ஐயை உரையினை ஒய்யென்
                                               விரைவொடு கைகொளா,
வெய்ய பகன் உடல் பெய்த குருதியின், மெய்யை எழில்
                                               அணி செய்தனன்-
செய்ய மலர்கொடு, செய்ய துகில்கொடு, செய்ய கலவையின்
                                               மொய் கொடே.
47
உரை
   

துற்ற பல கறி செற்றி அமலை செய் துப்பு, ஒர் இமகிரி ஒப்பென,
சற்றும் இடன் அற மொய்த்த சகடு இரு சக்ர உருளைகள்
                                               உய்க்கவே,
உற்ற நிரைநிரை பத்திபட வலி ஒத்த பகடுகள் கட்டினான்;
நெற்றிமிசை ஒரு கொற்ற அடல் அரி நிற்பதென ஒளிர் பொற்பினான்.
48
உரை
   

மண்டலம் கொள் வடிவுடன், அடல் பரிதி, மண்ணில்
                                               வந்ததென, மறுகினில்
கண்ட கண்ட முனி குலம் அடங்க இரு கண் களிக்க
                                               வரு காட்சியான்,
வெண் தரங்கம் என வீசு பேய்இரதம் மிஞ்சு கானநெறி மீது
                                               போய், அண்டர்
அண்ட முகடு உற வளர்ந்தனன், அரக்கன் நின்ற உழி அறியவே.
49
உரை
   

வீமன் பகனைக் காணுதலும், வண்டியில்
உள்ள சோற்றை அள்ளி உண்ணுதலும்

களிந்த வெற்பு உதவு நீல மா நதி அடுத்த குன்றில்
                                              ஒரு கழிமுழை,
தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று, வெம் பசி
                                              கொள் தீயினால்,
முளிந்து முற்றும் மனம் வேவவேவ, நெடு மூச்சு எறிந்து,
                                              புகை முகனுடன்,
விளிந்தது ஒத்து வழி குழிய நின்று, சுழல் விழி நிரைத்து,
                                              அயரும் வெகுளியான்.
50
உரை
   


வெற்று எலும்பின் உயர் ஆசனம்தனில், விகங்க
                                              நீழலிடை மேவர,
சுற்றும் நின்று பல சம்புகங்கள் துதி சொல்ல, அல்லல்
                                              மிகு துன்முகன்
உற்று நின்ற நிலை கண்டு, உகந்து, 'இவனை உயிர்
                                              ஒழிந்திட உடற்றினால்,
இற்றை உண்டி கெடும்' என்று, பண்டியில் எடுத்த வல்சி
                                              நுகர் இச்சையான்,

51
உரை
   

வன்பினால் உரக பதி அளித்த நெடு வாரி ஆர் அமுதம்
                                              உண்ட கோ,
முன் பின் ஆக உயர் சகடு இருந்து, எதிர் முகந்துகொண்டு,
                                              வரை முழையுளே
அன்பினால் அடையும் அன்னம் என்ன, நிறை அன்னம்
                                              முற்றவும் அருந்தினான்;
பின்பின் ஆக இது கண்டு, வெம் பசி கொள் பகனும் எய்தி,
                                              இவை பேசுவான்:
52
உரை
   


அது கண்ட பகன் வீமனை நெருங்கி,
வீரமொழி புகன்று, கைகளால் புடைத்தல்

'புலிதனக்கு இடு விடக்கை நின்றது ஒரு பூஞை
                                              தின்னுமது போல, நீ
பலி அனைத்தையும் விழுங்கினால், இது பலிக்குமோ?
                                              எளிமை பார்!' எனா,
ஒலி படக் கிரியில் உரும் எறிந்ததென, ஓடி வந்து,
                                              பிடர் ஒடியவே,
வலி படப் பணை விறல் தடக் கை கொடு மாறி
                                              மாறி முறை வீசினான்.
53
உரை
   

பக்கமும் பிடரும் ஒக்க முட்டிகள் படப் பட,
                                              கவள பாரமாய்
விக்க நின்றன, வயிற்று இரண்டு அருகும் வீழ வீழ,
                                              முன் விழுங்கலும்,
'புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன்; எங்ஙன்
                                              இவை போவது?' என்று,
அக் கடுங் கையும் இளைத்து, வெஞ் சினமும் ஆறி
                                              நின்றனன், அரக்கனே.
54
உரை
   

துரியோதனனும் வீமனும் உட்பகை கொண்டு கதைப்
போர் புரிய, அசுவத்தாமன் விலக்குதல்


அச் சகட்டினில் ஒர் எள்துணைச் சுவடும் அற்றபின்,
                                              சிறிதும் அச்சம் அற்று,
உச்சம் உற்ற வெயில் அர்க்கன் ஒத்து, அவனொடு உத்தரித்து,
                                              உரைசெய்து ஒட்டினான்:
'மெச்ச மெச்சும் உலகத்து அரக்கர்களில் விக்ரமத்
                                              திறலின் மிக்க நீ,
கச்ச கச்ச பல கத்தை விட்டு, உனது கட்டு உரத்தினொடு
                                              கட்டுவாய்.
55
உரை
   

சொல்லி என் பயன்? அரக்கன் நீ; மனிதன் யான்; உனக்கு
                                              உரிய தொழில்களாம்
மல்லினும், படை விதத்தினும், செருவில் வல்ல வல்லன
                                              புரிந்து, போர்
வெல்ல நெஞ்சம் உளதுஆகில், வந்து பொரு; விறல் இடிம்பனையும்
                                              வென்று, உனைக்
கொல்ல வந்தனன்' எனப் புகன்று, இரு கை கொட்டி,
                                              வாகுமிசை தட்டினான்.
56
உரை
   

இருவரும் பொருதல

பட்டவர்த்தனர்கள் பொன் சிரத்தின் மலர் பொற்புடைச்
                                              சரணபற்பனும்,
நெட்டிருள்சரனும், வெற்பு வெற்பினொடு நிச்சயித்து
                                              உடல நிற்பபோல்,
வட்டம் வட்டம் வர, ஒட்டி ஒட்டி, உறு மல் தொழில்
                                              செருவில் மட்டியா,
முட்டி யுத்த நிலை, கற்ற கற்ற வகை முற்ற முற்ற,
                                              எதிர் முட்டினார்.
57
உரை
   


கரம் கரத்தொடு பிணங்கவும், தமது கால்கள்
                                              கால்களொடு கட்டவும்,
சிரம் சிரத்தினொடு தாக்கவும்,-கொடிய சிங்க ஏறு
                                              அனைய திறலினார்-
உரங்கள் இட்டும், வளர் தோள்கள் இட்டும், எதிர் ஒத்தி,
                                              மல்-சமர் உடன்றபின்,
மரங்கள் இட்டும், உயர் கற்கள் இட்டும், நெடு வாதினோடு
                                              இகலி மோதினார்.

58
உரை
   

உலா வரும் தனது தாதை ஒத்த வலி உடைய காளை
                                              கழல் உதையினால்,
விலா ஒடிந்து, தட மார்பு ஒடிந்து, மிடல் வெரிந் ஒடிந்து,
                                              படு வெம் பிணப்
புலால் அளைந்த இரு கவுள் ஒடிந்து, பொரு புயம் ஒடிந்து,
                                              கடை ஒத்த வாய்
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து, செயல் இன்றி வாள்
                                              நிருதன் நிற்கவே,
59
உரை
   

வீமன் பகனைக் கொன்று, அவன் உடலை
வண்டியில் இட்டு, நகருக்கு மீண்டு வருதல்

உண்டி அற்று அயரும் யாதுதானன் அடி-யுண்டு,
                                              மெய்த் தளர்வு ஒழிந்தபின்,
மண்டியிட்டு, எதிர் விழுத்தி, மார்பின், இப மத்தகத்திடை
                                              மடங்கலின்,
திண் திறல் பெரு மிடற்றை வன்பினொடு திருகி வீசி,
                                              ஒரு செங் கையால்,
பண்டியில் கடிதின் இட்டு, மாருதி புகுந்தனன்,
                                              பழைய பதியிலே.
60
உரை
   

பகன் உடலை நகரை அடுத்த இடுகாட்டில் இட்டு வீமன் நீராட, சூரியனும் மறைதல்

ஏக சக்ர வனத்து இருந்த திறல் யாதுதானனை இமைப்பினில்
சாக, முட்டியின் அடர்த்து, மா முனிவர்-தம் பதிப்புறன் அடுத்தது ஓர் வே கரிக் கடு வனத்தில் இட்டு, மலர் ஓடை மூழ்க,
                                               விறல் வீமனும்;
மோகரித்து அவுணரைத் தடிந்து, கடல், முளரி நாயகனும் மூழ்கினான்.

61
உரை
   

விளக்கு ஏற்றும் நேரத்தில் வீமன் வீட்டை
அடைந்து, எல்லோருடனும் அளவளாவுதல்

வாச மா மணி விளக்கு எடுப்ப, இவன் வந்து, தாம் உறையும்
                                              மனை புகுந்து,
ஈசனோடு உமை எனத் தவம் புரியும் இருவர்
                                              தாள்களும் இறைஞ்சியே,
நேசம் ஆன அருள் அன்னையைத் தொழுது, தம்முனைத்
                                              தொழுது, நெஞ்சுறத்
தேசினோடு இளைஞர் தொழ, மகிழ்ச்சியொடு தழுவினான்,
                                              முறைமை திகழவே.
62
உரை
   

நகரத்தார் அகம் மகிழ்ந்து, வீமனைப் பாராட்டுதல்

அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும், அன்னை ஆர்வ
                                              உரை கூறவும்,
முகம் மலர்ந்து உரிய துணைவர் ஆண்மை நிலை மொழியவும்,
                                               சமர மொய்ம்பனை,
'சகம் மலர்ந்த திரு உந்தி மால்கொல், இவன்!' என்று, மற்று
                                               உள சனங்களும்,
மிக மலர்ந்து, புனல் ஓடையின் குழுமி, நனி வியந்து, இசை
                                               விளம்பினார்.
63
உரை