24. உலூகன் தூதுச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

மீனம் ஆகியும், கமடம்அது ஆகியும், மேருவை எடுக்கும் தாள்
ஏனம் ஆகியும், நரஅரி ஆகியும், எண் அருங் குறள் ஆயும்,
கூனல் வாய் மழுத் தரித்த கோ ஆகியும், அரக்கரைக்
                           கொலை செய்த
வான நாயகன் ஆகியும், நின்ற மால் மலர் அடி மறவேனே.

1
உரை
   


கண்ணன், 'தூது அனுப்பித் துரியோதனன்
கருத்தைத் தெரிய வேண்டும்' எனல்

'வல்லினால் அவன் கொண்ட மண் மீளவும் வல்லினால்
                               கொளல் அன்றி,
'வில்லினால் அமர் மலைந்து கொள்ளுதும்!' எனல்
                               வேத்து நீதியது அன்றால்;
சொல்லினால் ஒரு தூதினில் அறியலாம், சுயோதனன்
                               நினைவு' என்று,
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில்
                               சொன்னான்

2
உரை
   


பலராமன், 'துரியோதனன் ஆளும் நாட்டை மீட்டல் கொடிது'
என்ன, சாத்தகி அவனைப் பழிக்க, கண்ணன்
இருவரையும் சமாதானம் செய்தல

'உரிய அம் புவி உதிட்டிரன்தனை, அவண்
                               உற்றவர் பலர் காண,
பரியவன் பெருஞ் சூதினால் வென்று, பல் ஆண்டு
                               அடிப்பட ஆண்டான்;
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இத் தீ மதி
                               கொடிது!' என்று,
கரியவன் புகல் கட்டுரை கேட்டபின், காமபாலனும் சொன்னான்:

3
உரை
   


இளைய சாத்தகி தமையனை, 'மிகக் கரிது இதயம்
                                    ஆயினும், நாவில்
விளையும் மாற்றம் நின் திரு வடிவினும் மிக வெள்ளை
                               ஆகியது' என்ன,
உளைய வார்த்தைகள் உரைத்தனன்; உரைத்தலும், உற்றவர்
                               இடுக்கண்கள்
களையும் மாப் புயல், 'இருவரும் ஒழிமின், நும் கட்டுரை
                               இனி' என்றான்.

4
உரை
   


உலூகனைத் திருதராட்டிரனிடம் பாண்டவர் கருத்து உரைக்கத்
தூது செல்லப் பணித்து, கண்ணன் துவாரகைக்கு மீளுதல்

பேர் உலூகமும் பிணையும் நல்கிய பெரும் பிறப்புடைப்
                               பரித் திண் தேர்,
கார் உலூகலம் நிகர் அடிக் களிறுடைக் கண் இலா
                               அரசன்பால்,
சீர் உலூகனை, 'தூது சென்று, இவர் மனம் செப்பி, மீள்க!'
                               எனப் போக்கி,
ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன் தனது ஊர்
                               புகுந்தனன், அன்றே.

5
உரை
   


ஏனை அரசர்களும் தம்தம் நகர் அடைய,
தருமன் உலூகனைத் தூதனுப்புதல்

'இந்த அந்தணன் நீ இசைத்தன எலாம் இயல்புடன்
                               இனிது ஆக
அந்த அந்தனோடு உரைத்தபின், அவன் நினது அவனி
                               தந்திலன் ஆகின்,
முந்த அம் தண் மா முரச கேதன! திருமுகம்
                               வர விடுக!' என்று,
வந்த அந்த மன்னவர்களும் தம்தம் மா நகர்
                               அடைந்தனர் மன்னோ.

6
உரை
   


அரசர் போனபின், மால் பணி தவறுறாது, அம்
                               முனிதனை நோக்கி,
முரச கேதனன், 'நீ எழுந்தருள்க!' என முனிவனைத்
                               தொழுது ஏத்தி,
'விரை செய் தார் புனை வீடுமன், எந்தை, மெய் விதுரன்,
                               வேதியர் கோவைப்
பரசினோம் அடி என்று, பின் உரிய சொல் பணித்தருள்! 
                                      என, போந்தான்.

7
உரை
   


உலூகன் திருதராட்டிரனது அவையில் புக, துரியோதனன்
ஆசனம் அளித்து வரவேற்றல்

போன நான்மறைப் புரோகிதன் அத்தினாபுரி புகுந்து, எரி பைம் பொன்
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவைதனில் எய்த,
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா, நயந்து, இரு பதம் போற்றி,
ஆன மா மணி ஆசனத்து இருத்தினான், அரவ வெங் கொடியோனே.

8
உரை
   


உலூகன் தான் தூது வந்த வரலாற்றை எடுத்துரைத்தல்

விந்தம் அன்ன தோள் வீடுமன் முதலியோர் விழைவுடன்
                               தொழுது ஏத்தி,
'வந்தவாறு உரைத்தருள்க!' என, அறன் மகன் வந்தனை
                               முதல் கூறி,
அந்தன் ஆகிய கந்து அடர் கட களிற்று அரசனும்,
                               அவன் தந்த
மைந்தர் யாவரும், கன்னனும், சகுனியும், மனம்
                               கனன்றிடச் சொல்வான்.

9
உரை
   


ஆண்டு பன்னிரண்டு அடவி உற்று, ஒருவரும்
                               அறிவுறாவகை மற்று ஓர்
ஆண்டு மன்னிய பாண்டுவின் மதலையர் ஐவரும்
                               வெளிப்பட்டார்;
ஆண்டு மன்னர் முன் சூது போர் பொருது அழிந்திடுதலின்,
                               அது நீர் கொண்டு,
ஆண்டு வந்த பார் நும் மொழிப்படி அவர்க்கு அளித்திரோ?
                               அளியீரோ?

10
உரை
   


'முன்னமும் பொரு சூதுபோர், மோது போர்
                               முனிவுடன் கருதாமல்,
இன்னமும் பொர வேண்டுமேல் பொருதிடும்; இலஞ்சியில்
                               பொலஞ் செங் கால்
அன்னமும் கிரி மயில்களும் உடன் விளையாடு நல்
                               வள நாட்டீர்!
பின்னமும் பிறவாது; இனிப் பண்டுபோல் பீடுறும்,
                                பெரு வாழ்வும்.

11
உரை
   


'அன்றியே, 'அவருடன் மலைகுவம்!' என, அழிவினைக்
                               கருதாமல்,
வென்றியே நினைந்து, எதிர்த்திரேல், உங்களால் வெல்லுதல்
                               அரிது அம்மா!
கன்றியே அடல் வீமனும் விசயனும் களம் புகில்,
                               அனைவீரும்
பொன்றியே விடுகின்றினிர்; முனிவர் சொல் பொய்க்குமோ?
                               பொய்யாதே!'

12
உரை
   


'பூசலில் ஆண்மை காணலாம்' என்று துரியோதனன்
மறுமொழி சொல்ல, விதுரன், துரோணன், முதலியோர்
அவனுக்கு அறிவுரை கூறுதல்

என்று பூசுரன் இயம்பலும், குங்குமம் எழில் உறும்
                                  இணை மேருக்
குன்று பூசியது அனைய பொன்-தடம் புயக் குருகுல
                                  வய வேந்தன்,
'இன்று பூசைபோல் இருந்துழி உரைக்கும் ஈது இகலது
                                  அன்று; இருவர்க்கும்
துன்று பூசலில் காணலாம், ஆண்மையும் தோள்
                                  வலிமையும்' என்றான்.

13
உரை
   

கல்வி, தூய நெஞ்சு இலாத அச் சுயோதனன் கழறிய
                               மொழி கேட்டு,
வில் விதூரன், 'இவ் வேதியன் மொழிப்படி
                               மேதினி வழங்காமல்,
புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும்
                               வாசகம் கேட்கின்,
செல்வி தூரியள் ஆய்விடும்; சுற்றமும், சேனையும்,
                               கெடும்' என்றான்.
14
உரை
   


'திரத்து வாய்மை நீ தவறி, மற்று அவருடன் சேனையும்
                               திறலும் கொண்டு,
உரத்து வாள் அமர் உடற்றலோ, பெரும் பிழை;
                               உடன்றனையாம்ஆகின்,
சரத்து வாய்தொறும் சோரி கக்கிட விடும், தனஞ்சயன்
                               தனு' என்று,
பரத்துவாசனும் பகர்ந்தனன்; கிருபனும், பகர்ந்ததே
                               பகர்ந்திட்டான்.

15
உரை
   


வீடுமன் திருதராட்டிரனுக்கு உறுதி கூறுதல்

'காடு மன்னு நின் புதல்வருக்கு அறுதி செய்
                               காலமோ கழிந்தன்று;
நாடு, மன்னவ! கொடாமல், வெஞ் சமர் பொர
                               நாடினைஎனின், நாளை,
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க
                               வல்லவர்?' என்று,
வீடுமன் திருத்தனயனோடு உறுதிகள் வெகுண்டு
                               உரைத்தனன் அன்றே.

16
உரை
   


கன்னன் வீடுமனை வெகுண்டு கூறுதல்

'முன்னமே உகிர் இழந்த வெம் புலி என, முரண்
                               அழி முனி மைந்தன்-
தன்னை மற்று அவனிடத்து நீ கற்ற வெஞ் சரத்தின்
                               வென்றமை அல்லால்,
என்ன சேவகம் கொண்டு நீ யாரையும் இகழ்ந்து
                               உரைப்பது?' என்று,
கன்னனும், திறல் காங்கெயன்தன்னொடு, கண் சிவந்து,
                               உரைசெய்தான்.

17
உரை
   


வீடுமன் வெகுண்டு, குறிப்பு மொழிகளால்
கன்னனை இகழ்ந்து கூறுதல்

'தூம வெங் கனல் தோன்றிய தோகை அம் தொடையல்
                               சூட்டிய நாளில்,
நாம வெஞ் சிலை நாண் எடுத்தனை, அடர் நரனொடும்
                               போர் செய்தாய்!
தாம வெண் குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல்
வீமன் வெஞ் சிறை மீட்ட நாளினும், திறல் வினை புரி
                               முனை வென்றாய்!

18
உரை
   


'ஒரு நல் மா நெடுந் தேரினை அறிவுறா உத்தரன்
                               விரைந்து ஊர,
நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை,
                               நெடும் போது!
மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட, மலையும்
                               நாள், வய வாளி
வெருநர்மேல் விடா விசயனை நீ அலால், வெல்ல
                               வல்லவர் உண்டோ?'

19
உரை
   


துரியோதனன் கன்னனுக்காகப் பரிந்து, உலூகனையும்
அவமதித்து, 'பார் எமதே!' என, முனிவன் மீண்டு
வந்து, அதனைப் பாண்டவர்க்குச் சொல்லுதல்

கங்கை மா மகன் இவை இவை புகலவும், கன்னனைக்
                                  கசிந்து உள் கொண்டு
அங்கை கொட்டி நக்கு, இருந்த அந்தணனையும் அவமதித்து,
                                  'எமதே பார்!
தங்கள் கானகம் தமது!' எனப் புகன்றனன்,
                                  சர்ப்பகேதனன்; அந்தப்
பங்கயாசன முனிவனும் மீண்டு போய்ப் பாண்டவர்க்கு
                                  அவை சொன்னான்.

20
உரை
   


உலூகன் கண்ணனிடமும் சென்று செய்தி தெரிவிக்க, அவன்
விசயனைத் தன்னிடம் வரும்படி செய்தி சொல்லி அனுப்புதல்

ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம்
                               அருந் தகை உறச் சொல்லி,
ஈங்கு வந்து, எழில் யாதவற்கு இயம்பலும்,
                               யாதவன் மகிழ்வுற்று,
'வாங்கு வெஞ் சிலை விசயனை விரைவினில் வர
                               விடுக!' என, மீள
ஓங்கு மா தவ உலூகனைப் போக்கினான்; அவனும்
                               வந்து உரைசெய்தான்.

21
உரை