34. ஆறாம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

கோயில் ஆளுடைய பைங் கொண்டலார்
                கண் துயில்
பாயலாய் வாழ, நீ பாக்கியம் செய்தது என்-
'தீ அலாது உவமை வேறு இல்' என, தீய நின்
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே!
1
உரை
   


திட்டத்துய்மன் மகரவியூகம் வகுத்துக் களத்து நிற்க,
வீடுமன் கிரவுஞ்ச வியூகம் வகுத்து

பயிலும் வெம் பாசறை, பாண்டவர் ஐவரும்
துயில் உணர்ந்து, அணி பசுந் துளப மால் அடி பணிந்து,
அயிலும் நஞ்சு அனைய போர் அடு களம் குறுகினார்,
சயில வெங் கட கரித் தானையும் தாமுமே. .

2
உரை
   

பகுத்த பல் அணிகளின் பான்மை அக்குரோணியாய்
மிகுத்த வெஞ் சேனையாம் வெள்ள நீர் வேலையைத்
தொகுத்து, வண்டு இமிர் தொடைத் துருபதன் திருமகன்,
வகுத்தனன், புறம் இடா மகர மா வியூகமே.
3
உரை
   


போகமும் தருமமே ஆன மெய்ப் புனிதனும்,
நாக வெங் கொடியுடை நாயகக் குரிசிலும்,
வேக வெம் படையுடை வேந்தரும், சேனையும்,
ஆகவம் குறுகினார், ஆரவம் பெருகவே.

4
உரை
   


பொரும் சமம் கருதி, ஆள், புரவி, தேர், போதகம்,
தெரிஞ்சு கொண்டு ஈர்-இரு திசையினும் செல்லவே,
பெருஞ் சனம்தன்னை, அப் பீடுடை வீடுமன்,
கரிஞ்சம் என்று உள்ள பேர் வியூகமும் கட்டினான்.

5
உரை
   


இருபக்கத்தாரும் மாறுபட்டுப் பொருதல்

இந்திரன் முதலிய இமையவர் தங்களால்
அந்தரம் இடன் அற, அரவு உளைந்து அலமர,
வந்து வந்து, இரு பெரும் படைஞரும் மாறுபட்டு,
உந்தினார்; முந்தினார்; ஒட்டினார்; முட்டினார்.

6
உரை
   


துரோணன் தேர் ஊர்ந்து வீமனோடு பொர, ஆசிரியனது
தேர்க்குதிரைகளையும் பாகனையும் அழித்தல்

பரவி நால் வித வயப் படைஞரும் சூழ, 'வாள்
இரவி நான், வெம் பகை இருளினுக்கு' என்று, தன்
புரவி நான்மறை எனப் பூண்ட தேர் தூண்டினான்,
விரவினான் வீமன்மேல், விற் கை ஆசிரியனே.

7
உரை
   


சிலை வரம் பெறு திறல் தேசிகன் சீறவும்,
நிலைபெறும் புகழினான் நெஞ்சின் அஞ்சலி செயா,
மலையினும் பெரிய தேர் வலவனும், புரவியும்,
தலை அறும்படி சரம் தனு வளைத்து, உதையினான்.

8
உரை
   


அப்பொழுது சல்லியன் வீரம் பேசி வர,
அவன் வீமனால் தேரோடும் எற்றுண்ணல்

சூழி வெங் கச, ரத, துரகத, நிருபரை
வீழ வெங் கணைகளால், மெய் துளைத்த அளவிலே,
தாழ நின்றிலன், எழில் சல்லியன்; 'தன்னொடே
தோழ! இன்று அமர் செய்க!' என்று, ஒரு திசைத்
                தோன்றினான்.

9
உரை
   


'வல்லை, வெஞ் சமர் செய வல்லை! நீ வருக!' என,
வில்லையும் துணி செய்து, வெல்ல வந்தவனையும்
தொல்லை வெங் கரி எனத் தேரொடும் தோள் மடுத்து,
எல்லை அம் புவியின்மேல் எற்றினான், வீமனே.

10
உரை
   


சல்லியன் தளர்வு கண்டு, துரியோதனன் சகுனி
முதலியோருடன் வந்து பொருதல்

சல்லியன்தன் பெருஞ் சலிவு கண்டு, 'அங்கையின்
நெல்லி அம் கனி இனி நேரலார் உயிர்' என,
பல்லியங்களும் எழ, பாந்தள் அம் பொற் கொடி
அல்லி அம் தெரியலான் அங்கு வந்து, அணுகினான்.

11
உரை
   

வெம் புய வீமன்மேல் வில் வளைத்து, ஆயிரம்
அம்புகள் மாரிபோல் ஆர்த்து எழ வீசினார்-
தும்பை அம் தார் முடிச் சூழ் படை மன்னரும்,
தம்பியர் யாவரும், மாமனும், தானுமே.
12
உரை
   


தோன்று அரித் துவசனும், சோகம் இல் பாகன் ஊர்
வான் தடந் தேரொடும், 'வருக!' எனச் சென்று, எதிர்
ஊன்றினான்-மைந்தரும், இளைஞரும், உயிரையே
போன்ற மைத்துனரும், வாள் நிருபரும், புடைவர

13
உரை
   


நின்று இரு சேனையும் நேர்பட, வேலினும்,
வன் திறல் வில்லினும், வாளினும், மலைவுற,
குன்றம் நேர் தோளினார் இருவரும் கொக்கரித்து,
ஒன்றினார், வில் வளைத்து ஒருவருக்கு ஒருவரே.

14
உரை
   

அவனும், அம்பு இவன் உரத்து அழகு
                உற எழுதினான்;
இவனும், அம்பு அவன் மணித் தோளின்மேல்
                எழுதினான்;
புவனம் எங்கணும் மிகப் பொறி எழப்
                போர் செய்தார்,
பவனனும் கனலியும் நிகர் எனும் பரிசினார்.
15
உரை
   


வீமன் கணைகளால் பலர் மடிய, துரியோதனன் முதலியோர்
வலி இழந்து பின்னிடுதல்

வரத்தின் முன் பெறு கதை வன்மையும் வின்மையும்
சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன்,
சரத்தினும் கடுகு தேர்ச் சர்ப்பகேதனனை, அன்று,
உரத்தின் வெங் கணைகள் பட்டு உருவ,
                வில் உதையினான்.

16
உரை
   

தான் விடும் கணைகளின் தம்பியர் தம்மையும்
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து, பின்,
ஊன் விடும்படி துளைத்து, உருவு பல் பகழியால்,
வான் விடும் பேரையும் வானில் உய்த்தனன்அரோ.
17
உரை
   

வா வரும் கவன மாக் கடுகு தேர் வலவர் போய்,
ஏ வரும் சிலைகள் போய், இரு புய வலிமை போய்,
யாவரும் பண்டு தாம் இடு புறம் இட்டனர்;
தேவரும் கண்டு உவந்து, அலர் மழை சிந்தினார்.
18
உரை
   


விகன்னன் வீரர் பலருடன் வந்து, அபிமனோடு பொருது
தேர் இழந்து, சித்திரசேனன் தேரில் தத்தி ஏறுதல்

ஏய வரி சிலை வீமனொடு பொரு போரில்
                எனைவரும் வென்னிட,
மேய விழி இலையாய பதி தரு வீரர் பலரும்,
                விகன்னனும்,
ஆய முதிர் சினம் மூள, விரைவுடன் மீள வர,
                அபிமன்னுவும்
தூய வரி சிலை வாளிகொடு தன தேர்கொடு
                அவர் எதிர் துன்னினான்.

19
உரை
   

மான அபிமனும், ஞான விகனனை, வாளி
                பல பல ஏவ, மேல்
ஆன இரதமும், மாவும், வலவனும் ஆழிகளும்,
                உடன் அற்ற பின்,
தான் அ(வ்) இரதம் உறாமல், விசையொடு தத்தி,
                அருகு உறு சித்திர-
சேனன் எனும் இளையோனது அணி பெறு
                தேரின்மிசை கடிது ஏறினான்.
20
உரை
   


ஏனையோரை அபிமன் அம்பினால்
மொத்தி, விகன்னனது உடல்
சிதையுமாறு கணை தொடுத்தல்

மற்றை இளைஞரும், மைத்துனனும், மத மத்த
                கய பகதத்தனும்,
செற்ற விகனனும், முற்றும் இவனொடு செற்றி
                அமர் பொருகிற்றினார்;
வெற்றி அபிமனும் விற் கையுடன் அவர் விட்ட
                கணைகள் விலக்கி, மார்பு
எற்று கணை அனைவர்க்கும் அவர் அவர்
                எய்த்து விழ விழ, மொத்தினான்.

21
உரை
   

நெடிய வரி சிலை நிமிர, முறை முறை நெடிய
                விசையுடன் விசியும் நாண்,
இடியும் முகில் என, அகில வெளி முகடு இடிய,
                அதிர் பெரு நகையுடன்,
கொடிய விகனனை மடிய, அவன் உடல் கொடிய
                குடர் உகு குருதி நீர்
வடிய, இரு புயம் ஒடிய, உதையினன், வடிய
                கணை ஒரு நொடியிலே.
22
உரை
   

'மன்னர் மணி முடி மன்னு கனை கழல் மன்னன்
                இளவல் விகன்னனை
முன்னர் உறு கணை பின்னர் விழ விழ, முன்னர்
                அமர் பொர முன்னினான்,
பொன் அசலம் நிகர் அன்ன புய அபிமன்னு
                ஒருவனும்; இன்னும் நாம்
என்ன அமர் பொர இன்னர் அணுகுவது?' என்ன
                வெருவினர், துன்னலார்.
23
உரை
   


யாவரும் தம்தம் இருப்பிடம் புக, அபிமனைத்
தந்தைமார் தழுவிப் பாராட்டுதல்

அன்றை அமரினில் ஒன்றுபட அவர், அங்கம்
                அயர்வுறு பங்கம் ஏது
என்று மொழிவது? தம் தம் மனை உற எந்த
                நிருபரும் முந்தினார்;
வென்று பொரு முனை நின்ற அபிமனை விஞ்சும்
                உவகை கொள் நெஞ்சுடன்
சென்று தழுவினர், இந்து வர எழு சிந்து என
                மகிழ் தந்தைமார்.

24
உரை
   


படுகளக் காட்சிகள்

கோடு முதலொடு வாளிகளின் இற வீழ்வ
                பல கட குஞ்சரம்
காடு படு துளவோன் முன் வர விடு கஞ்சன்
                மழ களிறு ஒக்குமால்;
ஓடு குருதியினூடு வடிவு ஒரு பாதி புதைதரும்
                ஓடை மா
நீடு முதலையின் வாயின் வலி படு நீலகிரியை
                நிகர்க்குமால்.

25
உரை
   

மாலும் மத கட சாலும், நுதலும், மருப்பும், ஒரு
                கையும், வதனமும்,
தோலும், ஒழிய உள் ஆன தசை பல பேய்கள்
                நுகர்தரு தும்பிமா,
நாலு மறைகளும் ஓலம் என, அகல் வானம் என,
                முழு ஞானமே
போலும் என, ஒளிர் மேனி உடையவர் போர்வை
                உரி அதள் போலுமே.
26
உரை
   

சேனை இப முகம் அற்று விழுவன சென்று
                திசை வழி கவ்வி, விண்
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர்
                பூசல் புரி இரு பூதமும்,
சோனை மழை முகில் வாகன் முதல சுரேசர்
                தொழுது துதிக்கவே,
யானை முக அசுரேசனுடன் அமர் ஆடு
                முதல்வனை ஒக்குமே.
27
உரை
   


சூரியன் மறைதலும் உதித்தலும்

இமையம் அணுகினன், விசயன் மதலையை, 'இன்றை
                அமர் இனி உங்களுக்கு
அமையும்' என, முதல்; அனிகம் அடையவும்,
                அணியும் அவனிபர் நால்வரும்,
தமையனொடு தம பதியின் அணுகினர், தங்க;
                விரைவொடு கங்குல் போய்,
சிமையம் அணுகினன், மீள, நனி இருள் சிதைய,
                உதய திவாகரன்.

28
உரை