42. பதினான்காம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

அரிய தண் கலை வாள் மதியமும் கொதிகொள் ஆலமும் தனது
                                இடத்து அடக்கி,
உரிய ஒண் கங்காநதிக்கு ஒரு பதியாய் உரைபெறும் உயர்
                                மகோததியின்
பரிய திண் சிலையோடு அம்பு எலாம் முகந்து, பற்குனப்
                                பொருப்பிடைப் பொழியும்
கரிய பைம் புயலைக் கைதொழுமவரே கருவிலே திருவுடையவரே.
1
உரை
   


தருமன் முதலியோர் படையுடன் களம் புக, திட்டத்துய்மன் அணிவகுத்து நிற்றல்

காலை ஆதபனைத் தருமன் மா மதலை கைதொழு கடன் முடித்தருளி,
சாலை ஆர் தழல் செய் வேள்வி அந்தணர்க்குத் தானமும்
                                தகுவன வழங்கி,
மாலை ஆம் அளவில் தனஞ்சயன் மொழிந்த வஞ்சினம் வழு
                                அற முடிப்பான்,
வேலை ஆர் அரவப் பல பணை முழங்க, வெம் முரண்
                                சேனையோடு எழுந்தான்.

2
உரை
   

அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி, ஆடகப்
                                பொருப்பினால் கடலைக்
கடைந்து, அமுது அளித்த கருணை அம் கடலே கடும்
                                பரிச் சந்தனம் கடவ,
மிடைந்து ஒளி உமிழும் வேற்படைத் தடக் கை வீமனும்,
                                இளைஞரும், பலரும்,
குடைந்து இரு புறனும், கைவர, மகவான் குமரனும்
                                அமர்க்களம் குறுக,
3
உரை
   

சோனை அம் புயலின் கணை தொடும் பதாதி, துரகதம், துரகதத்
                                தடந் தேர்,
யானை, என்று உரைக்கும் நால்வகை உறுப்பும் இராச
                                மண்டல முகமாக,
தானை அம் கடலை மிடல் உற வகுத்து, தான் முதல்
                                பேர் அணியாகச்
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான், தேவரும்
                                யாவரும் வியப்ப.
4
உரை
   


சயத்திரதனை இடை வைத்து, ஏனைய வீரர்களைச் சுற்றிலும்
நிறுத்தி, துரோணனன் ஐவகை வியூகமாக வகுத்து நிற்றல்

பாப்பு வெம் பதாகைப் பார்த்திவன் பணியால் பத்து-இரண்டு
                                யோசனைப் பரப்பில்
தீப் புறம் சூழ நடுவண் நிற்பதுபோல், செயத்திரதனை
                                இடை நிறுத்தி,
கோப்புறப் பரி, தேர், குஞ்சரம், பதாதி, கூறு நூல் முறை
                                அணி நிறுத்தி,
காப்புறத் திசைகள் எட்டினும் நெருங்கக் காவலர்
                                யாரையும் நிறுத்தி,

5
உரை
   

தூசியில் முதல் நாள் வஞ்சினம் மொழிந்த துன்மருடணன்தனை
                                நிறுத்தி,
ஊசியும் நுழையா வண்ணம் வில் பதாதி வயவரை உரன்
                                உற நிறுத்தி,
வாசியில், இபத்தில், தேரில், ஏண் பட்ட மன்னரை இரு
                                கையும் நிறுத்தி,
பேசிய கன்னன் சகுனி சல்லியரைப் பேர் அணியாகவே நிறுத்தி,
6
உரை
   

அணிகள் ஐந்து ஐந்தால் ஐ வகை வியூகம் ஆகிய
                                சேனையின் சிரத்து,
மணி முடி புனைந்து வைத்தென, அலங்கல் வலம்புரி
                                மார்பனை நிறுத்தி,
பணிவுறும் அவுணர் பதாகினி வகுத்த பார்க்கவன் இவன் என,
                                பயில் போர்த்
துணிவுடன் பல் தேர் சூழ்வர, சகட துண்டத்து நின்றனன்,
                                துரோணன்.
7
உரை
   

மந்தணம் இருந்து கங்குலில் முதல் நாள் மன்னனோடு
                                இயம்பிய வகையே
அந்தணன் அணிந்த விரகினை, விமானத்து அமரரும்
                                அதிசயித்து உரைத்தார்-
'சந்து அணி கடக வாகு நீள் சிகரச் சயத்திரதனை ஒரு பகலில்
கொந்து அழல் உரோடத் தனஞ்சயன் பொருது, கோறலோ அரிது!'
                                எனக் குறித்தே.
8
உரை
   


உத்தமோசாவும் உதாமனும் இருபுறத்தும் வர, விசயன்
துரியோதனன் படைமேல் செல்லுதல

செய்த்தலைக் கயலும் வாளையும் பிணங்கும் செழும் புனல் சிந்து
                                நாட்டு அரசை,
கைத்தலத்து அடங்கும் பொருள் என, காத்து, காவலர் நின்ற பேர்
                                அணி கண்டு,
உத்தமோசாவும் உதாமனும் முதலோர் ஓர் இரு புறத்தினும் சூழ,
வித்தக வலவன் முன்செல, தடந் தேர் விசயன் அவ்
                                வினைஞர்மேல் நடந்தான்.

9
உரை
   


துச்சாதனனும் அவனைச் சூழ்ந்துள்ள சேனைகளும் விசயனுக்கு
உடைந்து துரோணன் நின்ற இடத்தை அடைதல

போர்முகத்து அடங்கா மடங்கல் ஏறு அனையான் விதம்
                                படப் பொழி சிலீமுகங்கள்
கார் முகத்து எழுந்த தாரைபோல் வழங்க, கார்முகத்து
                                ஒலியினால் கலங்கி,
தார்முகத்து அரசன் தம்பியோடு அணிந்த சாதுரங்கமும்
                                உடன் உடைந்து,
நீர்முகத்து உடைந்த குரம்பு என, துரோணன் நின்றுழிச்
                                சென்று அடைந்தனவே.

10
உரை
   

புரவி முப்பதினாயிரம் கொடு முனைந்து பொரு திறல்
                                கிருதவன்மாவும்,
கர விறல் கரி நூறாயிரம் கொண்டு காது துச்சாதனன்தானும்,
இரவியைக் கண்ட மின்மினிக் குலம்போல் ஈடு அழிந்திட,
                                உடன்று, எங்கும்
சர விதப் படையால் விண்தலம் தூர்த்து, தானை காவலன்
                                முனை சார்ந்தான்.
11
உரை
   


துரோணனுக்கும் விசயனுக்கும் அமர் விளைதல்

சென்ற வில் தனஞ்சயற்கும், முனை குலைந்த சேனைவாய்
நின்ற அத் துரோணனுக்கும், நீடு போர் விளைந்ததால்-
ஒன்றொடு ஒன்று துரகதங்கள் உருமின் மிஞ்சி அதிர்வுற,
குன்று குன்றொடு உற்றெனக் கொடி கொள் தேர் குலுங்கவே.

12
உரை
   

முட்டியாலும், நிலையினாலும், மொய்ம்பினாலும், முரணுறத்
தொட்ட வில்லு நிமிர்வு அறத் தொடுத்த வின்மையாலும், முன்
கிட்டி ஆசிரீயனும் கிரீடியும் பொரப் பொர,
பட்ட இல்லை, இருவர் மேலும் விட்ட விட்ட பகழியே.
13
உரை
   

தேர் இரண்டும் இடம் வலம் திரிந்து சூழ வர, முனைந்து,
ஓர் இரண்டு தனுவும் வாளி ஓர்ஒர் கோடி உதையவே,
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என,
போர் இரண்டு வீரருக்கும் ஒத்து நின்ற பொழுதிலே,
14
உரை
   


இருவரும் ஒத்துப் பொர, 'பொழுது சென்றது' எனக் கூறி,
சயத்திரதனை அணுகும்பொருட்டு, மாயன் தேரை
வியூகத்தினுள்ளே செலுத்துதல்

'இகல் செய் வெஞ் சிலைக்கை வீர! இந் நிலம்தனக்கு, நின்
பகைவன் நின்ற அந் நிலம் பதிற்றிரண்டு யோசனை;
புகலுகின்ற பொழுது சென்றது' என்று, அவண் பொறாமல், மால்
உகளுகின்ற பரி கொள் தேரை உள்ளுறச் செலுத்தினான்.

15
உரை
   


தொடர்ந்து வந்த துரோணனை முனிவு மாறி ஏகுமாறு
அருச்சுனன் மொழிதல்

எதிர்த்த தேர், விழித்து இமைக்கும் அளவில், 'மாயம் இது' என,
கதித் துரங்க விசையினோடு கண் கரந்து கழிதலும்,
அதிர்த்து அடர்ந்து பின் தொடர்ந்து அடுத்த போது, அருச்சுனன்
கொதித்து வந்த குருவொடு அம்ம, திருகி நின்று கூறுவான்:

16
உரை
   

ஐய! நின்னொடு அமர் இழைத்தல் அமரருக்கும் அரிது; நின்
செய்ய பங்கயப் பதங்கள் சென்னி வைத்த சிறுவன் யான்;
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும்' என்ன, முறுவலித்து,
'எய்ய வந்த முனிவு மாறி, ஏகுக!' என்று இயம்பினான்.
17
உரை
   


காம்போசன் முதலியோரை, விசயன் வென்று, சூசி வியூகத்தை அடைதல்

ஈசனால் வரங்கள் பெற்ற இந்திரன்தன் மதலை, காம்-
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள்
கூச, நாலு பாலும் நின்ற நின்ற சேனை கொன்று போய்,
பாச நாம அணியில் நின்ற வீரரோடு பற்றினான்.

18
உரை
   


'கன்னனைப் பொருது மேற்செல்லவேண்டும்' என விசயன்
கண்ணனிடம் கூற, அவனும் தேரை அங்குச் செலுத்துதல்

முன்னர் முன்னர் வந்து வந்து, முனைகள்தோறும் முந்துறும்
மன்னர் தம்தம் வில்லும், வேலும், வாளும், வென்றி வாளியின்
சின்னபின்னமாக எய்து செல்லும் அத் தனஞ்சயன்,
கன்னன் நின்ற உறுதி கண்டு, கண்ணனோடும் உரை செய்தான்:

19
உரை
   

'விலங்கி நம்மை அமர் விளைக்க, விடதன், வில் சுதக்கணன்,
அலங்கல் வேல் அவந்தி மன்னன், அவன் புதல்வன், ஆதியா
வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனைக்
கலங்குமாறு பொருது போகவேண்டும்' என்று கருதியே.
20
உரை
   

'ஒக்கும்!' என்று, செங்கண்மாலும், உளவு கோல் கொடு இவுளியைப்
பக்கம் நின்ற பானு மைந்தன் முனை உறப் பயிற்றலும்,
மிக்க வெம் பதாதியோடு சூழ நின்ற விருதரும்
தொக்கு வந்து, விசயன் மீது சுடு சரம் தொடுக்கவே,
21
உரை
   


கன்னனைச் சூழ நின்ற மன்னர்களை அழித்து, அவன் எதிர் நின்று விசயன் பொருதல

சரம் தொடுத்த வயவரை, சரத்தினின், தனித்தனி,
உரம் குளிக்க, வாகு வீழ, உதரம் மூழ்க, ஒளி முடிச்
சிரங்கள் அற்று மறிய, என்பு சிந்த, வாய்கள் துளைபட,
கரம் துடிக்க, இரு பதங்கள் தறியவே, கலக்கினான்.

22
உரை
   

கலக்கம் உற்று, வில் இழந்து, கவன மா இழந்து, மேல்
இலக்கம் அற்ற களிறு இழந்து, கொடி கொள் தேர் இழந்து, போய்
உலக்க விட்டு, அளக்கர்வாய் உலம்ப ஓடு கலம் எனத்
துலக்கம் மிக்கு வருதல் கண்டு, சுரரும் நின்று துதி செய்தார்.
23
உரை
   

துதியினால் உயர்ந்த வண்மையுடைய பானு சூனுவும்,
கதியினால் உயர்ந்த மாவொடு ஒத்த தேர் கடாவினான்,
மதியினால் உயர்ந்த கொற்ற வலவன் உந்து தேருடன்,
விதியினால் உயர்ந்த சாப வெஞ் சமம் தொடங்கினார்.
24
உரை
   

தொடங்கு போரில், வலியினாலும் மதனினும் துலங்கு மெய்
விடங்கினாலும், வின்மையாலும், உவமை தம்மில் வேறு இலார்,
விடம் கொள் வாளி மின் பரப்பி, வெய்ய நாண் இடிக்கவே,
மடங்கல்போல் இரண்டு வில்லும் மண்டலம் படுத்தினார்.
25
உரை
   

மண்டலம் படுத்த வில்லின் வலி கொள் கூர வாளியால்,
விண்தலம் புதைந்து, தங்கள் மெய் படாமல் விலகினார்-
குண்டலங்கள் வெயிலும் மூரல் குளிர் நிலாவும் வீசவே,
வண்டு அலம்பு கமலம் நேர் வயங்கு வாள் முகத்தினார்.
26
உரை
   

'முகத்தில் நின்ற கன்னனோடும் முடி மகீபரோடும் நின்று
இகல் செய்கின்ற கடிகை ஓர் இரண்டு சென்றது' என்று, உளம்
மிகக் கனன்று, தேரும் வில்லும் மெய் அணிந்த கவசமும்
தகர்த்து, மார்பின் மூழ்க, வாளி ஏவினன், தனஞ்சயன்.
27
உரை
   


கன்னன் மயங்க, சுதாயு அவனுக்கு உதவியாக வந்து பொருதல்

தனஞ்சயன் கை அம்பின் நொந்து, தபனன் மைந்தன் மோகியா,
மனம் தளர்ந்து இளைத்த பின்னர், வருண ராசன் மா மகன்
கனன்று எழுந்த சேனையோடு வந்து, கார்முகம் குனித்து,
இனம் கொள் வாளி ஏவினான், எதிர்ந்த போரில், ஈறு இலான்.

28
உரை
   

ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை, வீரரில்
மாறு இலாத விசயன் விட்ட மறைகொள் வாளி யாவையும்,
சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன, அவன் உடற்
பேறு இலாமல் முனை உறப் பிளந்து, கீழ் விழுந்தவே.
29
உரை
   

விழுந்த வாளி கண்டு, பின்னும், விசயன் மூரி வில் குனித்து,
அழுந்த வாளி ஒன்று பத்து நூறு வன்பொடு அடைசினான்;
எழுந்த வாளி வாளியால் விலக்க, ஏவி ஆசுகம்,
கழுந்தது ஆக, அவன் எடுத்த கார்முகம் கலக்கினான்.
30
உரை
   


சுதாயு தண்டு கொண்டு எறிய, அது விசயனைத்
தாக்காவண்ணம் கண்ணன் மார்பில் ஏற்றலும்,
சுதாயு முன் பெற்ற சாபத்தின்படி மடிதலும்

முகம் கலங்க, மெய் கலங்க, முடி கலங்க, மூரி மார்பு-
அகம் கலங்க, மற்று ஒர் தண்டு அருச்சுனன் தன்மேல்விட,
நகம் கலங்க, உருமின் வந்தது; அதனை உம்பர் நாயகன்
சகம் கலங்க ஏற்றனன், தனாது மெய்யின் ஆகவே.

31
உரை
   

ஆகவத்தில் விசயன் உய்ய, ஐயன் மெய்யில் அறையும் முன்,
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி, மண்மிசைச்
சோகம் மிக்கு விழுதல் கண்டு, தூரகாரி ஆதலால்,
மாகம் உற்ற அமரர் செம்பொன் மழை பொழிந்து வாழ்த்தினார்.
32
உரை
   

'வாழி, வாழி, குந்தி மைந்தன் வலவன் வாழி, வாழியே!
வாழி, வாழி, அவனி உய்ய வந்த நாதன் வாழியே!
வாழி, வாழி, காளமேகவண்ணன் வாழி, வாழியே!
வாழி, வாழி, வாசுதேவன் வாழி, வாழி, வாழியே!'
33
உரை
   


'எறிந்த கதை நின் மேனியில் பட, சுதாயு மடிந்த காரணம்
உரை' என்ற விசயனுக்கு அதனை விளக்குதல்

என்று யாவரும் துதிசெய, விரகினால் எறிந்த காவலன்தன்னைக்
கொன்றபோது, தன் உயிர் பெறு தனஞ்சயன்
                        கொண்டல்வண்ணனைப் போற்றி,
'நின்தன் மேனியில் எறி கொடுங் கதை பட, எறிந்தவன்
                        நெடு வானில்
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு
                        உரை' என்றான்.

34
உரை
   

'பன்னவாதை என்று ஒருத்தி தாய்; தந்தையும், பரவை
                                மன்னவன்; அந்த
மன்னவன் தரப் பெற்றனன், பல படை மறையொடும் வலி கூர;
துன்னு நாமமும் சுதாயு; மற்று ஒருவரால் தோற்று உயிர்
                                அழிவு இல்லான்;
முன் நிராயுதன்மிசை இவன் படை உறின், முடிவுறும்
                                வரம் பெற்றான்.
35
உரை
   

'எறிந்த வெங் கதை கொன்றிடும், படைக்கலன் எடுத்தவர்
                                உடல் பட்டால்;
அறிந்து, நான் இடை ஏற்றலின், அவன் உயிர் அழிந்தது'
                                என்று அருள்செய்தான்-
பிறிந்த யோனிகள் அனைத்தும் ஆய், முதலும் ஆய், பெருமிதம்
                                மறந்து, ஈண்டுச்
செறிந்தவர்க்கு ஒரு சகாயன் ஆய், அருந் துயர் தீர்த்திடும்
                                தேர்ப்பாகன்.
36
உரை
   


அடுத்து, சுதாயுவின் இளவல் சதாயு வந்து பொருது மாளுதல்

கதாயுதந்தனக்கு உரிய நாயகன்மிசை கதை பட, சிதைவுற்றுச்
சுதாயு என்பவன் பல பெரும் படையுடன் துறக்கம்
                                எய்திய பின்னர்,
சதாயு என்ற அவன் இளவல் மற்று அவனினும் சமர் புரிந்து,
                                அவன்தானும்
கெதாயு ஆயினன்; கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே,
                                கெடாது உய்வார்!

37
உரை
   


ஆயிரவாகு அருச்சுனனுடன் பொருது அழிதல்

ஆயிரம் பதின்மடங்கு தேர், இபம் அதன் மும் மடங்கு,
                                அடல் வாசி
ஆயிரம் சதம், அதனின் மும் மடங்கு காலாளுடன், அணி ஆக்கி,
ஆயிரம் புயத்து அருச்சுனன் நிகர் என, ஆழியால் துணிப்புண்ட
ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன்-ஆடல் ஆயிரவாகு.

38
உரை
   

உரம் கொள் ஆயிரம் பொலங்கிரி அனையன ஓர் ஒரு குனி
                                வில், செங்
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து, ஆயிரங்கண்ணன்
                                மைந்தனை நோக்கி,
வரங்கள் ஆயிரம் மறையொடும் பெற்றவன், மதி வகிர்
                                முகம் ஆன
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடைதனில் எழும்படி, எய்தான்.
39
உரை
   

எடுத்த போதில் ஒன்று, அருங் குதை நாணிடை இசைத்த போது
                                ஒரு பத்து,
தொடுத்த போதில் நூறு, உகைத்த போது ஆயிரம் என வரும்
                                சுடர் வாளி
அடுத்த போர் முடி மன்னவன் விடும்விடும் அநேக
                                ஆயிரம் அம்பும்
தடுத்த போது, ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன்
                                எதிர் நின்ற.
40
உரை
   

அலி முகம் தொழும் இளவல், வாணனைப் புயம் அழித்த மா
                                மறை ஒன்று
வலிமுகம் கொடி உயர்த்தவன் செவியினில் உரைக்க, மற்றுஅது
                                பெற்று, அங்-
குலி முகம் செறி வரி சிலை கால் பொரக் குனித்து,
                                வன்பொடு தொட்ட
சிலிமுகங்களின் துணித்தனன், ஆயிரம் சிகர வாகுவும் சேர.
41
உரை
   

மீதலம்தனக்கு இறைவன் வச்சிரத்தினால் வெற்பு இனம்
                                சிறகு அற்றுப்
பூதலம்தனில் விழுந்தபோல் விழுந்தன, புயங்கள்
                                ஆயிரமும் போய்-
காதல் அங்கனை தடம் படிந்து ஏகுதல் கண்டு, காமுகன் ஆகி,
பாதலம் புகுந்து, இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெங்
                                கணையாலே.
42
உரை
   

'அன்று அருச்சுனன் ஆயிரம் புயங்களும் அரிந்தனன், மழுவீரன்;
இன்று அருச்சுனன் இவன் புயம் அரிந்தனன்' என்று
                                இமையவர் ஏத்த,
துன்று அருச்சுன நான்மறை உரலுடன் தொடர, முன் தவழ்ந்து
                     ஓடிச் சென்று, அருச்சுனம் இரண்டு
உதைத்தருளினோன் செலுத்து தேரவன் சென்றான்.
43
உரை
   


பட்டவர்த்தனரும் முடிமன்னரும் திரண்டு வந்து
விசயனுடன் பொருது, பலர் உயிர் இழத்தலும்,
பலர் தப்பியோடுதலும்

கடிகை முப்பதும் சிந்துவுக்கு அரசனைக் காக்குமாறு அறைகூவி,
இடி இடித்தெனப் பல்லியம் அதிர்தர, எழு கடற் படையோடும்
படி நடுக்குற, பணிக் குலம் நெளித்திட, பட்டவர்த்தனர் உள்ளார்,
முடி தரித்தவர், அனைவரும் திரண்டு, ஒருமுனைபட எதிர் சென்றார்.

44
உரை
   

பரிதியால் வளைப்புண்ட செம் பரிதியின் பற்குனன் தனு வாங்கி,
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா
நெரிதரும்படி தொடுத்து, வெங் கொடி பரி நேமி அம் தேர் கோடி
கரிகளும் துணிபடப் பட மலைந்தனன், கடிகை ஒன்றினில் மாதோ.
45
உரை
   

போரில் வெவ் விடாய் தணிவுற, களத்தினில்
                 புறங்கொடுத்தவர், சோரி
நீரில் மூழ்கியும், கழுகு இடு காவண நீழல் ஆறியும், சென்றார்;
தேரில் வாசியில் களிற்றில் வந்தவர்களில், சேவடி சிவப்பேற
யார் யார் குதித்து ஓடுதல் ஒழிந்தவர், எறி படை
                 வீழ்த்திட்டே!
46
உரை
   

நின்று பட்டனர், தனித்தனி அமர் புரி நிருபர்; முந்துற ஓடிச்
சென்று பட்டனர், சேனை மண்டலிகர்; வெஞ் சினம் பொழி சிறு
                  செங் கண்
குன்று பட்டன; பட்டன, நவ கதிக் குரகதக் குலம் யாவும்;
அன்று பட்டவர்க்கு உறையிடப் போதுமோ, அநேக
                  நாளினும் பட்டார்?
47
உரை
   

அநேகம் ஆயிரம் பேர் பட, கவந்தம் ஒன்று ஆடும்;
                                அக் கவந்தங்கள்
அநேகம் ஆயிரம் ஆட, வெஞ் சிலை மணி அசைந்து
                                ஒரு குரல் ஆர்க்கும்;
அநேக நாழிகை அருச்சுனன் சிலை மணி ஆர்த்தது;
                                அக் களம் பட்ட
அநேகம் ஆயிரம் விருதரை அளவு அறிந்து ஆர்கொலோ
                                உரைக்கிற்பார்?
48
உரை
   


சூரியன் உச்சிப் பொழுது அடைதல்

வெவ் வாசி நெடுந் தேர் மிசை நிமிரா வரி வில் கொண்டு
இவ்வாறு அமர் புரி காலையில், எழு செங் குருதியினால்,
அவ் ஆடு அரவு உடையான் அழி ஆயோதனம், அந்திச்
செவ் வானகம் என வந்து சிவப்பு ஏறியது, எங்கும்.

49
உரை
   


'நீர் உண்ணாவிடில் குதிரைகள் செல்லமாட்டா' எனக்
கண்ணன் கூற, விசயன் வருணன் அம்பினால்
ஒரு தடாகம் உண்டு பண்ணுதல்

முருகு ஆர் இரு சிறை வண்டுஇனம், முளரிப் புது மலர் விட்டு,
அருகு ஆர் பொழில் நிழலூடு அணி அலர் நாள்மலர் உறவே,
இரு காலமும் முக் கால் விடு கைம் மாரி, இருக்கால்,
ஒரு கால் அரு மறையோர் விடு பதம் நண்ணினன், உதயன்.

50
உரை
   

'விரவார் முனை அடு தேர் நுக வெவ் வாசிகள் புனல் உண்டு,
உரவாவிடில், ஓடா இனி' என்று ஐயன் உரைப்ப,
அரவாபரணன் தந்தருள் அரு மா மறை வருணச்
சரவாய் வர எய்தான்; அவண் எழலுற்றது, ஒர் தடமே.
51
உரை
   

ஆழம் புணரியினும் பெரிது; அதினும் பெரிது அகலம்;
சூழ் எங்கணும் வண் தாமரை; துறை எங்கணும் நீலம்;
கீழ் எங்கணும் நெடு வாளை, வரால், பைங் கயல், கெண்டை;
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம்.
52
உரை
   

ஒருபால், வளர் போதா நிரை; கரு நாரைகள் ஒருபால்;
ஒருபால், உளம் மகிழ் நேமிகள்; அன்றில் குலம் ஒருபால்;
ஒருபால், மட அன்னம்; புனல் அரமங்கையர் ஒரு பால்;
ஒருபால், இருபாலும் தவழ் ஒளி நந்து உறை புளினம்.
53
உரை
   


தடம் கண்டு கண்ணன் உரைப்ப, விசயன் புரவிகளுக்கு
நீர் ஊட்டி இளைப்பாறுதல்

தல மா மகள் உந்தித் தடம் நிகரான தடம் கண்டு,
உலம் மாறு கொள் இரு தோள் வலியுடை வள்ளல் உரைப்ப,
குல மா மணி அனையான் விரை தேர்நின்று எதிர் குதியா,
வலம் ஆன துரங்கங்களை வள் வார் விசி நெகிழா,

54
உரை
   

குவளைப் பரிமளம் மேவரு குளிர் வாரி பருக்கி,
பவளத் துவர் வாயான் இரு பாதம் கை விளக்கி,
தவளக் கிரி ஒரு நால் என மேன்மேல் ஒளிர்தரு போர்
இவுளிக்கும் இளைப்பு ஆற, இளைப்பு ஆறினன், இப்பால்,
55
உரை
   


'விசயனோடு பொரச் சென்றவர் தப்பார்' என்று ஓடிவந்தவர் சொல்ல, துரியோதனன் துரோணனிடம் சென்று குறையிரத்தல்

அப்பால் இவனுடனே பொருது அனிலத்து எதிர் சருகோடு
ஒப்பாய், உளம் வெருவு எய்தி, உடைந்து ஓடிய வீரர்,
'தப்பார் ஒருவரும், இன்று அடு சமரம்தனில், விசயன்
கைப் பாய் கணை பொர நொந்தவர், கழல் மன்னவ!' என்றார்.

56
உரை
   

துரியோதனன் அவர் சொல்லிய சொல் தன் செவி சுடவே,
அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான்,
எரி ஓடிய புரி என்ன இளைத்து, ஆரண வேள்விப்
பெரியோன் அடி எய்தி, சிறுமையினால், இவை பேசும்:
57
உரை
   

'அதிரேக விறல் பற்குனன் அம்போடு எதிர் அம்பு இட்டு,
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார்?
கதிர் ஏகிடும் முன் துச்சளை கணவன் தலை கடிதின்
பிதிர் ஏறுவது அல்லாது, அது பிழைப்பிப்பவர் இலரால்.
58
உரை
   

'காணாத இடத்து ஆண்மை உறக் கூறுவர்; கண்டால்,
ஏண் ஆடு அமர் முனைதன்னில் இமைப்போது எதிர் நில்லார்;
நாணாது முன் வென்னிட்டிடும் நம் சேனை அடங்கச்
சேண் நாடு உறும், இன்றே; ஒரு செயல் கண்டிலம், ஐயா!
59
உரை
   

'குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி,
தனி நான் அவன் உயிர் கொள்ளுதல் தவிர்கிற்குதல் அல்லால்,
முனி நாயக! வேறு ஓர் விரகு இல்லை; திருமுன்னே,
இனி நாடி, அடும் போர் விரைவொடு காணுதி' என்றான்.
60
உரை
   


துரோண முனிவனின் மறுமொழி

முனியும் தரணிபனோடு சில் மொழி நன்கின் உரைக்கும்
'துனி கொண்டு உளம் அழியாது ஒழி; துணிவுற்றனை முதலே;
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால்;
அனிகங்கள் அழிந்தாலும், நின் ஆண்மைக்கு அழிவு உண்டோ?

61
உரை
   

'உரனால் வரு தேர் ஒன்றினில் உற்றோர் இருவரையும்,
"நர நாரணர் இவர்" என்பார்கள், ஞானத்தின் உயர்ந்தோர்;
அரனார் திருவருளால் முனை அடல் வாளிகள் பலவும்,
வரனால் உயர் மறையும், பிறர் மற்று ஆர் நனி பெற்றார்?
62
உரை
   

'தவரோடு அவன் நின்றால், விதிதானும் தரம் அல்லன்;
எவரோ, மலையோடும் பொருது, இரு தோள் வலி பெற்றார்?
உவர் ஓதநிறத்தோன் அவன் உயர் தேர் நனி ஊர்வான்;
அவரோடு இனி அமர் வெல்லுதல் ஆர்ஆயினும் அரிதால்!
63
உரை
   

"அதிகம் பகை தமரோடு உறல் ஆகாது" என, அரசர்க்கு
எதிர், அன்று, அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய்;
விதுரன் தனது உளம் நொந்து அடல் வில்லும் துணிசெய்தான்;
மதியின் திறன் அறிவோர் மொழிவழி வந்திலை, மன்னா!
64
உரை
   

'மன் ஆகவம் மதியா விறல் வயவன்தனை விசயன் -
தன்னால் ஒரு பகலே உயிர் தபுவித்திடல் ஆமோ?
மின் ஆர் வடி வேலாய்! இவை விதியின் செயல் அன்றோ?'
என்னா, ஒரு கவசம்தனை இவன் மெய்யினில் இட்டான்.
65
உரை
   


துரோணன் அழிவற்ற கவசம் ஒன்றைத் துரியோதனனுக்கு
அணிய, அவன் போருக்குப் புறப்படுதல்

'பங்கயாசனன் வாசவற்கு அளித்தது; வாசவன் பயில் போரில்
அங்கராவினுக்கு உதவியது; அங்கரா எனக்கு அருளியது, இந்தத்
தொங்கல் மா மணிக் கவசம்; எவ் வீரரும் தொழத்தகு
                                கழற் காலாய்!
புங்க வாளியில், படைகளில், ஒன்றினும் பொன்றிடாது,
                                இது' என்றான்.

66
உரை
   

இட்ட பொற் பெருங் கவசமோடு எழுந்தனன், இராசராசனும்; உள்ள
பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர்களும் பல படைஞரும் கூடி,
எட்டு இபத்தின் வெஞ் செவிகளும் செவிடுறப் பல்லியம்
                                எழுந்து ஆர்ப்ப
முட்ட விட்டனர், தனஞ்சயன் நின்ற மா முனையில், வேல்
                                முனை ஒப்பார்.
67
உரை
   


துரியோதனன் சேனைகள் விசயன் ஆக்கிய தெய்விகப்
பொய்கையில் நீர் பருகி விடாய் தீர்ந்து, விசயனை வளைத்தல்

சென்ற சென்ற வெஞ் சேனைகள் இளைப்பு அற,
                                தெய்விகத்தினில் வந்த
மன்றல் அம் பெரும் பொய்கை நீர் பருகி, அப் பொய்கையின்
                                வளம் நோக்கி,
'என்றும் என்றும் நாம் நுகர் புனல் அன்று; நல் இன் அமுது
                                இது' என்பார்,
தென்றல் அம் தடஞ் சோலையில் கரைதொறும் சேர்ந்து, தம்
                                விடாய் தீர்வார்.

68
உரை
   

மத்த வாரணம் கொண்டு, செந்தாமரை வனம் கலக்குறுவிப்பார்;
தத்து பாய் பரி நறும் புனல் அருத்துவார்; தாமும் நீர்
                                படிகிற்பார்;
கைத்தலங்களில் அளி இனம் எழுப்பி, மென் காவி நாள்
                                மலர் கொய்வார்;
'இத் தலத்தினில், இம் மலர்ப் பரிமளம் இல்லை' என்று
                                அணிகிற்பார்.
69
உரை
   


விசயன் புரவிகளுக்கு நீரூட்டும்போது, துரியோதனன் பெரும்
படையுடன் வருதல் கண்டு, புரவியைத் தேரில் பூட்டி, கண்ணன்
அனுமதியுடன் தரையில் நின்ற வண்ணம் பொருதல்

இன்னவாறு தம் அசைவு ஒழிந்து, யாவரும் இப ரத துரகத்தோடு,
அன்ன வாவியை வளைத்தனர், கடல் வளை ஆழி மால்
                                வரை என்ன;
துன்னு மா மணித் தேரின்நின்று இழிந்து, தன் சுவேத மா
                                நீர் ஊட்டும்
மன்னு வார் கழல் மகபதி மதலை அவ் வரூதினிக் கடல் கண்டான்.

70
உரை
   

கண்ட போது பின் கண்டிலன், கண்ட அக் கடவுள்
                                வாவியை;நல் நீர்
உண்ட வாசியைத் தேருடன் பிணித்து, வில் ஓர்
                                இமைப்பினில் வாங்கி,
'வண் துழாய் மது மாலையாய்! வளைந்து மேல் வரு வரூதினிதன்னை
அண்டர் ஊர் புக விடுத்த பின், தேரின்மேல் ஆகுமாறு
                                அருள்' என்றான்.
71
உரை
   

கன்று சிந்தையன், கோப வெங் கனல் பொழி கண்ணினன்,
                                காலாளாய்
நின்று, தேரினும் களிற்றினும் பரியினும், நிரைநிரை தரங்கம்போல்,
சென்று சென்று அடு வீரரைத் தனித்தனி சரத்தினால் சிரம் சிந்தி,
கொன்று கொன்று சூழ்வரக் குவித்தனன், மதக் குன்றுதான்
                                என நின்றான்.
72
உரை
   

தலைவனாம் முனி கிருபனும், கிருதனும், துரகதத்தாமாவும்,
அலைவு உறா மனத்து அரசரும், சேனையும், முனைந்து,
                                அணி அணியாக,
சிலைவலான் எதிர், மிசைபடத் தேர்மிசை விசை உறச் சிலை வாங்கி,
வலைய வாகுவின் வலியெலாம் காட்டினார், வரம் கொள்
                                வாளிகள் வல்லார்.
73
உரை
   

கைதவன் குலக் கன்னி கேள்வனும், ஒரு கணைக்கு
                                ஒரு கணையாக
எய்து, வெங் கணை யாவையும் விலக்கி, மேல் இரண்டு நால்
                                எட்டு அம்பால்,
வெய்தின் நேமி அம் தேரொடு கொடிகளும் வில்லும்
                                வாசியும் வீழக்
கொய்துகொய்து, பல் பவுரி வந்தனன், விறல் குன்றவில்லியொடு
                                ஒப்பான்.
74
உரை
   

தேரில் நின்றவர் பாரில் நின்றவன்மிசை விடு கணைத்
                                திரள் மின்னுக்
காரின்நின்று பாதலம் உற, உரகமேல் கனன்று
                                வீழ்வன போன்ற;
பாரில் நின்றவன் தேரில் நின்றவர்மிசை விடு
                                கணை பாதாலத்து
ஊரில்நின்று, உருமையும் விழுங்குவம்' என, உரகம்
                                ஏறுவ போன்ற.
75
உரை
   


வந்த சேனையை நிலைகுலையச் செய்தபின், விசயன்
கண்ணனோடு இன்புறத் தேரில் ஏறுதல்

சேண் நிலத்தின்மிசை நின்று அமர் தொடங்கினவர் தேர்கள்
                          இற்றன; தறிந்தன, நெடுந் துவசம்;
நாணி அற்றன; ஒடிந்தன, தடஞ் சிலையும்; நாகம் உற்றவர்
                          ஒழிந்தனர், இரிந்தனர்கள்;
நீள் நிலத்தினிடை நின்று சமர் வென்றவனும், நேமி வச்ர மகுடம்
                          புனை கொடிஞ்சியுடை,
ஏண் நிலத்து இவுளி முந்த, முனை உந்து, இரதம் ஏறியிட்டனன்,
                          முகுந்தனுடன் இன்புறவே.

76
உரை
   


துரியோதனன் சகுனி முதலியோருடன் வந்து வளைத்தல்

ஏறியிட்டவன் விரைந்து, இரதமும் கடவி, ஏகலுற்ற பின், இயம்
                                பல தழங்கி எழ,
வேறுபட்டு அமர் உடைந்தவர்களும் திருகி மேலிட, சகுனியும்
                                தினகரன் சுதனும்,
ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கமமும் ஆக, இப்படி பொரும்
                                படையொடு, அன்று, நனி
சூறியிட்டனன்-வலம்புரி அலங்கல் புனை தோளில் எப் புவனமும்
                                தனி சுமந்தவனே.

77
உரை
   


'இவர்கள் நெருங்கி வந்து பொருதற்கு யாது காரணம்?' என
விசயன் கண்ணனை வினவ, அவன் துரோணன் அளித்த
கவசத்தின் தன்மை கூறி, அதனை அழிக்குமாறு தூண்டுதல்

'யோதனத்தில், இவன் என் கண் எதிர், இன்று அளவும்,
              யோசனைக்கும் இடை நின்றிலன்; முனைந்து சமர்
மோதுகைக்கு நினைவு உண்டுகொல்? எதிர்ந்து மிக மோகரித்து
              வருகின்றது தெரிந்ததிலை;
யாது பெற்றனன், நெடுஞ் சிலைகொல், வெங் கணைகொல், ஏதம்
              அற்ற கவசம்கொல், இரதம் கொல்?' என
மாதவற்கு இடை வணங்கி, 'இது என்கொல்?' என, வாசவக் கடவுள்
              மைந்தன் உரைதந்தனனே.

78
உரை
   

ஈசன் அப்பொழுது உணர்ந்தருளி, வென்றி வரி ஏறு விற்கு உரிய
                       பற்குனனுடன், 'பழைய
வாசவற்கு அயன் வழங்கு கவசம் துவச மாசுணற்கு அருளினன்,
                       கலச சம்பவனும்;
ஆசுகத்தினில் ஒழிந்த பல துங்க முனை ஆயுதத்தினில்
                       அழிந்திடுவது அன்று; அதனை
நீ செகுத்திடுதி!' என்று, துரகங்களையும் நேர்படக் கடவினன்,
                       கதி விதம் படவே.
79
உரை
   


தனஞ்சயன் அம்பின் எதிரே பலரும் பின்னிடுதல்

கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு
                                முனை வெஞ் சமரில்,
மேல் நடக்குமவர்தங்கள் மகுடங்களினும், மேரு ஒத்து உயர்
                                புயங்களினும், உந்தியினும்,
ஆனனத்தினும், நுழைந்து உருவ, வெம் பரிதி ஆயிரக் கிரணமும்
                                புடை பரந்ததுஎன,
வானகத்து வெளி இன்றி அணி பந்தர் இட, வாளி விட்டனன்,
                                மனம் செய்து தனஞ்சயனே.

80
உரை
   

நா தெறித்தன, துரங்கமம்; நெடுஞ் சிலைகள் நாணி அற்றன;
                                உடைந்தன, தடந் திகிரி;
பாதம் அற்றன, மதம் கய விதங்கள்; பொரு பாகர் பட்டனர்;
                                மறிந்தன, நெடுந் துவசம்;
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம்
                                அடங்கலும் நெகிழ்ந்து, அரசர்
ஆதபத்திரம் அழிந்தன;-இவன்தனுடன் ஆர் சரத்தொடு சரம்
                                தொட இயைந்தவரே?
81
உரை
   

ஆர் அமர்க்கண் மிக நொந்து, இரவி மைந்தன், நெடிது
                       ஆகுலத்தொடும் இரிந்தனன்; விரிந்த மணி
வார் கழற் சகுனியும், துணைவரும், தம் முகம் மாறியிட்டனர்;
                       மறிந்தனர், கலிங்கர் பலர்;
சீருடைக் கிருபனும் கிருதனும், பழைய சேதி வித்தகனும்,
                       அஞ்சினர் ஒடுங்கினர்கள்;
பூரி பட்டிலன்; நெருங்கி அணி நின்று பொரு பூபர் பட்டனர்,
                       ஒழிந்தவர் புறந்தரவே.
82
உரை
   


துரோணன் அளித்த கவசத்தை அணிந்து, துரியோதனன் விசயன் எதிர் பொருதல்

தேவருக்கு அரசன் உந்து கன பந்தி நிகர் தேரிடைப் பணி நெடுங்
                    கொடி நுடங்கி எழ,
மா உகைத்து வலவன் திறலுடன் கடவ, மா முடிக்கண் மகுடம் திகழ,
                    அன்று பெறு
காவல் மெய்க் கவசமும் தனி புனைந்து, சிலை கால் வளைத்து,
                    அவிர் பெரும் பிறைமுகம் செய் கணை
தூவி உற்று, எதிர் முனைந்தனன்-அனந்த ஒளி தோய் கழல் தரணி
                    மண்டல துரந்தரனே.

83
உரை
   

கோமகக் குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர்
                                விலங்கி, விசயன் தனது
தீ முகக் கணை அனந்தம் நிலை ஒன்றில் முனை சேர விட்டனன்;
                                விடும் பொழுதின், அந்த விறல்
மா மணிக் கவசம் எங்கும் உடன் ஒன்றி, ஒரு மால் வரைப்
                                புயலின் நுண் துளி விழுந்த பரிசு
ஆம் என, தலை மழுங்கி, அவை ஒன்றும் அவன் ஆகம் உற்றில;
                                அசைந்திலன், அசஞ்சலனே.
84
உரை
   


வாளிகள் துரியோதனன் கவசத்தை அழியாமை கண்டு,
விசயன் வேல் கொண்டு எறிய, அசுவத்தாமன் தன்
அம்புகளால் அதனைத் துணித்தல்

வீரன் விட்டன சரங்கள் அவன் ஒண் கவசம் மேல் உறப்
                          படுதல் இன்றி விழுகின்ற நிலை
ஓர் இமைப்பினில் அறிந்து, குமரன் கை அயிலோடு உரைக்க
                          உவமம் பெறு விடம் கொள் அயில்,
தேரினில் பொலிய நின்று, இரு கை கொண்டு, நனி சீறி, மெய்ப் பட
                          எறிந்தனன்; எறிந்தளவில்,
வார் சிலைக் குருவின் மைந்தன் அது கண்டு, அதனை வாளியின்
                          துணிபடும்படி மலைந்தனனே.

85
உரை
   


அருச்சுனன் தளர்நிலை கண்டு, கண்ணன் வலம்புரி முழக்க, மண்டலிகர் மயக்கமுறுதல்

வாகை நெட்டயில் துணிந்திடலும், வன்பினுடன் மா நிரைத்து
                      இரதமும் கடவி வந்து, முதல்
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனை ஆய் எதிர்த்து, ஒரு
                      முகம்பட நெருங்கி, மிக
மோகரித்து வருகின்ற செயல் கண்டு, அமரர் மூவருக்கு அரியவன்
                      கழல் பணிந்து, பரி-
தாகம் உற்று, அமர் தொடங்கவும் மறந்து, கமழ் தார் அருச்சுனன்                        உயங்கினன், அனந்தரமே,

86
உரை
   

கோ மணிக் குரல் உகந்து புறவின்கண் உயர் கோவலர்க்கு நடு
                         நின்று முன் வளர்ந்த முகில்,
காமனுக்கு இனிய தந்தை, சமரம் பொருது காதல் மைத்துனன்
                         அயர்ந்த நிலை கண்டு, பல
தாமரைக்குள் ஒரு திங்கள் என, அங்குலி கொள் தாழ் தடக்
                         கைகள் இரண்டு ஒரு முகம் பயில,
மா மணிக் குழல் மணம் கமழ் செழும் பவள வாயில் வைத்தனன்,
                         நலம் திகழ் வலம்புரியே.
87
உரை
   

நாகர் பொன் தருவை அம் புவியில் அன்று தரு நாதன், வச்சிர
                       வலம்புரி முழங்கு குரல்,
மேகம் ஒக்கும் என, வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும்
                       என, எங்கணும் எழுந்த பொழுது,
ஆகம் முற்றுற நெகிழ்ந்து புளகம் புரிய, ஆகவத்து எழு கடுஞ்
                       சினம் மடிந்து அவிய,
மோகம் உற்றனர், எதிர்ந்து பொரு மண்டலிகர்; மோழை
                       பட்டதுகொல், அண்ட முகடும் சிறிதே!
88
உரை
   


அப்பொழுது, கண்ணன் விசயனுக்கு வேல் அளிக்க, அவன்
அதனை எறிந்து, துரியோதனன் கவசத்தைத்
துகளாக்குதலும், யாவரும் பின்னிடுதலும்

பால் நிறப் புரவி உந்தி இரதம் கடவு பாகன் மற்று அவர்
              மயங்கியது உணர்ந்தருளி,
மேல் நிலத்து நரகன்தன் உயிர் கொண்டது ஒரு வேல்
              கொடுத்து, 'இதனில் வென்றிடுதி' என்றளவில்,
வான வச்சிரன் மகன் கடிது உவந்து, 'பெரு வாழ்வு பெற்றனம்!'
              எனும் பரிவினன், தனது
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து, திரு நாள்மலர்ப் பதம்
              வணங்கி, அது கொண்டனனே.

89
உரை
   

'மாறுபட்டு இவனை இன்று உயிர் கவர்ந்துவிடின், மா மருத்தின்
                       மகன் வஞ்சினம் அழிந்துவிடும்;
ஊறுபட்டு வெருவும்படி எறிந்து, அமரின் ஓடுவிப்பது பெருந்தகைமை'                        என்று கொடு
நூறு பட்ட மகவின் தலைவன், நெஞ்சம் மிக நோதகக் கடிது
                       எறிந்தனன்; எறிந்தளவில்,
நீறுபட்டது, பெருங் கவசம்; வந்த வழி நேர்படத் திருகினன்,
                       சமரில் நின்றிலனே.
90
உரை
   

ஆறுபத்து இருபது ஐம்பது பெரும் பகழி ஆக விட்டு, வரி வன்
                         சிலையும், வெம் பரியும்,
ஏறு பைத் தலை நெடுந் துவசமும், புதிய ஏழு தட்டு இரதமும்,
                         துணிசெய்து, அங்கு அருகு
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு, தேர் அருக்கன்
                         மகனும், சகுனியும், பலரும்,
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல, மீள விட்டனன்,
                         முன் எண் திசையும் வென்றவனே.
91
உரை
   

வேர்த்து எதிர் விசயன் வென்ற களத்தில்
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்கொல் பிழைத்தார்?
ஏத்திய பதினெண் பூமியின் எண்ணும்
பார்த்திவர் பற்பல் ஆயிரர் பட்டார்.
92
உரை
   

தம்பியரும், துச்சாதனன் முதலோர்,
அம்பில் அழிந்து, தம் ஆர் உயிர் உய்ந்தார்;
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ,
அம்பரம் உற்றது அனைவரும் உற்றார்.
93
உரை
   

மாரதர் வீந்தார்; அதிரதர் மாய்ந்தார்;
சாரதிகளும் வன் தலைகள் இழந்தார்.
நாரதன் முதலோர் நாகர் அநேகர்
'பாரதம் இன்றே பற்று அறும்' என்றார்.
94
உரை
   

இந்த வயப் போர் இம் முறை வென்று,
பைந் துளவோனும் பார்த்தனும் ஆக,
சிந்து மகீபன்-தேடி மணித் தேர்
உந்துறும் எல்லை, உற்றது உரைப்பாம்:
95
உரை
   


கண்ணனது சங்கநாதம் கேட்ட தருமன், சாத்தகியை
அழைத்து, விசயனது போர்ச் செய்தி அறிந்து வர அனுப்புதல்

வள்ளல் குறித்த வலம்புரி நாதத்
தெள் அமுதம் தன் செவி உறு போழ்தின்,
உள் அணி நின்ற முரசம் உயர்த்தோன்
தள்ளுறு நெஞ்சில் சங்கையன் ஆனான்.

96
உரை
   

தன் துணை நின்ற சாத்தகியைக் கூய்,
'வென்றிடு போரில் விசயன் இளைத்தால்
அன்றி, முழக்கான் அதிர் வளை, ஐயன்;
சென்று அறிகுதி நீ' என்று உரைசெய்தான்.
97
உரை
   

'வன்கண் திண் தோள் மன் பலர் நிற்க,
என்கண் தந்தான் இன் உரை' என்னா,
மன் கள் தாரோன் மலர் அடி வீழ்ந்தான்,
தன் கட்டு ஆண்மைத் தன் முனொடு ஒப்பான்.
98
உரை
   

'கண்ணுற நில்லார், கடவுளர் முதலாம்
விண்ணவரேனும், விசயன் வெகுண்டால்;
மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ?
தண் அளி நெஞ்சும் தருமமும் மிக்கோய்!'
99
உரை
   


அதிரதரோடு சென்ற சாத்தகி, தூசி பிளந்து சென்று, கிருதவர்மனை வெல்லுதல்

என்று, அறன் மைந்தன் ஏவல் தலைக் கொண்டு,
அன்று ஒரு தேர்மேல் அதிரதரோடும்
சென்றனன் வெய்தின், தேவகி மைந்தன்,
துன்றிய செருவில் தூசி பிளந்தே.

100
உரை
   

விருதொடு முந்த விளங்கிய கொற்றக்
கிருதனை, ஆதிக் கேழலொடு ஒப்பான்
ஒரு தனுவும் கொண்டு, ஊர் பரிமாவும்
இரதமும் வில்லும் இமைப்பில் அழித்தான்.
101
உரை
   


சாத்தகி சலசந்தனோடும், துரியோதனன் தம்பியர் நால்வரோடும்
பொருது வெல்லுதல்

பல் மக நூறாயிரவர், பரித் தே-
ரன் மிக, நூறாயிரவர் அழிந்தார்;
மன் மத வெங் கை மலைமிசை, வீரன்
தன் முன் மலைந்தான், தார்ச் சலசந்தன்.

102
உரை
   

தார்ச் சலசந்தன், சாத்தகி என்னும்
கார்ச் செலவு ஆய கணை மழையாலே,
போர்ச் சலம் இல்லாப் புகர் மலையோடு
மேல் சலம் எய்தி வெங் கனல் ஆனான்.
103
உரை
   

நாட்டம் இல்லா நரபதி மைந்தர்
ஈட்டம் ஆக ஈர்-இருவோர்கள்
கூட்டு அம்பு எய்ய, கொடு முனை வென்றான்,
வேட்டம் போன வெங் களிறு ஒப்பான்.
104
உரை
   

யாரும் போரில் எளிவர வீரம்
சாரும் சாபம் தன்னொடு நேமித்
தேரும் தானும் சென்றிடுவோனை,
கூரும் சாபக் குரு எதிர் கண்டான்.
105
உரை
   


சாத்தகியைத் துரோணன் தடுக்க, இருவரும் ஒத்துப் பொருது இளைத்தல்

'ஏகல், ஏகல்! என்னுடன் இனி அமர் புரிந்து ஏகு!' என்று,
ஆகுலம் படத் தகைந்தனன், அடற் சிலை ஆசான்;
மேகவண்ணனுக்கு இளவலும், 'வேதியருடன் போர்
மோகரிப்பது தகுதி அன்று எனக்கு' என மொழிந்தான்.

106
உரை
   

இருவரும் தமது இரு சிலை எதிர் எதிர் குனித்தார்;
இருவரும் கொடும் பகழிகள் முறை முறை எய்தார்;
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார்;
இருவரும் பெரும்பொழுது அமர் திளைத்தனர், இளைத்தார்.
107
உரை
   


பின், சாத்தகி இளைப்பு ஆறி, மேற் செல்ல, துச்சாதனன்
தடுத்து நிற்கலாற்றாது பின்னிடுதல்

இளைத்து வேதியன் நிற்ப, மன்னவன் இளைப்பு ஆறி,
உளைத் தடம் பரித் தேரும் மற்று ஒன்று மேல்கொண்டு,
வளைத்த வில்லொடும் மன் அணி கலக்கி மேல் வருவோன்,
கிளைத்த பல் பெருங் கிரணனில் வயங்கு ஒளி கிளர்ந்தான்.

108
உரை
   

யானை தேர் பரி வீரர் ஈர்-ஒன்பது நிலத்துத்
தானையோடு துச்சாதனன் அடுத்து, எதிர் தடுத்தான்;
சோனை மேகம் ஒத்து இவன் பொழி தொடைகளால், கலங்கி,
பூனைபோல் அழிந்து, இரு பதம் சிவந்திடப் போனான்.
109
உரை
   


பின்னும் தடுத்தவர்களை எல்லாம் வென்று, சாத்தகி விசயன் நின்ற இடம் சார்தல்

இடையில் வந்துவந்து, எதிர்த்தவர் யாரையும் கடந்து,
புடை வரும் தனது அனீகினி நிழல் எனப் போத,
தடை அறும்படி தருக்குடன் சார் பெரும் பருவ
விடை நடந்தென நடந்தனன் விசயன் நின்றுழியே.

110
உரை
   


சாத்தகி வாராமையால், தருமன் கவலைகொண்டு, வீமனையும்
விசயன் நின்ற இடத்திற்கு அனுப்புதல்

பின்னரும் கொடி முரசுடைப் பெருந்தகை வருந்தி,
முன்னம் நின்ற வாயுவின் மகன் முகனுற நோக்கி,
'மன்னர் எண் படு வரூதினி வாரியின் நாப்பண்,
என்னர் ஆயினர், உம்பியும் எம்பெருமானும்?

111
உரை
   

'தகல் அருந் திறல் சாத்தகிதன்னையும் விடுத்தேம்;
பகலும் மேல்திசைப் பட்டது; பாஞ்சசன்னியமும்
புகலுகின்றது, போர்முகத்து, அதிர் குரல் பொம்ம;
இகல் வலம் பட நீயும் அங்கு ஏகுதி' என்றான்.
112
உரை
   


வீமன் நாற்படையொடு விரைந்து, எதிர்ந்தாரை வென்று மேற்செல்லுதல்

சொன்ன வார்த்தையும் பிற்பட முற்படத் தொழுது,
தன்னொடு ஒத்த தோள் வலியுடைத் தரணிபர் அநேகர்
மன்னு நால் வகைப் படையொடும் திரண்டு, இரு மருங்கும்
பின்னும் முன்னும் மொய்த்து உடன் வர, போயினன், பெரியோன்.

113
உரை
   

கலிங்கர், மாகதர், மாளவர், கௌசலர், கடாரர்,
தெலுங்கர், கன்னடர், யவனர், சோனகரொடு சீனர்,
குலிங்கர், ஆரியர், பப்பரர், குச்சரர், முதலோர்
விலங்கினார்களை, விண் உற விலக்கி, மேல் விரைந்தான்.
114
உரை
   

உரங்க வெங் கொடி உயர்த்த காவலன்தனக்கு இளையோர்,
துரங்கம் ஆதி கொள் பலர் பெருஞ் சேனையின் சூழ்ந்தோர்,
இரங்கும் ஆழ் கடல் பேர் உக இறுதியில் எறியும்
தரங்கம் நேர் என, இடைஇடை தனித்தனி தகைந்தார்.
115
உரை
   

முல்லை, மல்லிகை, உற்பலம், குமுதம், மா முளரி,
பல்லம், வாள், அயில், சூலம், என்பன முதல் பகழி
எல்லை இல்லன, இடையறா வகை தொடுத்து எதிர்ந்தார்,
வில் விதங்களில் யாவையும் பயின்ற கை விறலோர்.
116
உரை
   


விந்தன், விந்தரன் முதலிய துரியோதனன் தம்பியர்
முப்பத்தைவர் வீமனால் மாள, எதிர்ந்த சேனை சிதைதல்

விந்தன் விந்தரன் இருவரும், மேலிடு முனையில்,
தம்தம் வாசியும், தேர் விடு பாகரும், தாமும்
அந்தரம்தனில் தலைகள் போய் முகில்களை அலைப்ப,
சிந்து சோரி போய்ப் பெருங் கடல் அலைத்திட, சிதைந்தார்.

117
உரை
   

போர்க்கு முந்துறு தேரினான் குண்டலபோசி,
தீர்க்கலோசனன், திண் திறல் சித்திரசேனன்,
மார்க்கம் நேர்பட, விலங்கி, மா மறலி நேர் வரினும்
தோற்கலாதவர் மூவரும், தம் உயிர் தோற்றார்.
118
உரை
   

சேர முப்பது குமாரர்கள், சென்று அமர் மலைந்தோர்,
ஓர் ஒருத்தருக்கு ஓர்ஒரு சாயகம் உடற்றி,
சூரன் மெய்த் துணை நோதகும்படி உடன் தொலைத்தான்;-
மாருதச் சுதன் வல்ல வில் ஆண்மை யார் வல்லார்?
119
உரை
   

ஆயு அற்றவர் சுயோதனன் இளைஞர் ஏழ்-ஐவர்
வாயு புத்திரன் வாளியால் ஆர் உயிர் மடிய,
சாய்தலுற்றது, சடக்கெனத் தரணிபன் வியூகம்-
தேயு ஒத்து இவன் சேறலும், திமிரம் நேர் எனவே.
120
உரை
   


'வீமன் விசயனை அடுத்தால் நம் படை கலங்கும்' என்று துரோணன் தடுத்து நிற்றல்

ஏகுகின்றது கண்டு பெருங் கடல் ஏழும் மொண்டு விழுங்கி
                                அதிர்ந்து எழு
மேகம் அம்பு பொழிந்தென எங்கணும் வீசும் அம்பு
                                விரைந்து விரைந்திட,
'யூகம் இன்று பிளந்து, தனஞ்சயனோடு இவன் புகுதந்திடின்,
                                நம் படை
ஆகுலம் படும்' என்று தடஞ் சிலை ஆரியன் சமரந்தனில்
                               முந்தவே,

121
உரை
   

ஆதி அந்தணன் வந்தது கண்டு இகல் ஆனிலன் சினம் இன்றி,
                                'நலம் பெறு
நீதி அன்று, உனுடன் சமர் உந்திடல்; நீ பெருங் குரு; நின் கழல்
                                என் தலை
மீது கொண்டனன்' என்று வணங்கவும், வேதியன் கைமிகுந்து
                                புகுந்து, எதிர்
மோதி அம்பு தெரிந்தனன்; வன் திறல் மூரி வெஞ் சிலையும்,
                                குனிகொண்டதே.
122
உரை
   


வீமன் துரோணரைத் தேருடன் எடுத்து எறிய, வீழ்ந்து தேர் முதலியன சிதைதல்

வீரன் ஒன்றும் மொழிந்திலன்; வந்து முன் வீழ் சரங்கள்
                                விலங்கி, வயம் புனை
தேரினின்றும் இழிந்து, நடந்து, எதிர் சேர வந்து, செழுஞ்
                                சிலையின் குரு
ஊருகின்ற வயங்கு இரதம்தனை ஓர்இரண்டு கரங்கொடு, வன்புடன் வாரி உந்த எறிந்தனன், வண் புயல் வானில் நின்றவர்
                                அஞ்சி ஒதுங்கவே.

123
உரை
   

நாக விந்தம் வளர்ந்து வளர்ந்து, அகல் நாகம் ஒன்றியது
                                என்று நடுங்கிட,
மேக பந்தி கலங்க எழுந்து, அது மீளவும் புவியின்கண் விழுந்தது;
பாகன் அங்கம் நெரிந்தது; நொந்தது, பார்முகம்; துளை விண்டன,
                                மண்டு உருள்;
வேக வெம் பரியும் தலை சிந்தின; வேதியன்தனது என்பும்
                                ஒடிந்ததே.
124
உரை
   


பல மன்னருடன் கன்னன் வந்து வளைக்க, வீமன் அவனது தேர் முதலியன சிதைத்தல

வீழ, இங்கும் அவன்தனை வென்று, இவன் மேல் நடந்துழி, எண்                    திசையும் படை
சூழ வந்து வளைந்தனர்,-அந்தக தூதர் தங்களினும் பெரு
                   வஞ்சகர்,
ஏழு மண்டலமும் புதையும் பரிசு ஏறுகின்ற தரங்க நெடுங் கடல்
ஊழியும் பெயர்கின்றது எனும்படி ஓதை விஞ்ச உடன்று,
                   சினம் கொடே.

125
உரை
   

காரில் ஐந்து மடங்கு புலம்பின, காகளம்; சுரி சங்கு முழங்கின;
பேரி பம்பின; கொம்பு தழங்கின; பேர் இயங்கள் பெயர்ந்து கறங்கின; தூரியும், பொருது அஞ்சி அவந்தியர் பூபனும், புறம் அன்று
                                இட, வெங் கணை
மாரி சிந்தி மலைந்தனன், வெஞ் சினம் மாற, முன் பவனன்
                                திருமைந்தனே.
126
உரை
   

மாசுணம் தலை நொந்து சுழன்றன; மாதிரங்கள் மருண்டு கலங்கின;
வீசு தெண்திரை அம்பு வெதும்பின; மேலை அண்டமும்
                                விண்டு பகிர்ந்தன;
பூசலின்கண் உடன்று கழன்றவர் போர் தொடங்க நினைந்து
                                புகுந்தனர்,
ஆசுகன் திருமைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே.
127
உரை
   

கோபம் விஞ்சினர், விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள்
                                தெரிந்தனர் கொண்டனர்;
சாபமும் குனிதந்து, எதிர் உந்தினர், தாரை வெம் பரி
                                தங்கு இரதங்களும்;
நீபம் எங்கும் மலர்ந்தென, மண்டு செந்-நீர் பரந்திட, நின்று
                                முனைந்து எழு
பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர்; பூரம் எங்கும் அலைந்து
                                புரண்டவே.
128
உரை
   

மாருதன் புதல்வன் தொடும் அம்பினில் மா இரண்டும்
                                இரண்டும் விழுந்தன;
சோரும் வன் துவசம் தறியுண்டது; சூதனும் தலை சிந்தினன்;
                                முந்திய
தேரும் உந்து உருளும் துகள் கொண்டன; சேம வெங் கவசம்
                                துளை விஞ்சியது;
ஆர வெண்குடை அம்புலியும் பிறை ஆனது; அஞ்சல் இல்
                                நெஞ்சும் அழிந்ததே.
129
உரை
   


ஓடிய கன்னன் விடசேனன் தேரில் மீண்டும் வந்து
பொருது பின்னிட, துரியோதனன் அனுப்ப வந்த அவன்
தம்பியர் இருவரும் பொருது மடிதல

அழிந்து கன்னனும், கால் விசையினில், இவன் அம்பினுக்கு
                                எட்டாமல்,
வழிந்து போதல் கண்டு, அடல் விடசேனன் அவ் வள்ளலுக்கு
                                எதிர் ஓடி,
இழிந்து, தன் பெருந் தட மணித் தேரின்மேல் ஏற்றலும்,
                                இவன் ஏறி,
கழிந்த நீர்க்கு அணை கோலுவான்போல், அவன் கண் எதிர்
                                உறச் சென்றான்.

130
உரை
   

சென்று மீளவும் வீமனோடு எதிர்ந்து, வெஞ் சிலை அமர்
                                புரிந்து, அந்தக்
குன்றுபோல் நெடுந் தேரும் நுண் துகள் பட, குலைந்து வென்
                                கொடுத்து ஓட,
கன்றி நாக வெங் கொடியவன், கண்டு தன் கண் நிகர்
                                இளையோரை,
'ஒன்றி நீர் விரைந்து உதவும்' என்று, இருவரை ஒரு
                                கணத்தினில் ஏவ,
131
உரை
   

கன்னனைக் கடிது உற்று, இருவரும் மதுகயிடவர் எனத் தக்கோர்,
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர், வரி சிலை உற வாங்கி,
அந் நிலத்தினில் அவனுடன் நெடும் பொழுது அமர் புரிந்து,
                                அவன் கையின்
செந் நிறக் கொடும் பகழியால் தம் உடல் சிதைந்து, வானிடைச்
                                சென்றார்.
132
உரை
   


தன் கண்ணெதிரே அரசன் தம்பியர் பட்டது கண்டு,
கன்னன் வஞ்சினம் கூறி வீமனோடு பொருது தேர் இழத்தல்

தனது கண் எதிர் இருவரும் அழிந்தபின், தபனன்
                                மைந்தனும் நொந்து,
கன துரங்கமும் முடுகு தேர் வயப் படைக் காவலன்
                                முகம் நோக்கி,
'உனது தம்பியர் இருவரைச் செற்றவன் முடித் தலை ஒடியேனேல்,
எனது புன் தலை அவன் கையில் கொடுப்பன்' என்று ஏறினான்,
                                ஒரு தேர்மேல்.

133
உரை
   

குனித்த சாபமும், தொடுத்த சாயகங்களும், குலவு மால்
                                வரைத் தோளும்,
துனித்த நெஞ்சமும், முரிந்தன புருவமும், எரிந்த கண்களும்,
                                தோன்ற,
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின்
                                விரைந்து எய்தி,
'இனித் தராதலம் உரககேதனற்கு' என, இளவலோடு இகல் செய்தான்.
134
உரை
   

ஆற்றை ஒத்தன கால் வழி அளை புகும் ஆமை கொள்
                                அடல் மள்ளர்
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன்
காற்றை ஒத்தனன், வலியினால்; சினத்தினால், கதிரவன்
                                திரு மைந்தன்
கூற்றை ஒத்தனன்; பிறப்பிலே துவக்குளோர் குணங்களும்
                                கொள்ளாரோ?
135
உரை
   

தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி,
'ஆறு அல் வெஞ் சமத்து என்னுடன் முனைந்தனை;
                                முனைந்தனை ஆனாலும்,
வேறல் என் கடன்; நின்னை மன் அவையின் முன்
                                விளம்பிய வசனத்தால்,
கோறல் எம்பிதன் கடன்' என வரி சிலை குனித்தனன்,
                                கொடித் தேரோன்.
136
உரை
   

இலக்கம் அற்ற வெங் கணைகளால் இருவரும் எதிர் எதிர்
                                அமர் ஆடி,
கலக்கம் உற்ற பின், தினகரன் மதலை அக் காற்றின்
                                மைந்தனைச் சீறி,
அலக்கண் உற்றிடப் பல பெருங் கணை தொடுத்து, அவன் விடும்
                                கணை யாவும்
விலக்கி, வச்சிரத் தேரும் வெம் புரவியும் விறல் துவசமும்
                                வீழ்த்தான்.
137
உரை
   

காலினால் வரும் காலின் மைந்தனைக் கடுங் கதிரவன்
                                திருமைந்தன்
வேலினால் அடர்த்து எறிதலும், எறிந்த செவ் வேல்
                                இரு துணியாகக்
கோலினால் அவன் துணித்து, மீளவும், அழல் கொளுத்தியது
                                ஒரு தண்டு,
நாலின்-நால் முழம் உடையது, கன்னன்மேல் எறிந்தனன்,
                                நகை செய்தான்.
138
உரை
   

தேரவன் திருமைந்தன் ஏறிய தடந் தேரும் வாசியும் சிந்தி,
ஊர வந்த வெம் பாகனும் தலை பிளந்து, ஓடலுற்றனன், பின்னும்;
வீரனும் 'பெரு வலியுடன் வருக!' என வேறு ஒர் தேர்
                                மேற்கொள்ள,
தூர நின்றவர் இருவரும் உடன்றமை சுயோதனன் கண்ணுற்றான்.
139
உரை
   


அப்பொழுது, துரியோதனன் தன் தம்பியரில் எண்மரை
அடுத்தடுத்து அனுப்ப, அவர்களுள் விகருணன்
ஒழிந்தோர் மாளுதல

கண்டு, துன்முகன் எனும் திறல் இளவலைக் கடிதின்
                                ஏவலும், கங்குல்
வண்டு செஞ் சுடர் வளைய வந்து இறந்தென, வலிய வார்
                                சிலை வாங்கிக்
கொண்டு, திண் திறல் வாளியால், மலைமிசைக் கொண்டல்
                                பெய்வது போல,
மண்டு போர் புரிந்து, அண்ணல் கைப் பகழியால், வான்
                                இமைப்பினில் உற்றான்.

140
உரை
   
தாளின் ஓடிய கன்னன், மன்னவன் விடு தம்பி
                                வீழ்தலும், வீமன்
தோளின் ஓடி மண்மிசை புதைதர, ஒரு தோமரம்தனை ஏவ,
வேளினோடு இசை வீமன்மேல் அது செலும் வேலையின்,
                                விட வெவ் வாய்க்
கோளின் ஓடிய குரிசில் கைக் கணையினால் கோள்
                                அழிந்தது மன்னோ.
141
உரை
   

மன்னர் மன்னவன் தம்பியர் இருவரை மாருதிமிசை ஏவ,
முன்னர் வந்தவர் இருவரும் படப்பட, முனைந்த போர்
                                மதியாமல்,
மின் இருங் கணை விகருணன் முதலியோர் வீமன்மேல் ஓர் ஐவர
பின்னரும் செல, நால்வரைப் பிறை முகக் கணையினால்
                                பிளந்திட்டான்.
142
உரை
   


விகருணன் வர, 'நின்னொடு பொருதல் முறை அன்று'
என்று வீமன் உரைக்கவும், 'எம்முனோர் இறக்க யான்
உய்யேன்' என்று போர் தொடங்குதல்

பகரும் நால்வரும் பட்டபின், பைங் கழல்
விகருணன் பொர வெஞ் சிலை வாங்கலும்,
'புகலும் வஞ்சினம் பொய்க்கினும், நின்னுடன்
இகல் செய்யேன்; எம்பி ஏகுக!' என்றான்அரோ.

143
உரை
   

'சுடு உரைக் கனல் அன்ன துச்சாதனன்
வடு உரைக்கவும், மன் உறை மன்றிடை,
நடு உரைக்கும் நல் நா உடையாய்! உனைக்
கொடு உரைக் கணை ஏவினும், கொல்லுமோ?
144
உரை
   

'பார் அறிந்த பழிக்கு உட்படாத நின்
நேர் அறிந்தும், பொர நெஞ்சு இயையுமோ?
போர் அறிந்து பொருக!' என்றான்-நெடுஞ்
சீர் அறிந்தவர் செய்ந்நன்றி கொல்வரோ?
145
உரை
   

வீமன் இப்படிச் சொல்லவும், வேரி அம்
தாமம் உற்ற தட வரைத் தோளினான்,
மா மணிச் சிலை வாங்கி, அவ் வீமன்மேல்
தீ முகக் கணையும் சில சிந்தியே,
146
உரை
   

'எம் முனோர்கள் எனைவரும் உம் கையில்
வெம் முனைக் கணையால் விளிந்து ஏகவும்,
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன் கொலோ?
வம்மின்! வார் சிலை வாங்குக!' என்று ஓதினான்.
147
உரை
   


இருவரும் ஒத்துப் பொருதும், இறுதியில் விகருணன் உயிர் இழத்தல்

மிக நகைத்தும், வெறுத்தும், திரிபுர
தகனன் ஒத்த சமீரணன் மா மகன்
முகன் உறச் சென்று, மூரி வில் வாங்கி, மேல்
இகல் நிறக் கணை ஏவினன் என்பவே.

148
உரை
   

ஏவினால் இவ் இருவரும் வெஞ் சமம்
மேவினார்; மெய்ப் படாமல் விலக்கினார்;
கூவினார், அறைகூவிப் பொருது இளைத்து
ஓவினார், தமையே நிகர் ஒத்துளார்.
149
உரை
   

விகனன் விட்ட கணைகளின் வீமன் மெய்
இகல் மணிக் கவசம் பிளந்து, ஏறு தேர்
அகல் அரிக் கொடி அற்று, கொடிஞ்சியும்
சகலம் உற்று, தனுவும் முரிந்ததே.
150
உரை
   
மின்னை ஒத்த விறற் படை மாருதி
பின்னை விட்ட பிறைமுக வார் கணை
அன்னை சித்தம் அலமர, பின்னவன்-
தன்னை வெற்றி மகுடம் தடிந்ததே.
151
உரை
   


பின், கன்னன் முதலியோரையும் வீமன் வென்று,
சாத்தகியோடு சேர்ந்து விசயனைக் கூடுதல்

கோ விகன்னன் கொலைபட, பற்பலர்
ஆவி கன்னம் அறை கணையால் அற,
பாவி கன்னன் பதைக்க வென்று ஏகினான்,
மேவு இகல் நகம்போல், புய வீமனே.

152
உரை
   

அன்று சாதத்து அலகைகள் ஆடவே,
சென்று, சாத்தகிதன்னுடன் சேர்ந்தனன்,-
துன்று சாத்திரத்தின்படி, சூழ் முனை
வென்று, சாத்திய வாகை கொள் வில்லினான்.
153
உரை
   

அங்கிதன்னொடு அனிலமும் சேர்ந்தென,
சங்கபாணிதன் தம்பியும் வீமனும்,
செங் கலங்கல் அம் சேற்றிடை மூழ்கிய
வெங் களத்து விசயனைக் கூடினார்.
154
உரை
   


சாத்தகியும் பூரிசவாவும் விளைத்த மற்போரில்,
சாத்தகி இளைக்க, கண்ணன் பூரிசவாவைக்
கொல்லுமாறு விசயனை ஏவுதல்

தேவரும் பரவு பாகன் செலுத்து தேர் விடலையோடு
மூவரும் சுடர்கள் மூன்றும் மூண்டெனத் திரண்ட காலை,
மேவ அருஞ் சமரில் முன்னம் வென்கொடுத்து உடைந்த வேந்தர்
யாவரும் திருகி வந்து, ஆங்கு எதிர் எதிர் அடர்ந்து சூழ்ந்தார்.

155
உரை
   

சாத்தகிதானும் பூரிசவாவும் வெஞ் சாபம் வாங்கி,
கோத்தனர், பகழி; சென்று குறுகின, தேரும் தேரும்;
சேர்த்தனர் மலைந்த காலை, சிலை துணிவுண்டு, தேர் விட்டு,
ஏத் தரும் தடக் கை கொட்டி, இருவரும் மல்லின் நேர்ந்தார்.
156
உரை
   

மல்லினின் வென்று வீழ்த்தி, மாயவன் தம்பிதன்னைக்
கொல்லுவான் முனைந்து, மற்றைக் கோமகன் அடர்த்தல்
                                நோக்கி,
கல்லினின் மாரி காத்தோன் கண்டு, வில் விசயனோடும்
சொல்லினன், 'பகைவன்தன்னைச் சுடர் முடி துணித்தி' என்றே.
157
உரை
   


விசயன் ரிசவாவின் புயத்தைத் துணிக்க, சாத்தகி அவனை வாளால் மாய்த்தல்

'இருவரும் முனைந்த போரில் இளைத்தவர்க்கு உதவியாகப்
பொருவது கடன் அன்று' என்று போற்றிய விசயன்தன்னை,
வெருவர முனைந்து சீறி, மீளவும் விளம்ப, மாயன்
திருவுளம் அறிந்து, தெவ்வன் திண் புயம் துணிய எய்தான்.

158
உரை
   

புயம் துணிவுண்ட பூரிசவாவினைப் புரிந்து தள்ளி,
சயம் புனை வாளின் தும்பைத் தார் புனை தலையும் கொய்து,
வயம் புனைந்து இளவல் நிற்ப, 'மன் அறம் அன்று, இப்
                                போர்' என்று
இயம்பிய இராசராசற்கு எதிர்மொழி இயம்பலுற்றான்:
159
உரை
   


'அறம் அன்று, இப் போர்' என்ற துரியோதனனுக்குக் கண்ணன் உரைத்த மறுமொழி

'நென்னல் நீர் அபிமன்தன்னை நேர் அற வென்ற போரும்,
முன்னமே சிவேதன்தன்னை வீடுமன் முடித்த போரும்,
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர்!' என்று நக்கான்-
தன்னை வந்து அடைந்தோர்க்கு உற்ற தளர்வு எலாம்
                                ஒழிக்கும் தாளான்.

160
உரை
   


விசயன் தன் வஞ்சினம் முடித்தற்குப் பகைவர்
படையைச் சார, பகைவர் சயத்திரதனை நிலவறையுள்
வைத்துக் காத்தல்

பின்னரும் விசயன் நிற்ப, பேணலார் பின்னிட்டு ஓட,
மன்னரில் மலைந்தோர்தம்மை வாளியால் வானில் ஏற்றி,
முன்னவனோடும், அந்த முகில்வண்ணன் இளவலோடும்,
தன் உரை வழுவாவண்ணம் தரியலர் படையைச் சார்ந்தான்.

161
உரை
   

'அருக்கன் ஓர் கணத்தில் அத்தம் அடையும் அவ்
                                அளவும் காக்கின்,
செருக் கிளர் விசயன் இன்றே தீயிடை வீழ்தல் திண்ணம்;
நெருக்குபு நின்மின்' என்று, நிலவறையதனில் அந்த
மருக் கமழ் தொடையலானை வைத்தனர், மருவலாரே.
162
உரை
   


சயத்திரதனைக் காணாது, கண்ணன் ஆழியால்
சூரியனை மறைத்தல்

நச்சு அளை அரவம் என்ன நடுங்கினன் நின்ற காலை,
துச்சளை கணவன்தன்னைத் தோற்றம் ஒன்றானும் காணான்-
பச்சளை முடை கொள் மேனிப் பாடி மா மகளிர் பைம் பொன்-
கச்சு அளை புளக பாரக் கன தனம் கலந்த தோளான்.

163
உரை
   

பார் ஆழி அவலம் அற, பாண்டவர்தம் இடர் தீர,
                                பார்த்தன் வாழ,
பேர் ஆழி அறிதுயிலும் பெருமிதமும் உடன் மறந்து,
                                பிறந்த மாயோன்,
ஓர் ஆழி எழு பரித் தேர் உடையானை மாயையினால் ஒழிக்க,
                                தன் கைக்
கூர் ஆழி பணித்தலும், அக் களம் போலச் சிவந்தன, அக்
                                குடபால் எங்கும்.
164
உரை
   


சூரியன் மறைந்தது என்று கருதி, விசயன் எதிரே
சயத்திரதனையும் கொண்டு மன்னர் பலரும் வருதல்

அயத்து, இரதம் இடப் பசும் பொன் ஆவதுபோல், அருச்சுனன்
                                ஆர் அறிஞன் ஆக
நயத்து இரத மொழிக் கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார்,
                                'நாள் செய்வான் தன்
வயத்து இரதம் மறைந்தது' என, வலம்புரித் தாரவன் சேனை
                                மன்னர் யாரும்,
செயத்திரதன்தனைக் கொண்டு, செருமுனையில் விசயன் எதிர்
                                சென்று சேர்ந்தார்.

165
உரை
   


'சயத்திரதன் தலையைக் கொய்து, சமந்தபஞ்சக மடுவில்
தருப்பிக்கும் அவன் தந்தை கையில் விழுமாறு செய்'
என, கண்ணன் மொழிதல்

'எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக'
                                என்று நாடி,
தண் சமந்தபஞ்சகம் என்று ஒரு மடுவில் இவன் தாதை
                                தருப்பிக்கின்றான்;
ஒண் சரம் கொண்டு இவன் தலை மற்று அவன் கரத்தில் போய்
                                விழ, நீ உடற்றுக' என்று
திண் சயம் கொள் விசயனுக்குச் சிந்துபதிதனைக் காட்டி,
                                திருமால் சொன்னான்.

166
உரை
   


விசயன் கணை தொடுத்துச் சயத்திரதனை மாய்த்தல்

வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி, அருச்சுனன், சிந்து
                                மகீபன் மௌலிச்
சிரத்தினில் எய்தலும், துணிந்தது ஒரு சரத்தால்; துணிதலும், அச்
                                சிரம் வீழாமல்
சரத்தினை மேன்மேல் ஏவி, தடத்து இருந்து தருப்பித்த
                                தாதைதன் பொற்
கரத்திடையே வீழ்வித்தான்; அவன் அதனை நிலத்து இட்டு,
                                அக் கணத்தில் மாய்ந்தான்.

167
உரை
   

முன் பட்டான் அருக்கன் என வெளிப்பட்டான்; வெளிப்பட்டு,
                                முடிவில், சிந்து
மன் பட்டான்; மா மாயன் மாயம் இது என்று அறியாமல்,
                                'மகன் போய்ப் பட்ட
பின் பட்டான், அவன் தந்தை; இனிப் பட்டார் எவரும்!'
                                எனப் பிழைப்பட்டான்போல்
என் பட்டான், அரவு உயர்த்தோன்! 'எரிப்பட்டான் விசயன்'
                                என எண்ணி நின்றான்.
168
உரை
   


விசயன் மொழி பிழைத்தான்' என்று துரியோதனன் முதலியோர்
துள்ளி ஆர்க்கும் போது, கண்ணன் ஆழியை அகற்ற,
சூரியன் பனைஅளவு தூரத்தில் நிற்றல்

கன்ன சவுபலர் முதலாம் காவலரும் சுயோதனனும்,
                                'கரந்தான் வெய்யோன்;
சொன்ன மொழி பிழைத்தான், வெஞ் சுவேத துரங்கமன்' என்று
                                துள்ளி ஆர்த்தார்;
அன்ன பொழுது, எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி
                                அகற்ற, நோக்கி,
'இன்னம் ஒரு பனைத்தனைப் போழ்து உண்டு' என நின்றனன்,
                                எழு பேர் இவுளித் தேரோன்.

169
உரை
   


சேனையிலுள்ளார் கூற்று

'விரி ஓத நெடுங் கடலில் வீழ்வதன்முன், விரைந்து உரகன்
                                விழுங்கினானோ?
'எரி ஓடி மகன் இறக்கும்' என மகவான் மறைக்க, முகில்
                                ஏவினானோ? கரியோன் கைத்
திகிரியினால் மறைத்தனனோ? இருள் பரந்த கணக்கு
                                ஈது என்னோ?
பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால், எப் பொருளும்
                                பேதியாதோ?

170
உரை
   

'உந்து இரதத் தனி வலவன் உபாயத்தால், வருணன் மகன்
                                உயிரை மாய்த்தான்;
மந்திரம் ஒன்று அறிவித்து, வயப் புயம் ஆயிரத்தோனை
                                மடிவித்திட்டான்;
தந்திரம் மெய்ம் மயங்கி விழத் தன் சங்கம் முழக்கினான்;
                                தபனன் மாய,
இந்திரசாலமும் செய்தான்; இந்திரன் சேய் வெல்லாமல்,
                                யார் வெல்வாரே?'
171
உரை
   

துரியோதனன் கண்ணனைப் பழித்து, மன்னர் பலருடன் கூடிப் பொருதல்

'முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும், கட்டுண்டும்,
                         முன் நாள் நாகக்
குடை எடுத்து மழை தடுத்தும், வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம்
                         கொடிய பாவி,
'படை எடுத்து வினை செய்யேன்' எனப் புகன்ற மொழி தப்பி,
                         பகைத்த போரின்
இடை எடுத்த நேமியினால், வெயில் மறைத்தான்; இன்னம்
                         இவன் என் செய்யானே?

172
உரை
   

'ஒற்றை நெடுந் திகிரி இனன் மறைவதன் முன், ஐவரையும்
                         உடன்று மோதி,
செற்றிடுதல், யான் படுதல், திண்ணம்' எனச் சேனையொடும்
                         சென்று சூழ்ந்தான்;
கொற்றவனது உரை கேட்டு, கொடி நெடுந் தேர் நரபாலர்
                         சபதம் கூறி,
மற்று அவனோடு, 'ஒரு கணத்தில் வம்மின்' எனத்
                         தனித்தனிபோய் மலைதலுற்றார்.
173
உரை
   

துருபதனும், சாத்தகியும், திரௌபதி மைந்தரும், முடுகி,
                         தொட்ட சாபக்
குருவுடனே போர் செய்தார்; தம்பியரும், சுயோதனனும்,
                         கொற்ற வேந்தர்
ஒருபதினாயிரவரும், போய், வீமனுடன் உடற்றி, அவன்
                         ஊர்ந்த தேரும்
வரி சிலையும் அழித்தனர்; பின் அவனும் வெறுங் கரதலத்தால்
                         வன் போர் செய்தான்.
174
உரை
   


தேர் முதலியன இழந்து, வீமன் வெறுங்கையோடு பொருது,
பிருகன், சூசி என்ற அரசன் தம்பியரை மாய்த்தல்

பரி எடுத்துப் பரி எற்றி, பரித் தேரால் தேர் எற்றி,
                         பனைக்கை வேகக்
கரி எடுத்துக் கரி எற்றி, காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி,
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடந் தோள் இருடிகேசன் என்ன,
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி,
                         அரிநாதம் செய்தான்.

175
உரை
   

நிருபர் தொழும் கனை கழற் கால் நில வேந்தன் தம்
                          பியரில்நெடும் போதாக
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு
                          தோள் வலி காட்ட, இருவரோடும்
ஒருவர் ஒருவரை அறியாவண்ணம், இவன் ஒருவனுமே
                          உடன்று சீறி,
பொருது பிருகனையும் விறல் சூசிதனையும் வானில்
                          போக்கினானே.
176
உரை
   


கடோற்கசனும், அவன் மகன் அஞ்சனபன்மனும்
அசுவத்தாமனுடன் பொருத போரில், அஞ்சனபன்
மன் உயிர் இழத்தல

இகல் இடிம்பன் மருமகனும் திருமகனும் குரு மகனோடு
                         எதிர்ந்து, பல் கால்
அகலிடம் செஞ் சேறு ஆக, அமரருடன் அசுரரைப்போல்
                         அமர்செய் காலை,-
பகலுடன் கார் இருள் பகைத்தால் பலிக்குமோ?-
                         அஞ்சனபன்மனை அப் போதில்
புகல் இடம் பொன்னுலகு ஆக்கி, போக்கினான் ஒரு
                         கணையால், புரவித்தாமா.

177
உரை
   


கடோற்கசனை அசுவத்தாமன் தண்டால் வீழ்த்த,
மோகித்த அரக்கனைக் கொல்லுமாறு கன்னனைத்
துரியோதனன் தூண்டுதல்

மகன்பட்ட சினம் கதுவ, வரை உறழ் தோள்
                         கடோற்கசன், மா மலைகள் வீசி,
அகன் பட்ட நுதல் வேழம் அன்னான்மேல், எறிந்து
                         எறிந்திட்டு ஆர்த்த காலை,
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா
                         மைந்தன், வீமன் கையில்
பகன் பட்ட பாடு எல்லாம் படுத்தி, ஒரு கதாயுதத்தால்
                         படியில் வீழ்த்தான்.

178
உரை
   

மோகித்து விழும் அரக்கன், மீண்டு எழுந்து, மோகரிக்க,
                         முடி மகீபன்
வேகித்துக் கன்னனைப் பார்த்து, 'இவன் உயிரை வீட்டுக!' என,
                         'வேகத் தண்டால்
சோகித்துத் தளர்ந்தான்மேல் தொடேன்; விசயன்உயிர் உண என்
                         தொடையோ சாலத்
தாகித்தது; இப்பொழுதே கொன்று, உனக்குக் கடல் ஞாலம்
                         தருவேன்' என்றான்.
179
உரை
   


'தளர்ந்தவன்மேல் அம்பு தொடேன்; விசயனைக்
கொல்வேன்' என்று வீரம் பேசிச் சென்று, விசயனிடம்
பல முறை வென்னிடுதல்

நிருபனுடன் இரவி மகன் புகன்ற உரை கேட்டு, அருகே நின்ற
                         விற் கைக்
கிருபன் மிக நகைத்து, 'எதிரே கிட்டினால் முதுகிடுவை;
                         கிரீடிதன்னைப்
பொரு பகழிக்கு இரையாகப் போக்குகின்றேன் என மொழிவை;
                         போர் வல்லோர்கள்
உரு அழியத் தம் வலிமை உரைப்பரோ?' என உரைத்தான்,
                         உரையால் மிக்கோன்.

180
உரை
   

அம் மொழி தன் செவி சுடப் போய், அக் கணத்தே,
                     விசயனுடன் அங்கராசன்
வெம் முனை செய் போர் அழிந்து, தேர் அழிந்து,
                     வென்னிட்டான், மீண்டும் மீண்டும்;
அம் முறையில் பற்குனனால் ஆவி ஒழிந்தவர் அரசர்
                     அநேக கோடி;
எம் மொழி கொண்டு உரைப்பரிதால்; உரைக்க, எமக்கு ஆயிரம்
                     நா இல்லை மாதோ!
181
உரை
   


அசுவத்தாமன் குந்திபோசன் மைந்தர் இருவரை மாய்க்க, சூரியனும் மறைதல்

அந்த முனைதனில் மீண்டும், அந்தணன்தன் திருமதலை,
                         குந்திபோசன்
மைந்தர் இருவரை இரண்டு வடிக் கணையால் மடிவித்தான்;
                         மாயோன் வன் கைச்
செந் திகிரிதனில் அடங்கி முடங்கிய தன்கிரணத்தின் சிறுமை நாணி,
உந்து திரைச் சிந்துவினில், ஓர் ஆழித் தேரோனும்
                         ஒளித்திட்டானே.

182
உரை
   


துரியோதனன் இரவினும் பொரத் துணிந்து விளக்கு எடுக்கச் செய்தல்

'இசையினும் பெருக நன்று!' எனத் தனது இயற்கையால்
                         மிக வளர்த்திடும்
வசையினும் கரிய இருள் பரந்துழி, 'வயங்கு தீப நெடு வாளினால்
நிசையினும் பொருதும்' என்று தெவ்வர் முனை நேர்
                         நடந்தனன்-நெருங்கு குன்று
அசையினும், புடவி அசையினும், சமரில் அசைவு இலாத
                         தனி ஆண்மையான்.

183
உரை
   

'பகல் இரா வர அழைத்தனன், பகைவர் பாகன் என்று,
                         படு பகலை அவ்
அகல் இராவினில் அழைத்தனன்கொல்' என, 'அண்டகூடம்
                         உற இருள் அறுத்து,
இகல் இராக ஒளி உமிழ் விளக்குஇனம் எடுக்க!' என்று
                         கடிது ஏவினான்-
தகல் இராதது ஒர் மனத்தினான், வலிய தனதன் நேர்தரு
                         தனத்தினான்.
184
உரை
   


இருதிறத்துப் பெரு வீரரும் தம்மில் பொருதல்

'பொங்கி ஆடு அரவு எழுந்து அநேகவிதம் ஆனது' என்று,
                         அமரர் புகலுமாறு,
அங்கு வாள் அரவு உயர்த்த கோன் நினைவு அறிந்து,
                         அளப்ப அரிய ஆகவம்
எங்கும் ஆனை பரி தேர்கள்தோறும் ஒளிர் தீப
                         காகளம் எடுக்கவே,
சங்கு தாரை எழ நின்றனன், தருமன் மதலை
                         தம்பியர்கள்தம்மொடும்.

185
உரை
   

கருதி வாகை புனை விசயன்மேல் விசய கன்னன் முந்தி
                         அமர் கடுகினான்;
கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன்
                         எதிர் கிட்டினான்;
சுருதி மா முனி துரோணனும், பழைய திட்டத்துய்மனொடு
                         துன்னினான்;
'பொருது மாய்வன்' என, வீமனோடு உயர் புயங்க கேது மிகு
                         போர் செய்தான்.
186
உரை
   

சல்லியன் பெருகு சல்லியத்தொடு சதானிகன்தனொடு
                         போர் செய்தான்;
வல்லியம் புனை கடோற்கசன்தனொடு போர் செய்தான்,
                         முனிவன் மைந்தனும்;
எல் இயங்கு சுடரினும் மணிச் சுடர்கள் எழு மடங்கு
                         ஒளி எறிக்கவும்,
பல்லியம் பல முழங்கவும், தரணிபாலர் இப்படி பகைக்கவே,
187
உரை
   

'எல் தரும் தபனன் ஏகினான்; இனி எனக்கு வாசி கொடி
                         நீடு தேர்
முன் தரும் கனலின் ஒளி எழுந்தது' என, முரண் அழிந்திட
                         மொழிந்து, போர்
வில் தரும் கணைகளால் விழப் பொருது, வெயிலவன்
                         சுதனை, மீளவும்
பின் தரும்படி, பிளந்தனன்-தனுசர் பின்னிடப் பொருத
                         பெற்றியான்.
188
உரை
   

ஒரு தன் வாகு வலியாலும் வார் சிலை உதைத்த வாளி
                         வலியாலும் ஒண்
குருதி பொங்க அடு தருமராசன் ரகுகுல இராமன்
                         நிகர் ஆயினான்;
கிருதவன்மன் என வரும் நராதிபதி கெட்டு, மா இரதம்
                         விட்டு, வாள்
நிருதர்சேகரனொடு உவமை ஆயினன், நெடுங் களத்தில்
                         எதிர் நின்றிலன்.
189
உரை
   

வாளம் ஆக வில் வணக்கி, உம்பர் பதி மைந்தன், வாள்
                         இரவி மைந்தனைக்
கோளம் ஆன குடை இரதம் வாசி சிலை கொடி முருக்கி,
                         அமர் கொள்ளவே,
மீளமீளவும் அழிந்து அழிந்து, அவன் ஒர் வேலினால் எறிய,
                         வேலையும்
தூளம் ஆக வடி வாளியால் எதிர் துணித்து, வன்பொடு துரக்கவே,
190
உரை
   

முன் சதாகதி முருக்க, மேரு கிரி முடி முரிந்தென
                         முரண்கொள் போர்
வன் சதானிகன் வளைத்த வில் கணையின் மத்திரத்
                         தலைவன் மனம் முரிந்து,
என் செய்தான்? முடிவில் ஓடினான்; விறல் இடிம்பி
                         மைந்தன் முனி மைந்தன்மேல்
மின் செய் தாரை அயில் ஏவினான், அவன் விரைந்து
                         தேரின்மிசை வீழவே.
191
உரை
   

தானை காவலனும் முந்துறப் பொருது, தரணி மன்னன்
                         விடு சமர்முகச்
சேனை காவலனை ஓட ஓட, ஒரு தெய்வ வாளி கொடு சீறினான்;
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த
                         மன்னவர்கள் அனைவரும்,
ஏனை மன்னவர்தமக்கு உடைந்து, முதுகிட்டு மன்னன்
                         அருகு எய்தினார்.
192
உரை
   


கன்னன் முதலியோர் பின்னடைந்து மன்னனை
அடுத்த அளவில், அலாயுதன் என்னும் அரக்கன்
மன்னனிடம் சபதம் கூறி, வீமனொடு வந்து பொருதல்

அன்ன போதினில், அநேக நூறு பதினாயிரம் திறல் அரக்கரோடு,
இன்னவாறு என உரைக்கவே நிகர் இலாத திண் திறல் அலாயுதன்,
கன்ன சௌபலர்தமக்கு நண்பன், இருள் கங்குல் ஓர்
                         வடிவு கொண்டனான்,
மன்னர் யாவரும் வெருக்கொள, சமரில் மன்னர் மன்னன்
                         அடி மன்னினான்.

193
உரை
   

'இன்று இரா விடியும் முன்னர் வெஞ் சமம் எதிர்ந்த
                         பஞ்சவர்கள் எஞ்சிட,
கொன்று பார் முழுதும் நின்னதாக, உயர் வான் உளோர் பதி
                         கொடுப்பன் யான்'
என்று கோடி சபதம் புகன்று எதிர், எடுத்த தீபமும் இருண்டிட,
சென்று வீமனொடு கிட்டினான், விசை கொள் தேர் இரண்டும்
                         உடன் முட்டவே.
194
உரை
   

பணைத்து இரு புயக் கிரி வளர, மாற்றலர் பயப்பட, வயப்படு
                         பயம் இல் நூற்றுவர்
துணைப் பெற, மனச் சினம் முடுக, நாக் கொடு சுழற்று கண்
                         நெருப்பு எழ, நிருதர் பார்த்திவன்
இணைப் பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர,
                         பகை முனையில் ஏற்கும் முன்-
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர்,
                         எதிர்த்தனர், அமரை நோக்கியே.
195
உரை
   

இருட் கிரி எனத் தகு கரிய தோற்றமும், எயிற்றினில் நிணப் பிண
                         முடை கொள் நாற்றமும்,
முருக்கு அலர் வெளுத்திடும் அருண நாட்டமும், முகிற் குரல்
                         இளைத்திட முதிரும் வார்த்தையும்,
மருள் படு கருத்திடை கதுவு சீற்றமும், மதக் கட களிற்று அதி
                         மதமுமாய், புடை
நெருக்கினர் தருக்கினர்,-விறல் நிசாச்சரர்-நிமிர்த்தனர் வடிக்
                         கணை, சிலைகள் கோட்டியே.
196
உரை
   

அருக்கனை மறைத்தவர் கடவு தேர்த்தலை அருச்சுனன் முதல்
                         பல துணைவர், சாத்தகி,
செருக்குடைய மைத்துனர் குமரர், காத்திடு செருக்களம் வெருக்
                         கொள, வளையும் மாத்திரை,
மருச்சுதன் வளைத்தது ஒர் தனுவினால் சில வடிக் கணை
                         தொடுத்தலும், இரவு உலாய்த் திரி
துருத்தனும் வளைத்தனன், நெடிய காற் சிலை; தொடுத்தனன்,
                         இலக்கு அறு தொடைகள் வாய்க்கவே.
197
உரை
   

மருச்சுதன் வடிக் கணை, அமரர் மாற்றலன் வடிக் கணை
                         தடுத்தும், வல் இரதம் மாற்றியும்,
விருப்புடன் விரித்து அணி துவசம் வீழ்த்தியும், விறற் பரிகளைத்
                         துணிதுணிகள் ஆக்கியும்,
உரத்தொடு செலுத்திய வலவன் மாத் தலை உருட்டியும், மணிச்
                         சிலை ஒடிய நூக்கியும்,
இருட்டு ஒளி உடல் பல துளைகள் ஆக்கியும், இமைப்
                         பொழுதினில் திறல் மடிய மாய்க்கவே,
198
உரை
   


நிலத்திடை குதித்தனன், வடவைபோல் பெரு நெருப்பு எழ
                         விழித்தனன், நெடிய மூச்சுடன்,
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன், வரைத் திரள் எடுத்து,
                         எதிர் முடுகி ஓச்சலும்,-
உலப் புயம் நிமிர்த்து ஒரு கதையினால் தனது உரத்துடன் அடித்து,                          அவை பொடிகள் ஆக்கினன்-
இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு கோத்திர எழில் குவடு
                         ஒடித்தவன் உதவு கூற்றமே.

199
உரை
   


வீமனை விலக்கி, கடோற்கசன் வந்து அலாயுதனோடு பொருதல்

'பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி, பரிச் சுடருடைப் பெயர்
                         முனிகுலோத்தமன்,
மரித்தனன்' எனத் தனி அயில் கொடு ஓச்சிய, மணிச் சிறு
                         பொருப்பினை நிகர், கடோற்கசன்,
'எரித் தலை அரக்கனொடு எதிரியாய்ச் சமர் எனைத் தரு
                         மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில்; உரத்துடன் மலைத்து, இவன் உயிரை மாட்டுவன் உருத்து'
                         என உடற்றினன், உறுதி தோற்றவே.

200
உரை
   

'இடிக் குரல்!' என, தலை உரகர் சாய்த்தனர்; எதிர்க் குரல்
                         எழுப்பின, குல சிலோச்சயம்;
வெடித்தது, முகட்டு உயர் கடக மேல்தலை; 'விபத்து' என இபத்
                         திரள் வெருவு தாக்கின;
துடித்தனர், இயக்கரொடு அமரர் தைத்தியர்; துணுக்கென
                         இமைத்தனர், திசைகள் காப்பவர்;
அடிக்கடி படித் துகள் பரவை தூர்த்தன;- அரக்கனும் அரக்கனும்
                         அமரில் ஆர்க்கவே.
201
உரை
   

சிரித்தனர்; உருத்தனர்; அணுவின் மோட்டு உடல் சிறுத்தனர்,
                         பெருத்தனர்; மதனின் நோக்கினர்;
எரித்தனர்; இரித்தனர்; ககனமேற்பட எடுத்தனர்; படுத்தனர்,
                         புடவி கீழ்ப்பட;
முரித்தன கிரிக் கொடுமுடிகளால், சினை முரித்தன மரத்தன
                         துணிகளால், கடிது
உரித்தனர், துவக்கு; உரம் நெரிய, மேல் பழு ஒடித்தனர்,
                         இளைத்தனர், உருவம் வேர்க்கவே.
202
உரை
   


கடோற்கசன் அலாயுதனை வீழ்த்துதல்

சிலைப் படை, அயிற் படை, தெளியும் வாட் படை, திறற் பல
                         படைக்கல வலிமை காட்டியும்,
வலப்பட வளைத்து மல் வலிமை காட்டியும், வயத்தொடு செயப்
                         புய வலிமை காட்டியும்,
உலைப் படு கனற் சினம் முதிர் கடோற்கசன் உடற்றிய
                         அரக்கரை ஒருவர்போல் பொருது,
அலப்படை அரக்கனது உயிரை மாய்த்தனன், அடல் தொடைகளின்
                         தொடை அடைசி வீழ்த்தியே.

203
உரை
   

'புரத்தினை எரித்தவர் கயிலை மாக் கிரி புயத்தினில் எடுத்து
                         இசை புனை பராக்ரமன்
வரத்தினில் வனத்திடை திரியும் நாள், சில மனித்தரொடு
                         எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன்;
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும்,
                         எனைப் பலருடனும் ஏற்று, எதிர்
துரத்தலின், மறத்தினன் இவன்' எனா, பலர் துதித்து,
                         அதிசயித்தனர், சுரரும் வாழ்த்தியே.
204
உரை
   


கடோற்கசன் தான் வல்ல மாயையினால், துரியோதனன் படையைக் கலக்குதல்

அன்று கங்குலில் பல பதினாயிரம் அரக்கரோடு
                         அலாயுதன்தன்னைக்
கொன்று, வெம் பணிக் கொடியவன் சேனையைக் குரங்கு கொள்
                         கோதைபோல் கலக்கி,
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடியாம் உருவு கொண்டு, இவுளி,
                         தேர், களிறு, ஆள்,
சென்று, இமைப் பொழுது அளவையில் யாவரும் தென்புலம்
                         படருமா செற்றான்.

205
உரை
   

சண்டமாருதமாய் எழுந்திடும், ஒருகால், சலதியாய்
                         எழுந்திடும், ஒருகால்;
கொண்டலாய் உதகம் பொழிந்திடும், ஒருகால்; குன்றமாய்
                         உயர்ந்திடும், ஒருகால்;
மண்டு பாவகனாய் எரிந்திடும், ஒருகால்; வல் இருளாய்
                         வரும், ஒருகால்;
பண்டு தான் வல்ல மாயைகள் பலவும் பயிற்றினன்;-மாருதி
                         பயந்தோன்.
206
உரை
   

இம்பர் வாள் அரக்கன் நிணத்தொடு பிணம் தின்று இடம்கொள்                          வாய்கொடு மடுத்திலனேல்,
தும்பிமா, பரிமா, வீரர், என்று இவர் மெய் துணித்தலின், சொரிந்த                          செஞ் சோரி
அம்புராசிகளில், அண்டகோளகையில், அடங்குமோ? அண்டமும்
                         பிளந்திட்டு,
உம்பர் வாரியையும் கலக்குமே, மிகவும்!-உண்மை நாம்
                         உரைசெயும் பொழுதே!
207
உரை
   


துரியோதனன் கன்னனை வற்புறுத்த, அவன் இந்திரன்
கொடுத்த வேலால் கடோற்கசனது உயிரைப் போக்குதல்

கட் செவி எழுதும் கொடி உடைக் கொடியோன் கன்னனைக்
                         கடைக்கணித்தருளி,
'விண் சுரபதி வந்து அன்று உனக்கு அளித்த வேலினால்,
                         வீமன் மா மகனை
உள் செறி சினமும் வலிமையும் உயிரும் உடன் அழிந்து,
                         உம்பர் ஊர் புகுத,
புள் செறி தொடையாய்! கொல்க!' என, விரைவின் புகைந்து,
                         நாப் பொறி எழப் புகன்றான்.

208
உரை
   

புகன்றபோது, அருக்கன் புதல்வனும், 'மாயப் போர் இது; கங்குல்
                         இப் பொழுதே அகன்றிடும்;
அகன்றால் இவன் உயிர் பிறிது ஓர் அம்பினால்
                         அகற்றுவித்திடலாம்;
இகன்ற போர் முனையில், நாளை இவ் வடி வேல் எறிந்து,
                         நான் இமையவர்க்குஇறைவன்
மகன்தன் ஆர் உயிர் கொன்று, உனது வெண் குடைக் கீழ்
                         வைப்பன், இவ் வையகம்!' என்றான்.
209
உரை
   

என்றலும், அரசன், 'யாமும் எம் படையும் இரவிடைப் பிழைக்க,
                         நீ இவனைக்
கொன்று போர் பொருது, சிலை விசயனையும் கொல்லுதி!' என
                         மனம் கொதித்துக்
கன்றலும், அவ் வேல், அக் கணத்து, அவன்மேல் கால வெஞ்
                         சூலம் ஒத்து எறிந்தான்-
தென்றலும் நிலவும் நிகர் என, தன்னைச் சேர்ந்தவர் இளைப்பு
                         எலாம் தீர்ப்பான்.
210
உரை
   

எறிந்த வேல் பகைவன் மார்பகம் துளைத்திட்டு இந்திரனிடத்து
                         மீண்டு எய்த,
மறிந்த மால் வரைபோல், அரக்கனும் முகம் பார் மருங்கு உற
                         விழுந்து, உயிர் மடிந்தான்;
செறிந்து அருகு அணைந்த சேனையும், பயந்தோர் சிந்தையும்,
                         செயல் அறக் கலங்க,
அறிந்தவர்க்கு அன்றி அறியொணா ஐயன் அவர் துயர்
                         அகற்றுமாறு உரைப்பான்:
211
உரை
   


கண்ணன் ஐவரது துயர் அகலுமாறு உரைத்தல்

'இந்த வேல் கவச குண்டலம் கவர் நாள், இந்திரன் இரவி
                         மைந்தனுக்குத்
தந்த வேல்; இதனை யாவர்மேல் விடினும், தரிப்பு அறத் தெறும்,
                         அவன் வரத்தால்;
உந்த வேல் அமரில் விசயன்மேல் தொடுக்கும் உரக அம்பினுக்கு
                         உயிர் உய்ந்தால்,
அந்த வேலையில், மற்று எறிவதற்கு இருந்தான், ஆற்றலால்
                         கூற்றினும் கொடியோன்.

212
உரை
   

'அலப்படையவனும் அநேகம் ஆயிரம் போர் அரக்கரும்
                         விளியுமாறு அடர்த்தோன்
உலப்பு அடையவும், தான் உய்யவும், அரசன் உரைத்தலால்
                         ஓச்சினன், இவன்மேல்;
வலம் பட முனையில், இன்று உமக்கு அவனி வழங்கினன்,
                         கன்னனே' என்றான்- குலப் பட
அரவின் முடியின்மேல் நடித்த கூத்துடைக் கோவியர் கூத்தன்.
213
உரை
   

தருமனும், மருத்தும், அடல் மருத்துவரும், தந்தவர்
                         மருத்துவான் மகனை,
'பெருமையும் வலியும் நல்வினைப் பயத்தால் பெற்றனம்'
                         என உறத் தழுவி,
அருமையின் அளித்த மகவுடைச் சோகம் ஆற்றி, அங்கு
                         உவகையர் ஆனார்;-
கருமமும் உலகத்து இயற்கையும் உணர்ந்தோர் கலங்குதல்
                         உறுவரோ? கலங்கார்.
214
உரை
   


துரியோதனன் ஏவலால் துரோணன் படையுடன் சென்று
விராடனையும் துருபதனையும் சரங்களால் மாய்த்தல்

இராவணன் படு போர்க் களம் எனக் கிடந்த இந்த வெங்
                         களத்திடை, மீண்டும்
அரா உயர் துவசன் ஆணையால், வரி வில் ஆரியன்
                         அனீகினியுடன் போய்,
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து,
                         அமர் மலைந்து,
தராதிபர் பலரோடு அவ் இருவரையும் சரங்களால்
                         சிரங்களைத் தடிந்தான்.

215
உரை
   


தந்தை மடிய, திட்டத்துய்மன் துரோணன் எதிரே
சென்று, 'நாளை உனைக் கொல்வேன்!' என
வஞ்சினம் மொழிதல்

துருபதன் மடிந்த எல்லையில், திட்டத் துய்மனும் வெகுண்டு,
                         உளம் சுடப் போய்,
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று, வஞ்சினம்
                         எடுத்து உரைத்தான்-
'பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை;
                         உனை நாளை
நிருபர்தம் எதிரே, நின் மகன் காண, நீடு உயிர் அகற்றுவன்!'
                         என்றே.

216
உரை
   


விசயன் வெகுண்டு முனிவனை வென்னிடச் செய்தல்

'மாமனை மகுடம் துணித்தனன், எவரும் வணங்கு தாள் முனி!'
                         என வயிர்த்து,
காமனை அழகும் கந்தனை விறலும் கவர்ந்த வெங்
                         கார்முக வீரன்,
சோமனை வகிர்செய்தனைய வெம் முனைய தொடைகளால்,
                         சுரும்பு சூழ் கமலத்
தாமனை முதுகு கண்டனன், முன்னம் தயித்தியர்
                         முதுகிடத் தக்கோன்.

217
உரை
   


துரியோதனன் சாத்தகி முன் நிற்கலாற்றாது தளர்தல்

பூத்து, அகிக் குலமும், மால் வரைக் குலமும், புகர் இபக்
                         குலங்களும், புகழக்
காத்து, அகிலமும் தன் குடை நிழல் படுத்தும் காவலர்
                         நீதியைக் கடந்தோன்,
சேத்து அகில் புழுகு சந்தனம் கமழும் திருப்புயத்து
                         அணிதரும் திருத் தார்ச்
சாத்தகி முனைச் சென்று, அம் முனைக்கு ஆற்றாது, அரி
                         எதிர் கரி எனத் தளர்ந்தான்.

218
உரை
   


துரியோதனனும் பிறரும் தேர் முதலியன இழந்து பாசறை புகுதல்

அனைவரும் ஒருவர்போல் உடைந்து, அவனி ஆளுடை
                         அரசனோடு, அமரில்
துனை வரு தடந் தேர், துரகதம், களிறு, முதலிய
                         யாவையும் தோற்று,
நினைவு அரு விறலோர் தனித்தனி நெருக்கி நின்றுழி
                         நின்றுழித் துரக்க,
அனைவரும் கழற் கால் கொப்புளம் அரும்ப, ஆசறைப்
                         பாசறை அடைந்தார்.

219
உரை
   


சூரியன் தோற்றம் செய்தல்

முற் பொழுது ஒரு பொன்-திகிரியால் மறைந்த தாழ்வு அற,
                         மூள் எரி முகத்தில்
அற் பொழுது அடைந்த ஆயிரம் சுடரும் அநேக
                         நூறாயிரம் சுடர் ஆய்,
'நற் பொழுது இது' என்று யாவரும் வியப்ப, நாகர்
                         ஆலயம் வலம் புரிந்து,
பிற் பொழுது அவற்றைக் கவர்ந்து சென்று, உதயப் பிறங்கலில்
                         பிறங்கினன் பெரியோன்.

220
உரை