பக்கம் எண் :

10பாரதம்ஆதி பருவம்

5.பத்திரட்டியிலீரிரண் டொழிந்தபல்கலையோன்
மித்திரற்கவைகொடுத்து முன்மீளவுங்கவர்வோன்
அத்திரிப்பெயரந்தணனம்பகந்தனிலும்
சித்திரக்கனன்முகத்தினும்பிறந்தொளிசிறந்தோன்.

     (இ - ள்.) (அன்றியும் அவன்),- பத்து இரட்டியில் - இருபது என்னும்
எண்ணில்,ஈர் இரண்டு ஒழிந்த - நான்குகுறைந்த[பதினாறாகிய], பல்கலையோன்-
பலவானகலைகளை யுடையவன்: மித்திரற்கு - சூரியனுக்கு, அவை - அந்தப்
பதினாறுகலைகளையும், முன்-, கொடுத்து-, மீளஉம் - மறுபடியும், கவர்வோன் -
பெற்றுக்கொள்பவன்: அத்திரி பெயர் அந்தணன் - அத்திரியென்ற பெயரைக்
கொண்டஅந்தணாளனுடைய, அம்பகந்தனில்உம் - கண்ணிலும், சித்திரம் கனல்
முகத்தின்உம் -விசித்திரமான (கிரணங்களையுடைய) அக்கினியின் முகத்திலும்,
பிறந்து-, ஒளிசிறந்தோன் - ஒளிவிஞ்சியிருப்பவன்; (எ - று.)

     சந்திரன் தனது கலைகளைத் தேய்பிறையில் தினம்ஒவ்வொன்றாகச்
சூரியனுக்குக்கொடுத்து, அமாவாசையில் அக்கடவுளோடு ஒன்றியிருந்தது,
வளர்பிறையில் தினம்ஒவ்வொன்றாக அக்கலைகளைக் கொள்கின்றானென்பது
ஒருசார் நூற்கொள்கை.அத்திரிமுனிவரின் விழியினிற் சந்திரன் தோன்றிய
வரலாறு:-
உபப்பிரமராகியஅத்திரி முனிவர் இந்திரியநிக்கிரகஞ் செய்து
மூவாயிரம்வருடம் தவம்புரிகையில்,தேஜோரூபியாகிய அவருடைய
கண்களிலிருந்து பத்துத்திக்குக்களிலும் பேரொளிவீசிக்கொண்டு நீர் பெருகவே,
அந்தக் கருப்பத்தைத் திக்தேவிகள் பதின்மரும்வகிக்கத்தொடங்கிப் பின்பு
தங்களாற் பொறுக்கமுடியாமல் சந்திரரூபமான அந்தக்கருப்பத்தோடு பூமியில்
விழ, அப்பால் நான்முகக்கடவுள் அந்தச் சந்திரனைவேதமயமான தேரின்மீது
ஏற்ற, ஸப்தரிஷிகள் வேதவாக்கியங்களைக் கொண்டுதுதித்ததனால் அச்சந்திரன்
மிக்க ஒளிபெற்று உலகத்துக்குப் பேரொளியைத்தருபவனாயின னென்பதாம்.
இங்குக்கூறிய சந்திரன்பிறப்பினுள் நெருப்பினின்றுதோன்றிய வரலாறு
தெரியவில்லை: வந்தவிடத்துக் கண்டுகொள்க. சித்திரக்கனல்முகத்து என்பதற்கு -
ஒருசார் விசித்திரமான சோதியையுடைய சூரியனிடத்து என்றுகூறுவாராயினும்,
"மித்திரற்கவைகொடுத்து முன் மீளவும் கவர்வோன்" என்றதையேகுறிப்பதாகு
மாதலாற் கூறியதுகூறலாம். மித்திரர்க்கு என்று பாடமாயின், நண்பராகிய
தேவர்கட்கு என்று பொருளாம்.                                 (13)

6.- சந்திரனுக்குப்புதல்வனாகப் புதன் பிறந்தமை.

அந்தியாரணமந்திரத் தன்புடனிவனை
வந்தியாதவர்மண்ணினும் வானினுமில்லை
புந்தியாலுயர்புதனெனும் புதல்வனைமகிழ்வால்
தந்தியாவருங்களிப்புற விருக்குநாடன்னில்.

இரண்டுகவிகள் - ஒருதொடர்.

     (இ - ள்.) அந்தி - மாலைப்போதில், ஆரணம்மந்திரத்து -
வேதமந்திரத்தால்,அன்புடன் - அன்போடு, இவனை - இந்தச்சந்திரனை,