பக்கம் எண் :

100பாரதம்ஆதி பருவம்

பினால் பூ திரு - அழகினால் மலரிலுறைபவளாகிய இலக்குமியும், புனை கற்பால் -
அலங்காரத்தையுண்டாக்குகின்ற கற்பினால், அந்தி வாய் அருந்ததி - இராக்காலத்துத்
தோன்றும் வட மீனாகிய அருந்ததியும், பெரும் பொறையினால் - மிக்க
பொறுமையினால், அவனிமான் - பூமிதேவியும், நிகர் - ஒப்பாவள், ' என்ன - என்று
(பலரும்) சொல்லிக் கொண்டாடவும், குருகுலம் தழைத்து ஓங்க - குருகுலம் செழித்து
வளரவும், குந்திபோசர் இல் வந்து - குந்திபோசனென்பானுடைய இல்லத்திலே
(அவனுக்கு ஸ்வீகார புத்திரியாக) வந்து,  பிரதை என்று யாவர்உம் அடி தொழ -
பிரதை யென்றுபாராட்டி யாவரும் வணங்கித்தொழ, மதி என - பிறைச்சந்திரன்போல,
வளர்கின்றாள் - வளர்பவளானாள்; (எ-று.)

     அத்தைகுமாரனான குந்திபோசனுக்கு மகவில்லாக்குறையைப் போக்க,
யதுகுலத்துத்தோன்றலான சூரனென்பவன் தன் பெண்ணான பிரதை யென்பவளை
வளர்க்குமாறு கொடுத்தான் : அவளே குந்திபோசனால் வளர்க்கப்பட்டதுபற்றி,
குந்தியென்று வழங்கப்படுவாளாயினாள்.                              (180)

26.- குந்தி அங்கு அரண்மனைவந்த துருவாசமுனிவனுக்கு
வளர்ப்புத்தந்தையின் சொற்படிகுற்றேவல்புரிதல்.

அந்தமாதிளமடமயிலெனவிளை யாடுமெல்லையிலென்றும்
முந்தமாதவம்புரிதுருவாசமா முனியுமவ்வழிவந்தான்
வந்தமாதவனடிபணிந்திவனைநீ வழிபடுகெனத்தந்தை
இந்தமாதவன்மொழிப்படிபுரிந்துகுற் றேவலின்வழிநின்றாள்.

     (இ-ள்.) அந்த மாது - அந்தப்பிரதையென்பவள், இள மடம் மயில் என -
இளமையையுடைய மடப்பங்கொண்ட மயில்போல, விளையாடும் எல்லையில் -
விளையாடுகின்ற காலத்தில்,- என்றுஉம் முந்த மாதவம் புரி - எப்போதும்
(யாவரினும்)மேற்படச் சிறந்த தவத்தைச் செய்பவனான, துருவாசமாமுனிஉம் -
துருவாசமுனிவனும்,அ வழி - அவ்விடத்து, வந்தான்-; தந்தை - குந்திபோசன்,
வந்த - (அங்கனம்) வந்த,மா தவன் - பெருந்தவத்தனான துருவாச முனிவனுடைய,
அடி - பாதங்களை, பணிந்து - வணங்கி, 'நீ இவனை வழிபடுக -நீ இவனை
உபசரிப்பாயாக', என - என்று(பிரதையென்பாளைநோக்கிச்) சொல்ல,- இந்த
மாதவன் மொழி படி - இந்தத்துருவாசமாமுனிவன் கூறுகின்ற மொழியின்வழியே,
புரிந்து - பணிவிடைசெய்துகொண்டு, குறு ஏவலின்வழி - (அவனுடைய) சிறிய
ஏவலின்வழியிலேயே,நின்றாள் - நடந்துகொண்டாள்; (எ-று.)          (181)

27.- முனிவனுடைய குற்றேவலில் மனம்பதிந்த பிரதை, தன்
இளமையாடலை மறத்தல்.

கழங்குகந்துகமம்மனையாடலுங் கனகமென்கொடியூசல்
வழங்குதண்புனலாடலுந்துறைவரி வண்டலாடலுமாறி
முழங்குசங்கினந்தவழ்தருபனிநிலா முன்றிலுஞ்செய்குன்றும்
தழங்குசெஞ்சுரும்பெழுமலர்ச்சோலையுந் தனித்தனிமறந்திட்டா[ள்.

     (இ - ள்.) கழங்கு கந்துகம் அம்மனை ஆடல்உம் - கழற்சிக்காய் பந்து
அம்மானை என்ற இவற்றை யாடுவதையும், கனகம் மெல்